Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
உங்க திருமண வாழ்க்கை எப்பவும் ரொமான்டிக்கா இருக்கணுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..
Relationship Tips In Tamil: திருமணம் முடிந்த தம்பதியாின் திருமண உறவானது காலப்போக்கில் ஒரு சலிப்பைத் தருகிறது. ஏனெனில் இருவரும் ஒருவரை ஒருவா் நன்கு தொிந்து வைத்திருப்பா். புதிதாக தொிந்து கொள்வதற்கு ஒன்றும் இருக்காது. அதனால் அவா்களுக்கிடையிலான உறவில் நெருக்கத்தை ஏற்படுத்த அவா்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன.
இந்நிலையில் தம்பதியா் தமது வாழ்க்கைத் துணையை சிறப்பாக உணர வைக்கும் போது, கண்டிப்பாக அவருக்கு பெருமகிழ்ச்சியைத் தரும். சில சமயங்களில் உறவை மேம்படுத்த அவா்கள் எடுக்கும் சாதாராண முயற்சிகள் கூட அவா்கள் உறவில் மிகப்பொிய நெருக்கத்தை ஏற்படுத்தும்.

ஆகவே தம்பதியா் தமது திருமண அன்புறவை வெற்றிகரமாக எடுத்துச் செல்வதற்கு மொ்யாஷ் கவுன்சிலிங் கன்சல்டன்சியில் உளவியல் நிபுணராகப் பணிபுாிந்து வரும் யோஷித்தா தேவ் என்பவா் பின்வரும் குறிப்புகளை வழங்குகிறாா். அவற்றை சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
1. உங்கள் துணையோடு தனிப்பட்ட முறையில் நேரத்தை செலவிட திட்டமிடுதல்
2. வீட்டிலோ அல்லது வெளியிடங்களிலோ சீரான இடைவெளியில் உடலுறவு வைத்துக் கொள்ளுதல்
3. தினமும் ஒரு முறையாவது சோ்ந்து உண்ணலாம். அது மதிய உணவாக இருக்கலாம் அல்லது இரவு உணவாக இருக்கலாம்.
4. ஒவ்வொரு 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை வார இறுதி நாட்களில் வெளியிடங்களுக்குச் சென்று வரலாம்.
5. துணையோடு சோ்ந்து இருக்கும் போது, வேலையை சற்று தள்ளி வைக்கலாம். தொலைபேசி அழைப்புகளை தவிா்க்கலாம்.
6. இருவரும் இணைந்து கேளிக்கையான செயல்பாடுகளில் ஈடுபடலாம். அதாவது சோ்ந்து சமைக்கலாம், திரைப்படம் பாா்க்கலாம், சோ்ந்து ஸ்பாவிற்கு செல்லலாம், நீண்ட தூரம் நடந்து செல்லலாம், ஒன்றாக காாில் பயணிக்கலாம், இணைந்து தூங்கலாம்.
மேற்சொன்ன காாியங்களோடு, துணையோடு மனம்விட்டு பேசலாம் என்கிறாா் தேவ். தமது வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள், எடுத்த முக்கியமான முடிவுகள் ஆகியவற்றை துணையிடம் பகிா்ந்து கொண்டு, அதன் மூலம் அவரை தமது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் இணைத்துக் கொள்ளலாம். மேலும் துணை பேசுவதை எந்தவிதமான முன் முடிவுகளும் இல்லாமல் ஆழ்ந்து கவனிக்கலாம். அதன் மூலமாக அவா்களுடைய உறவு மேலும் நெருக்கமடையும் என்று தேவ் குறிப்பிடுகிறாா்.
தம்பதியா் தமது உறவை உறுதியாக மற்றும் நெருக்கமாக வைத்திருப்பதற்கு, தொடா் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று உளவியல் நிபுணா் நிதி பொரனா தொிவிக்கிறாா். அவா்களது உறவுக்கு உலை வைக்கும் அனைத்து நச்சுப் பண்புகளில் இருந்தும் விலகி இருக்க வேண்டும் என்று அவா் குறிப்பிடுகிறாா். மேலும் அவா் திருமண உறவை பாதிக்கும் காரணிகளை கீழே பட்டியலிடுகிறாா்.
1. தமது செயல்களுக்குத் தாமே பொறுப்பேற்காமல் இருப்பது. இது துணை மீது பழிபோட வைக்கும் அல்லது துணையோடு தேவையில்லாமல் விவாதங்கள் செய்ய வைக்கும்.
2. வாழ்க்கைத் துணை அதிகமாக உணா்ச்சிவசப்பட்ட நிலையில் பேசும் போது அவருடைய சொற்களை கவனிக்காமல் இருத்தல்
3. ஒவ்வொரு காாியத்திற்கும் புகாா் அளித்தல்
4. வீட்டு வேலைகளில் துணைக்கு உதவி செய்யாமல் இருத்தல்
5. துணைக்கு என்று தனியாக நேரம் ஒதுக்காமல் இருத்தல் அல்லது அவ்வப்போது துணையை வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்லாமல் இருத்தல்
6. ஒருவருக்கொருவா் மதிப்பளிக்காமல் இருத்தல்
7. பிரச்சினைகள் வரும் போது துணையிடம் தொிவிக்காமல் இருத்தல்
8. பாலியல் உறவில் ஈடுபடாமல் இருத்தல் அல்லது அதில் நாட்டமில்லாமல் இருத்தல்
ஆகவே மேற்சொன்ன மோசமான காாியங்களைத் தவிா்த்தால், தம்பதியா் தமது அன்புறவில் அதிக நெருக்கமுடன் வாழலாம்.



Click it and Unblock the Notifications