Latest Updates
-
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க..
உங்க துணையிடம் இப்படி நடந்துக்கிட்டா அவங்க உங்களை அமைதியா டார்ச்சர் பண்ண ஆசைப்படுறாங்களாம்...!
நட்பாக இருந்தாலும் சரி, காதல் உறவாக இருந்தாலும் சரி சில சமயங்களில் நம் உடனிருப்பவர்களின் மௌனத்தால் புறக்கணிக்கப்படும் சூழலை நாம் சந்திக்கிறோம். இது பல்வேறு காரணங்களால் நிகழலாம், கோபம் அல்லது கடந்த கால சண்டைகளின் விளைவாக இது நிகழலாம். இருப்பினும், இது உணர்ச்சிரீதியாகவும் மனரீதியாகவும் நம்மை பாதிக்கலாம்.
குறிப்பாக எதற்காக இப்படி நடத்தப்படுகிறோம் என்று தெரியாத போது அது மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அமைதியான டார்ச்சர் என்பது ஒருவருடன் வாய்மொழியாக தொடர்பு கொள்ள மறுப்பது மற்றும் பெரும்பாலும் தண்டிக்க அல்லது கட்டுப்படுத்துவதற்கான வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆரோக்கியமான எல்லைகளை அமைப்பதில் தவறில்லை மற்றும் சிறிது இடைவெளி அல்லது ஓய்வு எடுக்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை, ஆனால் இது மிகவும் வித்தியாசமானது. இந்த விஷயங்கள் விரைவில் மாற்றப்படவில்லை என்றால், இது ஒட்டுமொத்த உறவையும் அழித்துவிடும். உங்கள் துணை உங்களின் அமைதியாக டார்ச்சர் செய்கிறார்கள் என்பதன் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
புறக்கணித்தல்
நாம் நேரத்தை செலவிட விரும்பும் நபர்கள் நம்மை புறக்கணிப்பதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். நம்மிடம் பேச மறுப்பதில் இருந்து காது கேளாதது போல நடந்து கொள்வது வரை இந்த புறக்கணிக்கும் செயல்கள் மாறுபடலாம்.
மௌனத்தால் தண்டிப்பது
சில சமயங்களில் மௌனம் ஆறுதல் தரும், ஆனால் பல சமயங்களில் தண்டனையாக இருக்கும். என்ன காரணம் என்று புரியாமல் நீண்ட நேரம் நம் அன்புக்குரியவர்கள் நம்மிடம் மௌனமாக இருப்பது அவர்கள் நம்மை தண்டிக்கும் உணர்வை ஏற்படுத்தும்.
மற்றவர்களுடன் அதிகமாக பேசுவது
அவர்கள் மற்றவர்களுடன் அதிகமாக உரையாடுவார்கள், ஆனால் உங்களுடன் பேசுவதைத் தவிர்ப்பார்கள். அவர்கள் மற்றவர்களுடன் நன்றாக நடந்து கொள்ளத் தொடங்கும் போது, நம்மை புறக்கணிக்கும் அமைதியான டார்ச்சரைப் பெறுகிறோம். நம் மீது கோபமாக இருக்கும் போது அமைதியாக இருக்கவும் நம்முடன் தூரத்தை பராமரிக்கவும் தேர்வு செய்கிறார்கள்.
பேசும் முயற்சிகள் வீணாவது
அவர்களுடன் பேசுவதற்கும் விஷயங்களைத் தெளிவுபடுத்துவதற்கும் நாங்கள் உண்மையாக முயற்சிகளை மேற்கொள்ளும் போது, அவர்கள் அதனை தவிர்த்து விலகி இருக்கத் தேர்வுசெய்து நம்முடன் பேச மறுப்பார்கள்.
பிஸியாக இருப்பது போல நடிப்பது
எப்போதும் ஏதாவது வேலை இருப்பது போலவே நடந்து கொள்வார்கள். நாம் பேச முயற்சித்தாலோ அல்லது நெருங்கி செல்ல முயற்சித்தாலோ அவர்கள் பிஸியாக இருப்பது போலவும், வேலையில் மூழ்கி இருப்பது போலவும் நடந்து கொள்வார்கள்.



Click it and Unblock the Notifications


