Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க -
இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்! -
நாகர்கோயில் வாழைக்காய் துவட்டல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உங்கள் காதலி எப்பவும் கோபப்பட்டுக்கிட்டே இருக்காங்களா? இப்படி பண்ணுங்க அவங்கள ஈஸியா சமாளிக்கலாம்...!
கோபம் ஒரு இயற்கையான மனித உணர்வாகும். நியாயமான காரணங்களுக்காக கோபப்படுவது எப்போதும் தவறில்லை. கோபத்தை உணரவும், அதனை வெளிப்படுத்தவும் ஒருபோதும் தயங்கக்கூடாது. காதல் உறவில் அடிக்கடி கோபம் கொள்வது மிகவும் சகஜமானதுதான்.
கோபம் நியாயமான காரணத்திற்காகவும், பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் இருக்கும் வரை உறவுகளில் அதனை அனுமதிக்கலாம். ஆனால் உங்களின் கோபம் உங்கள் துணையை கடுமையாக பாதிக்கும் வகையில் இருந்தால் நிச்சயம் அதனை குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை உங்கள் துணை நியாயமில்லாத வகையில் மோசமாக உங்களை கோபத்தால் துன்புறுத்தினால் நிச்சயம் அதனை சமாளிப்பது கடினமாக இருக்கும். உங்கள் துணை உங்களிடம் இந்த வகையில் நடந்து கொண்டால் அவர்களை எப்படி சமாளிப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் கோபம் கொள்ளக்கூடாது
உங்கள் துணை கோபமாக இருக்கும்போது அவர்கள் உங்களின் வார்த்தைகளுக்கு ஒத்துழைக்காதவர்களாக இருக்கலாம். உங்கள் துணை கோபமாக இருக்கும் போது பதிலுக்கு நீங்களும் கோபம் கொள்வது புத்திசாலிதமானதாக இருக்காது, உங்கள் துணையை கோபமாக இருக்க அனுமதிப்பது நல்லது, சிறிது நேரத்திற்கு பிறகு அவர்களாகவே அமைதியாகிவிடுவார்கள். நீங்கள் எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களோ, அவ்வளவு விரைவாக அவர்களின் கோபம் குறையும்.
வார்த்தைகளில் கவனமாக வேண்டும்
உங்கள் துணையிடம் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் எப்போதும் கவனமாகவும் பொறுமையாகவும் இருங்கள். உங்கள் துணை கோபமாக இருக்கும் போது நிலைமையை மோசமாக்கும் எதையும் நீங்கள் கூறக்கூடாது. உங்கள் துணையை மேலும் கோபபடுத்தாமல் இருக்க, நடுநிலையான வார்த்தைகளைப் பயன்படுத்த முயற்சிக்கவும்.
உங்களின் செயல்பாடுகள் பற்றி சிந்தியுங்கள்
உங்கள் துணையின் கோபத்தைத் தூண்டும் அல்லது மோசமாக்கும் படி நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். உங்கள் ணையின் இயல்பான குணமே அதுதானா அல்லது உங்களின் செய்லபாடுகளால் அவர்கள் கோபம் கொள்கிறார்களா என்பதை சிந்தியுங்கள். எந்தவித நியாயமும் இல்லாமல் உங்களின் மீது பொய்யான குற்றம் சாட்டினால் நீங்கள் உங்கள் உறவை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரமிது.
பொறுமையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்
பெரும்பாலும் கோபத்திற்கான அடிப்படைக் காரணமாக பயம், சோகம் அல்லது வலி போன்ற ஆழமான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய உணர்ச்சிகள் உள்ளன, அவர்கள் எந்த உணர்ச்சிகளால் அடிக்கடி கோபம் கொள்கிறார்கள் என்பதை சிந்தியுங்கள். ஒருவேளை உங்கள் துணை இந்த உணர்வுகளால் கோபப்பட்டால் அவர்களிடம் கருணைக் காட்டுங்கள்.
அந்த இடத்தை விட்டு நகருங்கள்
உங்கள் துணையின் கோபம் அவர்களாலும், உங்களாலும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்றால் உடனடியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள். ஏனெனில் அந்த தருணத்தில் நீங்கள் பேசும் வார்த்தைகள் உங்கள் துணையால் தவறாக புரிந்து கொள்ளப்படும். இது பிரச்சினைகளை மேலும் பெரிதாக்கும்.
உங்கள் நிலையை விளக்கவும்
உங்கள் துணையின் உணர்ச்சி நிலை அதிகமாக இருக்கும்போது, அவர்களின் அறிவாற்றல் நிலை பாதிக்கப்படலாம். கோபம் ஆதிக்கம் செலுத்தும் வரை உங்கள் பிரச்சினையைப் பற்றி உங்கள் துணையுடன் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. உங்கள் துணையின் கோபம் குறைந்தவுடன் அவர்கள் கோபத்தில் எப்படி நடந்து கொண்டார்கள், அதனால் நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டிர்கள் என்பது அவர்கள் புரிந்து கொள்ளும்படி விளக்குங்கள்.



Click it and Unblock the Notifications

