Latest Updates
-
உடல் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப உணவியல் நிபுணர் சொல்ற இந்த 6 பானங்களை காலையில் குடிங்க.. -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் இட்லி மாவு இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. சைடு டிஷ்ஷே தேவைப்படாது.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூன் 2026: ஜூன் மாத முதல் நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
தம்பதிகள் இணைந்து புகையிலையை கைவிடுவது எப்படி? உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக இன்று ஒரு உறுதிமொழி எடுங்கள்! -
குருபகவான்-கேது இணைவதால் ஜூன் மாதம் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
குருபெயர்ச்சியால் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
'கோழி தண்டனை' கொடுக்கும் அளவுக்கு வன்முறையா? உங்கள் துணையின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்! -
பொரிச்ச முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி முட்டையை வறுத்து பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
திருமண வாழ்க்கை அலுப்பாக இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் இவைதான்.. இதை செய்தால் தம்பதிகளின் உறவு சிறக்கும்..!
காதலில், உறவில், கூட்டாளிகளுக்கு இடையேயான தொடர்பு சிறப்பு வாய்ந்தது. ஆனால் திருமண விஷயத்தில் சற்று வித்தியாசமாக இருக்கலாம். திருமணமான புதிதில் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஒரு ஜோடியாக ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவது ஒரு புதிய உலகில் அடியெடுத்து வைப்பது போன்றது. தொடக்கத்தில், திருமண வாழ்க்கை பலன்கள் மற்றும் சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஒருவர் பிஸியான வாழ்க்கையை நடத்துவது இயற்கையானது. இதனால் தம்பதியிடையே நெருக்கம் குறையும். இதனால் திருமண வாழ்க்கை சலிப்பாடைய வாய்ப்பு உள்ளது...
ஆனால் இந்த உணர்வை முன்கூட்டியே கண்டறிய பல வழிகள் உள்ளன. அதை அறிந்தால், உங்கள் உறவை வலுப்படுத்த நீங்கள் திட்டமிடலாம். பிரச்சனையின் அறிகுறிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

குறைவாகப் பேசுதல்
தம்பதிகள் புதிய திருமண வாழ்க்கையைத் தொடங்கும்போது பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும். தங்களின் விருப்பு வெறுப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். வாழ்க்கையில் அடைய வேண்டிய இலக்குகள் குறித்து இருவரும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். திருமணமான புதிதில் திருமண வாழ்க்கை இப்படித்தான் வண்ணமயமாக இருக்கும். ஆனால் புதிதாகப் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று தம்பதிகள் அடிக்கடி உணர்ந்தால், அவர்களின் திருமணம் சலிப்பாக இருக்கிறது என்று அர்த்தம். அவர்கள் தங்கள் உறவைப் புதுப்பிக்க வேண்டிய நேரம் இது. அதனால் ஏதாவது நல்ல விஷயங்களை தங்களது துணையிடம் பேசிக்கொண்டே இருப்பது நல்லது.
காதலை வெளிபடுத்துதல்
திருமணம் ஆனவுடன் காதல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக் கொண்டே இருக்கும். அதனால் ஜோடிகள் முதலில் ஒருவர் மீது ஒருவர் அபிமானமாக இருக்க வேண்டும்.. அவர்களுக்கிடையேயான காதல் எப்போதும் குறையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.. ஆனால் இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி எல்லா நாட்களிலும் இப்படி இருக்காது. படிப்படியாக புதுமை தேய்யும். அதன் மூலம் சில வருடங்கள் திருமண வாழ்க்கை சலிப்பாகத் தோன்றும். அதனால் அப்படி ஏதும் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி காதலை வெளிபடுத்திக் கொண்டே இருத்தல் நல்லது..
நெருக்கம் இல்லாமை
தம்பதியினரிடையே நெருக்கம் இல்லாமை, ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவரையொருவர் இரக்கம், அன்பு மரியாதை இல்லாமை, இருவருக்குள்ளும் உடல் தொடர்பு இல்லாமை போன்றவை சலிப்பான திருமண வாழ்க்கையின் அடையாளங்கள். தம்பதிகள் இருவரும் இதை விரைவில் தீர்க்க வேண்டும். இல்லையெனில், இடைவெளி அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிலைமை கையை மீறினால், உறவு பாதிக்கப்படலாம்.
புதுமை இல்லாமை
நீங்கள் தினமும் ஒரே மாதிரியே செய்து கொண்டிருந்தால் உறவில் சலிப்பு ஏற்படுவது இயல்பு. உதாரணமாக, திருமணமான புதிதில் மனைவி செய்யும் எந்த உணவையும் கணவன் விரும்புகிறான். நாட்கள் செல்லச் செல்ல ஒருவர் புதிதாக ஒன்றை விரும்புவது இயல்பு. ஆனால் மனைவிக்கு சமைப்பதில் புதுமை இல்லாததும், எப்போதும் ஒரே மாதிரியாக சமைப்பதும் சலிப்பான திருமண வாழ்க்கையின் அடையாளங்கள். அதனால் புதிதாக சமைத்துக் கொடுப்பது. அடிக்கடி சர்ப்ரைஸ் கொடுப்பது, கிஃப்ட் கொடுப்பது என செய்தல் தம்பதிகளின் உறவு மகிழ்வாக இருக்கும்.
மற்றவர்கள் மீது பொறாமை
உங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைப் பற்றி உயர்வாகப் பேசும்போது நீங்கள் பொறாமைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் திருமண வாழ்க்கை நன்றாக இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்.
திருமண பந்தத்தை வலுப்படுத்த..?
தாம்பத்திய வாழ்வில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள், தவறுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் இருவரும் ஒன்றாக அவற்றைத் தீர்த்தால், பல தசாப்தங்களாக உறவு பசுமையாக இருக்கும். வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது. சிரமங்களை எதிர்கொள்ளும்போது இருவரும் ஒருவரையொருவர் ஆதரித்து முன்னேற வேண்டும். ஒருவருக்கொருவர் கருத்துக்கு மதிப்பளிக்கவும். அவ்வப்போது புதிய இடங்களுக்குச் செல்வது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். இதன் விளைவாக பிணைப்பு வலுவடைகிறது. காதல் மலரும்..



Click it and Unblock the Notifications