Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
இந்த 5 விஷயங்களால தான் பெரும்பலான திருமணங்கள் விவகாரத்துல முடிவடையுதாம்...அது என்ன விஷயம் தெரியுமா?
இப்போதெல்லாம் விவாகரத்து என்பது சாதாரண விஷயமாக மாறிவருகிறது. குடும்ப நீதிமன்றங்களில் எண்ணற்ற விவாகரத்து வழக்கங்கள் பதிவாகி உள்ளன. தம்பதிகள் பிரிய எடுக்கும் முடிவு ஒரு கட்டத்தில் சரியாக இருந்தாலும், மற்றொரு புறம் மிகுந்த மன அழுத்தத்தையும் வேதனையையும் உங்களுக்கு தரலாம்.
பெரும்பாலும் காதல் திருமணங்கள்தான் அதிகமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வருவதாகக் கூறப்படுகிறது. காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி ஓர் உறவுக்குள் தம்பதிகள் நுழையும்போது எண்ணற்ற கனவுகளோடும் ஆசைகளோடும் அடியெடுத்து வைக்கிறார்கள்.

தங்கள் தேர்ந்தெடுத்த துணை நல்லவராக இல்லாமல் இருக்கலாம், உறவில் அவர்களுக்கான அங்கிகாரம் கிடைக்காமல் போகலாம் மற்றும் உங்கள் துணை உங்களுக்கு துரோகம் இழைக்கலாம் இதுபோன்ற பல காரணங்கள் இருக்கின்றன தம்பதிகள் பிரிந்து செல்வதற்கு. பல விஷயங்களை தம்பதிகளில் ஒருசிலர் மன்னித்து ஏற்றுக்கொள்கின்றனர்.
ஆனால், பலரால் அவர்களை மன்னிக்க முடியாமல் போகலாம், உறவை விட்டு வெளியேறுவது அவர்களுக்கு சரி என தோன்றலாம். ஆண்களும் பெண்களும் இப்போது மன அமைதியை நாடுவதால் வெளிப்படையான காரணிகளைத் தவிர விவாகரத்திற்கு பல காரணிகள் உள்ளன. 2015 ஆம் ஆண்டு சைக்கோசோமேடிக் மெடிசின் ஆய்வின்படி, சுமார் 40% திருமணங்கள் விவகாரத்தில் முடிவடைவதாகக் கூறப்பபடுகிறது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 மில்லியன் தம்பதிகள் விவாகரத்து கேட்பதாக கூறப்படுகிறது. பெரும்பலான தம்பதிகள் விவாகரத்து செய்வதற்கு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள 5 விஷயங்கள்தான் காரணமாம். அவை என்னென்ன என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
அன்பு இல்லாமை
பெரும்பலான தம்பதிகள் செய்யும் மிகப்பெரிய தவறு, திருமணத்திற்குப் பிறகு உங்கள் துணையிடம் ஐ லவ் யூ சொல்ல மறந்து விடுகிறீர்கள். இது உங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தையும் இணக்கத்தையும் குறைத்துவிடும். இது விவாகரத்துக்கான முக்கிய காரணமாகும்.
ஜர்னல் ஆஃப் செக்ஸ் & மேரிட்டல் தெரபியில் 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, 2,371 விவாகரத்து பெற்றவர்களின் கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட பாதி பேர் காதல் மற்றும் நெருக்கம் இல்லாததைக் குற்றம் சாட்டியுள்ளனர். உணர்ச்சிவசப்படாமல் இருப்பது விவாகரத்துக்கான சரியான காரணம்.
படுக்கையறையில் வெவ்வேறு தேவைகள்
சில நேரங்களில், காலப்போக்கில், படுக்கையறையில் நமக்கு வெவ்வேறு தேவைகள் அல்லது விருப்பங்கள் ஏற்படலாம். திறந்த திருமணத்தை விரும்பும் பல தம்பதிகள் உள்ளனர். பெரும்பாலும் திருமணமான சில காலங்களிலேயே தம்பதிகளுக்குள் பாலியல் வாழ்க்கையில் சலிப்பு ஏற்படுகிறது.
இதற்கு பொருந்தாத செக்ஸ் டிரைவ்கள் காரணமாக இருக்கலாம். பாலியல் இணக்கமின்மை உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே பிளவை உண்டாக்கும். இது சில நேரங்களில் உறவு முறிவுக்கு வழிவகுக்கும்.
துரோகம்
உறவில் ஏமாற்றுதல் அல்லது துரோகம் செய்வது விவாகரத்துக்கு மிகவும் பொதுவான காரணமாகும். யாரேனும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திருமணத்தை விட்டு வெளியேறினால் (அது பாலியல் அல்லது உணர்ச்சிகரமானதாக இருக்கலாம்), அது உங்கள் திருமணத்தின் அழிவை நோக்கிய படியாகும்.
உறவில் நம்பிக்கையை மீட்டெடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. 2013 ஆம் ஆண்டு ஜோடி மற்றும் குடும்ப உளவியல் ஆய்வின்படி, பெரும்பாலான விவாகரத்து பெற்றவர்கள் துரோகம் என்பது அவர்கள் பிரிவதற்கான முடிவெடுப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
உங்கள் துணையின் அவமதிப்பு
எந்த கூட்டாளியும் நூறு சதவீதம் சரியானவர் அல்ல. நாம் அனைவரும் அதை அறிவோம். அவர்களின் குறைகளை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், நம் துணையை நமக்குக் கீழே உள்ளவராகப் பார்க்கத் தொடங்கும் போது பிரச்சினைகள் எழுகின்றன.
அது உறவில் பெரிய சிவப்புக் கொடியாக மாறலாம். உங்கள் துணைக்கும் சுயமரியாதை இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். உறவில் தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்க, அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். கண்களை உருட்டுதல், ஏளனம் செய்தல், பெயர் சொல்லி அழைப்பது மற்றும் தாழ்த்துதல் அனைத்தும் மிகவும் அழிவுகரமானவை மற்றும் பெரும்பாலும் விவாகரத்துக்கு வழிவகுக்கும்.
எந்த வகையான துன்புறுத்துதல்
உடல் ரீதியான துன்புறுத்துதல் நிச்சயமாக எந்த உறவிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் உணர்ச்சி ரீதியான துன்புறுத்துதளை சகிக்க முடியாதது என்பதை மக்கள் உணரவில்லை. அதனால், பெரும்பலான இந்திய குடும்பங்களில் உடல் ரீதியான துன்புறுத்தல் என்பது சாதாரணமாக நிகழ்கிறது.
யாரையும் எதற்காகவும் எந்த வகையான துன்புறுத்தலும் செய்யக்கூடாது. பொறுப்பின்மை, கேஸ் லைட்டிங், பழி விளையாட்டு, கோபத்தின் வெடிப்பு, இவை அனைத்தும் உணர்ச்சி ரீதியான துன்புறுத்தலின் வழிகள். சமீபகாலமாக உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் விவாகரத்து கோரி செயல்பட ஆரம்பித்துவிட்டனர்.



Click it and Unblock the Notifications












