Latest Updates
-
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா?
பெண்கள் ஆண்கள் மீதுள்ள மரியாதையை இழக்க.. இதெல்லாம் தான் காரணம்-ன்னு தெரியுமா?
Relationship Tips In Tamil: உறவில் மரியாதை என்பது மிகவும் முக்கியம். அது இரண்டு பக்கமும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இதில் யாராவது ஒருத்தருக்கு மரியாதை குறைவு ஏற்பட்டால் அந்த உறவு சிக்கலில் தான் போய் முடியும். அந்த வகையில் பெண்கள் ஆண்கள் மீதுள்ள மரியாதையை இழக்க என்ன காரணம் என்று யோசித்து இருக்கீங்களா?
பொது வெளியில் ஒரு பெண்ணை மட்டம் தட்டி பேசுவது, அவளை அளவுக்கு அதிகமாக அடிமைபடுத்துவது இது போன்ற ஆண் செய்கைகளால் அவர்கள் மரியாதையை இழக்கின்றனர். அதற்கான காரணங்களை பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

பொதுவெளியில் அவளை மட்டம் தட்டி பேசுதல்
தனிப்பட்ட முறையில் ஒருவரையொருவர் விளையாட்டுத்தனமாக கிண்டல் அடித்து பேசுவது மிகவும் இயல்பானது தான். ஆனால் பொதுவெளியில் உங்கள் துணையை சிறுமைப்படுத்தி பேசுவது மிகவும் தவறு. ஆனால் சில ஆண்களுக்கு இது பற்றி தெரிவதில்லை. தங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் முன்னிலையில் தன் மனைவியையோ அல்லது காதலியையோ மட்டம் தட்டி பேசுவது உண்டு.
இது பின்னாளில் அவர்கள் உறவில் சிக்கலை ஏற்படுத்தலாம். இதனால் தன்னை மதிக்காத ஆண்களை மதிக்க வேண்டும் என்று பெண்களுக்கு தோன்றுவதில்லை. மரியாதையை கொடுத்தால் தான் பெற முடியும். இதனால் ஆண்கள் பெண்களிடம் மரியாதையை இழக்கின்றனர்.
அடிமைப்படுத்துதல்
ஒரு திருமண உறவு என்று வரும் போது அங்கு ஆண் தலைவனாக இருக்க விரும்புகிறான். இதனால் நிறைய ஆண்கள் முதலாளியாகி பெண்களை அடிமைப்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். பெண் என்றால் வீட்டு வேலைகளை அவள் தான் செய்ய வேண்டும், பெரிய முடிவுகளை குடும்பத்தில் அவள் எடுக்க உரிமையில்லை போன்ற ஆண் எண்ணங்கள் பெண்களுக்கு பிடிப்பதில்லை. இப்படிப்பட்ட ஆண்களும் பெண்களிடத்தில் மரியாதையை இழக்கின்றனர்.
மற்ற ஆண்களைக் காட்டிலும் கீழ் படிதல்
ஒரு ஆண் உண்மையில் எவ்வளவு ஆணாக இருக்கிறான் என்பதை ஒரு பெண் எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கிறாள். ஒரு ஆண் எவ்வளவு வலிமையானவன்( மன ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும்) என்பதை பெண்கள் பார்ப்பார்கள். மற்ற ஆண்களைக் காட்டிலும் இவன் எதில் சிறந்தவன், மற்ற ஆண்களுடன் பழகும் போது எப்படி பழகுகிறான், மற்ற ஆண்களுடன் எப்படி அரட்டை அடிக்கிறான் இது போன்ற விஷயங்களை பெண்கள் நோட்டமிடுவது உண்டு.
ஒரு ஆண் ஆதிக்கத்தின் அடிப்படையில் மற்ற ஆண்களை கீழே வைக்கிறானா அல்லது மேலே வைக்கிறானா என்பதை பார்க்கிறாள். ஏனெனில் வெளியில் தலைவனாக இருக்க நினைப்பவன் வீட்டிலும் தன்னை அடிமைப்படுத்தலாம் என்று அவள் நினைக்கிறாள். எனவே மற்ற ஆண்களுடன் பழகும் விதத்தை வைத்து ஒரு ஆண் மதிக்கப்படுகிறான்.
சந்தேகப்படுதல்
உறவில் நம்பிக்கை என்பது மிகவும் அவசியமான ஒன்று. அது இல்லாமல் போகும் போது எல்லா வகையான சிக்கல்களும் வந்து சேரும். பெண்களை அடிக்கடி சந்தேகப்படும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை. அப்படிப்பட்ட ஆண்களை பெண்கள் மதிப்பதில்லை. அடிக்கடி குற்றம் சாட்டுவது, அடிக்கடி சந்தேகப்படுதல் போன்ற விஷயங்கள் உறவில் சிக்கல்களை உண்டாக்குகிறது. பெண்கள் தங்களுக்கென சுய மரியாதை, உணர்ச்சி ரீதியான பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதில் பிரச்சினையை உண்டாக்கும் ஆண்களை பெண்கள் மதிப்பதில்லை.
பொய் கூறுதல்
அடிக்கடி பொய் கூறும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. உறவில் உண்மையாக இருப்பது மிகவும் அவசியம். நேர்மையற்றவராக இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை. பொய் சொல்லும் ஆண்கள் பெண்களிடம் மரியாதையை இழக்கின்றனர்.
முதிர்ச்சியில்லாமல் நடந்து கொள்வது
உறவில் கணவன் மனைவி இருவரும் முதிர்ச்சியுடன் செயல்படுவது அவசியம். இதில் ஆண்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. ஒரு பெண் ஒரு ஆணுடன் நீண்ட கால உறவில் ஈடுபடும் போது முதிர்ச்சியுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். முதிர்ச்சியில்லாமல் பொறுப்பில்லாத ஆண்களை பெண்கள் மதிப்பதில்லை. பெண்கள் விரைவாக முதிர்ச்சியடைகிறார்கள், ஆனால் ஆண்கள் அவ்வாறு நடந்து கொள்வதில்லை. எனவே உறவில் ஈடுபடுவதற்கு முன்பு முதிர்ச்சி தன்மையுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்வது அவசியம்.
சுய மரியாதை இல்லாமல் இருப்பது
முதலில் நமக்கு மரியாதை வேண்டுமென்றால் முதலில் நாம் சுயமரியாதையுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒரு ஆணுக்கு தன் மீதே சுய மரியாதை இல்லை என்றால் பெண்களிடம் இருந்து மரியாதையை பெறுவது மிகவும் கஷ்டம். எனவே ஆண்கள் சுயமரியாதையை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். உங்களை நீங்கள் மதித்துக் கொண்டால் மரியாதை என்பது தானாக வரும்.



Click it and Unblock the Notifications