Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 5 துறைகளில் வேலை செய்யும் ஆண்கள் கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்பிருக்காம்...இவங்ககிட்ட உஷாரா இருக்கணும்!
தற்போதைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கையில் நேர்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பது என்பது மிகவும் அரிதானதாக மாறிவருகிறது. நவீன வாழ்க்கை முறையும், திருமண உறவு பற்றிய போதிய புரிதலின்மையும் உறவுகளில் பல்வேறு வழிகளில் பாதிக்கின்றன. குறிப்பாக திருமணம் மீறிய உறவுகளால் பல்வேறு திருமணங்கள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன.
வேலை செய்யுமிடத்தில் தங்கள் துணையை ஏமாற்றுவது என்பது ஆச்சரியமளிக்கும் வகையில் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் சில தொழில்கள் புள்ளிவிவரரீதியாக மற்றவர்களை விட தங்கள் துணையிடமிருந்து விலகிச் செல்ல அதிக வாய்ப்புகளை அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுகளின் படி தோராயமாக 85 சதவீத கள்ளக்காதல் வழக்குகள் பணியிடத்தில்தான் தொடங்குகின்றன, ஐந்து ஊழியர்களில் ஒருவர் சக ஊழியரிடம் திருமண தாண்டிய உறவில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

விசுவாசம் என்பது வேலைகளைத் தாண்டி தனிநபர் ஒழுக்கம் சார்ந்தது. ஆண்களைப் பொறுத்தவரை இந்த குறிப்பிட்ட வேலைகள் அவர்களை எளிதில் கள்ள உறவில் விழ வைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதிலும் ஒழுக்கமாக இருக்கும் ஆண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு எந்தெந்த வேலையில் இருப்பவர்கள் எளிதில் கள்ள உறவில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
விமானிகள் மற்றும் விமானக் குழுவினர்
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் விமானப் பணியாளர்கள். வீட்டிலிருந்து நீண்ட நேரம் விலகி இருப்பது, வெவ்வேறு கலாச்சாரம் சார்ந்த நகரங்களில் வசிப்பது மற்றும் விமானப் பயணங்களுக்குப் பிறகு நிம்மதியான சூழல் ஆகியவை அவர்களின் நேர்மை மற்றும் விசுவாசத்தை சோதனைக்கு உள்ளாக்குகிறது. ஒரு ஆய்வில், 5 விமானிகளில் 1 நபர் வேலை தொடர்பான பயணத்தின் போது தங்கள் துணைக்கு துரோகம் செய்வதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் மருத்துவப் பணியாளர்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. முடிவில்லா ஷிப்டுகள், இரவுப் பணிகள் மற்றும் மருத்துவமனையில் நிகழும் மன அழுத்தம் ஆகியவை சக ஊழியர்களிடையே பிணைப்பை வலுப்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகிறது. 23% சுகாதாரப் பணியாளர்கள் பணியிடத்தில் தங்கள் துணைக்கு துரோகம் செய்ததாக ஒப்புக்கொண்டதாக ஒரு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பொழுதுபோக்கு மற்றும் ஊடகத்துறை
நடிகர்கள், இசைக்கலைஞர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் Influencerகள் பெரும்பாலும் ரசிகர்கள் மற்றும் வாய்ப்புகளால் சூழப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான சமூக தொடர்புகளும், துடிப்பான வாழ்க்கை முறையும் அவர்களை தொழில் வாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கையும் இடையில் உள்ள கோடுகளை மறக்கச் செய்யும்.
வங்கிப் பணியாளர்கள் மற்றும் நிதி வல்லுநர்கள்
அதிகம் பணம் புரளும் துறையான இந்த துறையில் கள்ள உறவு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. கார்ப்பரேட் நிகழ்வுகள், வணிக விருந்துகள் மற்றும் அதிக மன அழுத்த நிலைகள் அவர்களின் வீடுகளில் கிடைக்காத நிம்மதி மற்றும் மகிழ்ச்சியை வேறொருவரிடம் தேடுவதற்கு வழிவகுக்கும்.
காவல்துறை
எப்போதும் பரபரப்பாக இருக்கும் பணிசூழல் மற்றும் சக ஊழியர்களிடையே இருக்கும் தீய்வரா நட்புறவு போன்றவை அவர்களின் தொடர்புகளை வலுப்படுத்துகின்றன. நெருக்கடியான சூழ்நிலைகளில் நீண்ட மாற்றங்கள் மற்றும் உணர்ச்சிபூர்வமான நெருக்கம் ஆகியவை எல்லையைக் கடப்பதை எளிதாக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
