Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை!
இளம் வயது ஆண்கள் அவர்களை விட வயதில் மூத்த பெண்ணை காதலிக்க காரணம் என தெரியுமா? இந்த 5 விஷயங்கள்தான்...!
காதலுக்கு ஜாதி, மதம், பொருளாதாரம் மட்டுமல்ல வயதும் ஒரு பிரச்னை இல்லை என்று கூறப்பட்டாலும், தம்பதியரில் ஆண் வயது முதிர்ந்தவராக இருப்பதே நல்லது என்ற பிம்பம் சமூகத்தில் நீண்ட காலமாக உள்ளது. கடந்த காலங்களில் நம் நாட்டில் பத்து முதல் பதினைந்து வயது அதிகமான ஆண்களைத்தான் பெண்கள் திருமணம் செய்து கொள்வார்கள். நம் குடும்பத்திலேயே நாம் இதை பார்த்திருப்போம். ஆனால் இன்று எல்லாம் மாறிவிட்டது. ஒரு வயது அல்லது இரண்டு வயது வித்தியாசம் உள்ளவர்கள் மற்றும் சில சமயங்களில் ஒரே வயதுடையவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ஒரு ஆண் தன்னை விட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது அரிதான பழக்கமாக இருக்கிறது. ஆனால் பல திரைபிரபலங்கள் இதை இப்போது செய்வதால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த போக்கு அதிகரித்து வருகிறது. காதலிக்கும் பெண் மற்றும் ஆணின் வயது தனிப்பட்ட விஷயம். இருப்பினும், சில ஆண்கள் வயதான பெண்களிடம் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். அதற்கு பல காரணங்கள் உள்ளன.
திருமணம், ஒன்றாக வாழ்வது அல்லது காதல் போன்றவற்றுக்கு தம்பதிகளிடையே இணக்கம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவை மிக முக்கியமான விஷயம். ஒரு ஆண் ஒரு வயதான பெண்ணிடம் ஈர்க்கப்படலாம், ஏனென்றால் அவர் ஒரு துணையிடம் எதிர்பார்க்கும் ஆளுமை மற்றும் பிற குணங்களைக் அவர்களிடம் காணலாம். வயது முதிர்ந்த பெண்களின் மீது ஆண்கள் ஈர்ப்பு கொள்ள காரணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முதிர்ச்சி
முதிர்ச்சியும், அமைதியுடன் விஷயங்களைச் சமாளிக்கும் திறனும் சில ஆண்களை தன்னை விட வயதில் மூத்த பெண்ணிடம் ஈர்க்கின்றன. இத்தகைய பெண்களின் சிறந்த தகவல் தொடர்புத் திறனும், மற்றவர்களின் எண்ணங்களை தெளிவாக நம்ப வைக்கும் திறனும் ஆண்களை எளிதில் ஈர்க்கும். ஏனெனில் ஒரே வயதுள்ள அல்லது வயது குறைவான பெண்கள் எந்தவொரு விஷயத்திலும் பதட்டத்துடனும், பொறுமையின்றியும் முடிவெடுப்பவராக இருப்பார்கள்.
நம்பிக்கை
தன்னம்பிக்கை மற்றும் உறுதியான குணம் உள்ள பெண்களிடம் ஆண்கள் எளிதில் ஈர்க்கப்படலாம். நம்பிக்கை உருவாவதற்கு வயது ஒரு தடையல்ல. தன்னம்பிக்கை ஒரு நபரை பாதுக்காப்பாக உணரவைக்கிறது மற்றும் அவர் வேறொருவருக்காக மாற்ற வேண்டியதில்லை என்ற கண்ணோட்டத்தை அவர்களுக்கு அளிக்கிறது. தன்னம்பிக்கை மிக்க பெண்கள் தங்களை விட்டு எப்போதும் விளக்க மாட்டார்கள் என்று ஆண்கள் நினைக்கிறார்கள்.
சுதந்திரம்
சுதந்திரத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி வாழ விரும்புகிறார்கள். இதைத்தான் பெரும்பாலானோர் தங்கள் காதல் உறவுகளிலும் விரும்புகிறார்கள். எனவே சில ஆண்கள் வயதான பெண்களுடன் டேட்டிங் செய்ய விரும்புகிறார்கள் மற்றும் அவர்களின் சொந்த விஷயங்களையும் சுதந்திரத்தையும் மதிக்கிறார்கள்.
வெளிப்படையாக பேசும் இயல்பு
எதையும் மறைக்க அவசியமில்லாத வெளிப்படையான உறவிற்காக ஆண்கள் தன்னை விட வயதில் மூத்த பெண்களை காதலிக்கிறார்கள். வயதில் மூத்த பெண்கள் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும், அனுபவிக்கவும் தயாராக இருக்கிறார்கள். ஆண்களுக்கு இந்த பண்பு கவர்ச்சிகரமானதாக இருக்கலாம்.
புத்திக்கூர்மை
சில பெண்களின் புத்திக்கூர்மையும், உறவுகளின் சிக்கல்களைச் சமாளிக்கும் திறன், இளைய ஆண்களையும் அவர்களிடம் ஈர்க்கும். இது எல்லோருக்கும் இருக்கும் திறன் அல்ல. ஒரு ஆண் தன்னை விட வயதில் மூத்த மற்றும் அதிக அனுபவமுள்ள ஒரு பெண்ணுடன் இருக்கும்போது, ஒரு ஆணால் மற்றவர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ஆழமாக புரிந்து கொள்ள முடியும். அத்தகைய பெண்கள் லாஜிக்காக விஷயங்களைக் கையாளுகிறார்கள்.
இந்த குணாதிசயங்களைக் கொண்ட வயதான பெண்கள் இளம் ஆண்களை ஈர்ப்பார்கள். அவர்களின் உறவு பரஸ்பர புரிதல், நம்பிக்கை, முதிர்ச்சி மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வலுவாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
