Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
பெண்களே! ஆண்கள் உடலுறவுக்கு 'நோ' சொல்ல இந்த விஷயங்கள்தான் காரணமாம்...ஷாக் ஆகாம படிங்க!
தம்பதிகள் இருவரும் முழு மனதுடனும் ஆர்வத்துடனும் உடலுறவில் ஈடுபடும்போது, அவை இருவருக்கும் இன்பத்தை கொடுக்கும். செக்ஸ் வேண்டாம் என்பது பெண்ணின் உரிமை மட்டுமல்ல ஆணின் உரிமையும் கூட என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உடலுறவுக்கு 'நோ' சொல்லுவதற்கு ஆண்களுக்கும் பல காரணங்கள் இருக்கின்றன.
ஆண்கள் தங்கள் மனைவி மீது ஆர்வம் இல்லாமல் இருப்பது முதல் தனிப்பட்ட நம்பிக்கைகள் அல்லது கடந்த கால அனுபவங்கள் என ஏதேனும் காரணங்களை கொண்டிருக்கலாம். உடலுறவில் உங்கள் துணை ஆர்வம் காட்டாமல் இருந்தால், அதற்கான பிரச்சனை என்னவென்று அறிந்து, அதை சரிசெய்ய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

உங்கள் பாலியல் வாழ்க்கை உங்கள் உறவு வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டுள்ளது. எனவே, உங்கள் பாலியல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். ஆண்களுக்கும் தனி விருப்பங்கள் மற்றும் ஆசைகள் இருக்கும். ஆண்கள் செக்ஸ் வேண்டாம் என்று கூறுவதற்கான காரணங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆர்வம் அல்லது ஈர்ப்பு இல்லாமை
ஆண்கள் செக்ஸ் வேண்டாம் என்று கூறுவதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று, தங்கள் துணையின் மீது ஆர்வம் அல்லது ஈர்ப்பு இல்லாமல் இருக்கலாம். காலப்போக்கில் தங்கள் துணையிடம் உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ ஈர்ப்பு குறைந்து வருவதாக அல்லது குறைந்திருப்பதாக ஆண்களுக்கு தோன்றலாம். இதன் விளைவாக அவர்களுக்கு பாலியல் ஆசை குறைந்து, உடலுறவு கொள்ள விருப்பம் இல்லை என்று கூறலாம்.
சோர்வு அல்லது மன அழுத்தம்
ஆண்கள் உடலுறவு வேண்டாம் என்று கூறுவதற்கான மற்றொரு பொதுவான காரணம் உடல் சோர்வு அல்லது மன அழுத்தம். வேலை, குடும்பக் கடமைகள் அல்லது பிற மன அழுத்தங்கள் காரணமாக ஆண்களுக்கு உடல் அல்லது உணர்ச்சி ரீதியாக சோர்வு ஏற்படலாம். இது அவர்களின் பாலியல் தூண்டலை குறைத்து, அவர்கள் உடலுறவில் ஈடுபட முடியாமல் செய்கிறது. அதிக மன அழுத்தம் வேலை காரணமாகவும் ஏற்படலாம்.
உறவுச் சிக்கல்கள்
ஆண்கள் தங்கள் துணையுடன் உணர்ச்சி ரீதியாக இணைந்திருப்பதை உணராமல் இருக்கலாம். உறவில் தீர்க்கப்படாத மோதல்கள் அல்லது சிக்கல்களால், மனைவியோடு நெருக்கமாக இல்லாமல் இருக்கலாம். இது அவர்களுக்கு உடலுறவில் ஆர்வத்தை குறைக்கும்.
ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை இல்லாமல் ஆரோக்கியமான தகவல்தொடர்பும் இல்லாமல் இருப்பதாலும் உடலுறவுக்கு 'நோ' சொல்லலாம். மேலும், நிதி பிரச்சனையையும் ஆண்க்ளீன் பாலியல் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
உடல்நலப் பிரச்சினைகள்
சில சுகாதார பிரச்சனைகள் அல்லது எடுத்துக்கொள்ளும் மருந்துகள் ஒரு மனிதனின் பாலியல் ஆசை அல்லது பாலுறவில் ஈடுபடும் திறனை பாதிக்கலாம். மனச்சோர்வு அல்லது பதட்டத்தை எதிர்கொள்ளும் ஆண்களுக்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் காரணமாக பாலியல் ஆர்வம் குறையக்கூடும்.
விறைப்புத்தன்மை அல்லது முன்கூட்டிய விந்துதள்ளல் போன்ற உடல் ஆரோக்கியப் பிரச்சினைகளை கையாள அவர்கள் வெட்கப்படுவார்கள் மற்றும் சங்கடப்படுகிறார்கள். இதன் விளைவாக ஆண்கள் பாலியல் செயல்பாடுகளைத் தவிர்க்கலாம்.
தனிப்பட்ட மதிப்புகள் அல்லது நம்பிக்கைகள்
சில ஆண்கள் திருமணத்திற்கு முந்தைய அல்லது திருமணத்திற்குப் புறம்பான உடலுறவில் ஈடுபட விரும்பாமல் இருக்கலாம். ஊக்கப்படுத்தாத தனிப்பட்ட அல்லது மத நம்பிக்கைகளைக் கொண்டிருக்கலாம்.
கடந்த கால அனுபவங்கள்
கடந்த காலத்தில் பாலியல் ரீதியான துன்புறுத்தலை அனுபவித்த ஆண்கள் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை கஷ்டமாக கருதலாம். அந்த அச்சத்தை சமாளிப்பதற்கான ஒரு வழியாக உடலுறவை முற்றிலும் தவிர்க்கலாம்.



Click it and Unblock the Notifications

