Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
காதல் குறித்த ஆச்சரியமூட்டும் இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?
காதல்... தலைமுறை தலைமுறையாக உணர்வுப் பிணைப்பாக நின்று கொண்டிருக்கிறது. அன்புதான் மக்களை நெருக்கமாக்குகிறது மற்றும் அவர்களுக்கிடையேயான பிணைப்பை வலுப்படுத்துகிறது. இந்த அன்பு இல்லாமல், இரத்த உறவு இல்லை.
அனைவரின் நம்பிக்கையின்படி, அன்பு என்பது அளவிட முடியாத ஒன்று. ஒரு தாய் தன் குழந்தைகளின் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள் என்று எப்படி சொல்ல முடியும்? எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்தும் குழந்தையைப் பாதுகாப்பது தாயின் பொறுப்பு. காதலைப் பற்றி மனதை இழக்கச் செய்யும் பல விஷயங்கள் உள்ளன.

தாய்க்கும் சேய்க்கும் உள்ள பந்தமே அன்பு... ரத்த சொந்தங்கள் மத்தியில் அன்பு பாசம் பொங்கி வழிகிறதா.. உண்மையைச் சொன்னால், பல சமயங்களில், எதிர்பாராத நபர்களிடையே காதல் பிறக்கும். இந்த காதல் தான் ஒரு ஜோடியை ஒன்றிணைத்து அவர்களை இணைக்கிறது. இந்தக் காதல்தான் திருமணத்தை வருடக்கணக்கில் நீடிக்கச் செய்கிறது. அதன் பிறகு எல்லாம் குடும்பத்தில் இருந்து தொடங்குகிறது. பூமியில் வாழும் இந்த குறுகிய காலத்தில் அன்பைப் பெறுவதும் கொடுப்பதும் அதிர்ஷ்டமாக கருதப்பட வேண்டும். காதல் பற்றி தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இது தொடர்பான 8 ஆச்சரியமான உண்மைகளை பற்றி இப்போது பார்ப்போம்..
1. நீண்ட கால காதல்..
பசியையும் தாகத்தையும் கட்டுப்படுத்த முடியாதது போல, அன்பையும் விரும்புவதையும் கொடுப்பதையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பெரும்பாலான ஆண்கள் நீண்ட கால காதல் ஆசைகளை பூர்த்தி செய்வதை விட நேசிப்பதே முக்கியம் என்று கருதுகின்றனர்.
2. காதலை மறைப்பது மிகவும் கடினம்
மற்றவர்களிடமிருந்து எந்தப் பற்றுதலையும் மறைப்பது மிகவும் கடினம். இந்திய சமூகத்தில் காதலை மறைப்பது அதைவிடக் கடினம் என்று சொல்லலாம். இப்படி உலகத்திடம் இருந்து நம் உறவை மறைப்பதன் மூலம், நம் துணையுடன் அதிக காதல் உணர்வுகளை ஏற்படுத்துகிறோமே தவிர அது குறையாது..
3. அன்பில் நன்றியுணர்வு
அன்பு, காதல் சிறுவயதிலிருந்தே நமக்கு நல்லது செய்யும் ஒருவருக்கு நன்றியுடன் இருக்க கற்றுக் கொடுக்கும். நம்மீது அன்பு காட்டுபவர்களிடம் நாமும் அவ்வாறே செய்ய வேண்டும். நம் மீது அன்பு காட்டுபவர்களுக்கு நன்றி செலுத்தினால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பது சொல்லப்படாத உண்மை.
4. ஒரு புதிய உணர்வு
காதலில் விழும் நபர் உணர்ச்சிகள் மற்றும் ஹார்மோன்களின் அடிப்படையில் மாற்றங்களுக்கு உட்படுகிறார். செரோடோனின் அளவு குறைவதைக் காணலாம். இது ஒசிடி காதலில் இருப்பவர்கள் தங்கள் துணை தங்களுக்கு சொந்தமானது என்று உணர்கிறார்கள்.
5. ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்
ஒரு வலிமையான ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணுடன் ஒப்பிடும்போது காதலிக்கும் ஆண் மிகவும் பலவீனமானவன். அதனால்தான் தம்பதிகள் பிரிந்தால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் ஆண்கள்தான். அதிலும் 20களில் இருப்பவர்களுக்கு பாதிப்பு அதிகமாகவே இருக்குமாம்..
6. முதல் பார்வையில்..
திடிரென்று ஒருவரை சிறிது நேரம் உற்றுப் பார்ப்பது நமக்குள் சில ஹார்மோன்களை வெளியிடுகிறது. இது முதல் பார்வையில் காதலா? இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆம் முதல் பார்வையில் காதல் என்ற கருத்து ஒரு கட்டுக்கதை அல்ல. உணமைதானாம்..
7. அன்பு அனைத்தையும் ஜெயிக்கும் சக்திக் கொண்டது
யாராவது பணிநீக்கம் செய்யப்பட்டால், அவர்கள் விரக்தி அடைய வாய்ப்புள்ளது. யாரேனும் கொஞ்சம் அன்புடன் காட்டினால் , அவர்கள் காதலில் விழுவார்கள். பாசத்தில் மனதை மாற்றிக்கொள்வார்கள். அன்புக்கும் காதலுக்குமொருவரின் மரணத்தைக்கூட வெல்லும் பவர் உள்ளது..
8. உடல் வலி நீங்கும்
அன்புக்குரியவர்களின் கைகளைப் பிடிப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும். இது விசித்திரமாகத் தோன்றலாம் ஆனால் அது உண்மைதான். இதுவே முடியாத பட்சத்தில் நம் அன்புக்குரியவர்களின் புகைப்படத்தைப் பார்த்தாலும் மன அழுத்தமும் வலியும் மறைந்துவிடும். பல வகையான உடல் வலிகளை மட்டுமின்றி, மன உளைச்சலையும் குறைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். அம் இது மருத்துவ ரீதியாகவும் நிருபிக்கப்பட்டுள்ளது.. நாம் ஒருவர் மீது வைத்துள்ள காதலுக்கும் அன்புக்கும் அவ்வளவு சக்தி உள்ளது..



Click it and Unblock the Notifications
