Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது!
மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே பிரச்சினை வர சீரியல்கள் எப்படி காரணமா இருக்குன்னு தெரியுமா?
Mother-in-law Vs Daughter-in-law: நாம் என்னதான் டெக்னாலஜில் முன்னேறிப் போய் கொண்டு இருந்தாலும் இன்றளவும் குடும்ப வன்முறையில் நாம் பின்தங்கித் தான் இருக்கிறோம். இருபதாம் நூற்றாண்டு வந்தாக் கூட இந்திய தொலைக்காட்சி சீரியல்களுக்கு இன்னமும் ஒரு விடிவுகாலம் வந்த பாடில்லை. சீரியல் என்றாலே அதில் மாமியார் மருமகள் சண்டை இல்லாம இருப்பதில்லை.
உண்மையில் சொல்லப்போனால் இந்த தொடர்களின் தாக்கம் பல பெண்களுடைய வாழ்க்கையிலும் இருக்கத்தான் செய்கிறது. சில வீடுகளில் சண்டையே இல்லாவிட்டாலும் கூட நம் இந்திய சீரியல்களே மாமியார் மருமகளுக்கு இடையே சண்டையை மூட்டி விட காரணமாகின்றன. நம் இந்திய சீரியல்களில் பெண்கள் தான் வில்லிகள்.

கொடுமைப்படுத்தும் மாமியாருக்கு எப்படி ஆப்பு வைப்பது, வீட்டில் ஆதிக்கம் செய்யும் மருமகளை எப்படி தட்டி வைப்பது இது போன்ற கதை தான் தொடர்களில் அதிகமாக காட்டப்படுகின்றன. மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே ஒரு அப்பாவி ஜீவனாகவும் அம்மாவுக்கும் சப்போர்ட் பண்ண முடியாம இங்கிட்டு பொண்டாட்டிக்கும் சப்போர்ட் பண்ண முடியாம நடுவில தவிக்கும் ஆணாக இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள்.
இன்றைய கால சீரியல்கள் முழுக்க முழுக்க குடும்ப வன்முறையை வெளியே கொண்டு வரும் ஒன்றாக தெரிந்தால் கூட உண்மையில் இந்த சீரியல்கள் தான் குடும்பங்களில் பல தவறான புரிதல்களுக்கு வழி வகுக்கிறது.
குடும்ப சீரியல்கள் எப்படி மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே பிரச்சினை வர காரணமாகிறது?
சீரியல் மூலம் பெறும் ஐடியாக்கள்
குடும்ப சீரியல்கள் ஒரு குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக குடும்பத்தில் எப்படி எல்லாம் குழப்பத்தை உண்டு பண்ணலாம் போன்ற ஐடியாக்களை விட்டுச் செல்கிறது. பெண்கள் இந்த மாதிரியான சீரியல்களை பார்க்கும் போது தங்களை அந்த கேரக்டராக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இதுவே அவர்கள் தங்கள் ரியல் வாழ்க்கையிலும் அதை பின்பற்ற காரணமாக அமைகிறது. இதுவே பல வீடுகளில் மாமியார் மற்றும் மருமகள் பிரச்சினைகளுக்கு வித்தாக அமைந்து விடுகிறது.
அபத்தமான சீரியல் கதைகள்
குடும்ப தொடர்கள் சமுதாயத்தில் முக்கிய பங்கை வகிப்பதற்கு பதிலாக அபத்தமான கதையை காட்டி விட்டுச் செல்கிறது. பெரும்பாலான சீரியல்கள் மாமியாரை எப்படி பழி வாங்குவது, மருமகளை எப்படி பழி வாங்குவது, மகனை எப்படி தன் சொல் பேச்சு கேட்க வைப்பது இது போன்ற கதைகளை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுகிறது. பொழுதுபோக்கு என்ற பெயரில் மற்றவர்களுக்கு எதிராக எப்படி சதி செய்வது போன்ற விஷயங்களைத் தான் குடும்ப தொடர்கள் செய்கின்றன.
குடும்ப சீரியல் ஒரு போதையை உண்டாக்குகிறது
குடும்ப சீரியல் பெண்களுக்கு ஒரு பேதை என்றே கூறலாம். நிறைய வீடுகளில் கணவனுக்கு சமைக்காமல் கூட சீரியல் பார்க்கும் கொடுமைகள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு முக்கிய காரணம் மாமியாருக்கும் மருமகளுக்கும் ஏற்படும் பிரச்சினைகளை வெளிப்படையாக தீர்த்து வைக்க இங்கே முடிவதில்லை. பெண்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்த முடியாத நிலையில் அதை சீரியல்கள் வழியாக பார்க்கும் போது அதற்கு எளிதாக அடிமையாகி விடுகிறார்கள்.
சீரியல்கள் உள்ள கேரக்டர்களாகவே மாறி அந்த மருமகளுக்கு என்ன ஆகிவிடுமோ அவள் மாமியார் ஏன் அப்படி செய்கிறார் இது போன்று கவலைப்படத் தொடங்கி விடுகிறார்கள். எனவே குடும்ப தொடர்கள் பெண்களை அடிமையாக்கத் தான் முயற்சிக்கிறதே தவிர அவர்களுக்கு நல்ல எண்ணங்களை கொடுக்க தவறிவிடுகிறது.
குடும்ப தொடர்கள் மாமியார்களை பழமை வாய்ந்தவர்களாக காட்டுகிறது
இப்பொழுது நிறைய மாமியார்கள் தங்கள் மருமகளை நன்றாக நடத்தும் குணத்தோடு இருக்கிறார்கள். ஆனால் இந்த குடும்ப தொடர்கள் இன்றளவும் மாமியார்களை பழமை வாதிகளாகவே காட்டுகிறது. மருமகளை வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு உபசரணம் செய்ய வேண்டும், சடங்கு சம்பிரதாயங்களை மதிக்க வேண்டும் இது போன்ற விஷயங்களையே அதிகமாக எடுத்துரைக்கிறது. ஆனால் உண்மையில் நிறைய மாமியார்கள் படித்து நிறைய மாடர்ன் எண்ணங்களுடன் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் மக்கள் முன்னோக்கி இல்லை
குடும்ப தொடர்கள் இன்றளவும் சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் தாக்கத்தை ஏற்படத்தான் செய்கிறது. கிராமம் மற்றும் சிறிய நகர்ப்புறங்களில் மக்கள் தங்கள் சிந்தனையில் முன்னோக்கி இருப்பதில்லை. நம் சமூகத்தில் எல்லா வகையான மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றளவும் மருமகள் சேலை தான் கட்ட வேண்டும், மாடர்ன் உடைகள் அணியக் கூடாது, மாதவிடாய் காலங்களில் பூஜை அறை அல்லது வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை.
அதே மாதிரி மருமகளும் மாமியாரை கொடுமைப்படுத்துவது போன்ற பழமை வாய்ந்த விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது. இந்த பழமைவாத விஷயங்களில் நம் குடும்ப தொடர்கள் கூடுதல் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது என்பது உண்மையே.



Click it and Unblock the Notifications