Just In
- 18 min ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 5 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 6 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
- 15 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
Don't Miss
- News
படுக்கை அறை வரை நுழைந்த "கறுப்பு ஆடு"! இம்ரான் கானை கொல்ல பெரிய சதி? கடைசி நேரத்தில் பரபர சம்பவம்
- Sports
இந்திய அணியில் அதிகரிக்கும் கொரோனா.. டிரெஸிங் ரூம்மில் என்ன பிரச்சினை.. பயோ பபுள் இல்லாததால் சிக்கல்
- Finance
ரஷ்யாவின் ஒற்றை நடவடிக்கை.. 40 - 50 மில்லியன் மக்களை பசியில் ஆழ்த்தும்
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Movies
ரோஜா சீரியலில் இருந்து ரசிகர்களின் ஃபேவரைட் 'அர்ஜுன் சார்' சிபு சூரியன் விலகல்...கவலையில் ரசிகர்கள்
- Technology
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உங்க கணவர்கிட்ட 'இந்த' அறிகுறிகள் இருந்தா நீங்க மோசமான ஒருத்தர்கிட்ட மாட்டிக்கிட்டீங்களாம்...!
கணவன் மனைவி உறவில் பல்வேறு பிரச்சனைகள் எழுவது சகஜம். அவற்றை எல்லாம் சமாளித்து மகிழ்ச்சியாக வாழ்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஒரு உறவில் தம்பதிகள் இருவரும் அவர்களுடைய துணையால் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றுதான் அனைவரும் விருப்புவார்கள். ஆனால், அவ்வாறு நடக்காதபோது, அது உறவில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். மேலும், இது உறவு பிரிவுக்கே வழிவகுக்கும். பெரும்பாலும் திருமண வாழ்க்கையில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே! பெரும்பாலும் பெண்கள் உறவில் மரியாதை குறைவாக நடத்தப்படுகிறார்கள். மரியாதைக் குறைவாக நடத்தும் கணவனைக் கண்டறிவது பெண்களுக்கு கடினமான விஷயமல்ல.
போதுமான நேர்மை இல்லாத அல்லது எப்போதும் தன் துணையிடம் சண்டையிட்டு கொண்டே இருக்கும் ஒருவரை, தன் வாழ்க்கைத் துணையை பொருட்படுத்தாமல் அவமரியாதை செய்யும் கணவணை எளிதில் அடையாளம் காண முடியும். இத்தகைய அப்பட்டமான அவமரியாதை அந்த பெண்களை காயப்படுத்துவது மட்டுமல்லாமல், மன அழுத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தும். இந்த வகையான நபரைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க, நீங்கள் கவனிக்க வேண்டிய சில எச்சரிக்கை அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

உங்கள் தேவைகளைப் புறக்கணித்தல்
உங்கள் கணவர் ஒரு முறை கூட உங்கள் பேச்சைக் கேட்காமல் திருமண உறவில் உள்ள உங்கள் தேவைகளைப் புறக்கணித்தால், அது ஒரு பெரிய சிவப்புக் கொடி. உங்கள் கணவர் முதலில் நீங்கள் சொல்வதைக் கேட்கின்றாரா? ஆம். எனில், நீங்கள் அவருடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வது போலவே உங்கள் தேவைகளையும் அவர் கவனித்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், உங்கள் தேவைகளை அவர் புறக்கணிக்க தொடங்குவார்.

உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது
மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, நீங்கள் சிறப்பாக இருக்கவும், உங்கள் இலக்குகளை விரைவாக அடையவும் ஊக்குவிக்கும். ஆனால் அது மிகவும் ஆரோக்கியமற்றதாக இருக்கலாம். ஏனெனில் அது உங்களை ஊக்கப்படுத்தலாம் மற்றும் உங்களை சந்தேகிக்கச் செய்யலாம். எனவே, உங்கள் கணவர் உங்களை மற்றவர்களுடன் தொடர்ந்து ஒப்பிட்டுப் பார்ப்பவராக இருந்தால், நீங்கள் அவருடன் பேச வேண்டும்.

அதிகமாகக் கோருவது
உங்கள் கணவர் உங்களிடம் மிகவும் அதிகமாக கோரக்கூடாது. ஏனென்றால் அவருடைய தேவைகளை மட்டுமே உள்ளடக்கிய அவரது கோரிக்கைகளை நாடுவது மிகவும் அழுத்தமாக இருக்கும். திருமணம் என்பது ஒருவருக்கு மட்டுமல்ல, இரண்டு பேரைப் பற்றியது. இருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும்.

சமரசம் இல்லை
எதிலும் சமரசம் செய்து கொள்ள முடியாத ஒருவருடன் இருப்பது கடினம். உங்கள் கணவர் ஒருமுறை கூட உங்கள் வழியில் விஷயங்களைச் செய்ய மறுத்தால், அவர் கொஞ்சம் கூட சமரசம் செய்யத் தயாராக இல்லை என்று அர்த்தம். உறவில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது, சமரசம் செய்து கொள்வது போன்றவை நீண்ட நாட்கள் உறவை உயிர்ப்போடு வைத்திருக்க உதவும்.

நீங்கள் அவருடைய முன்னுரிமையாக இல்லை
ஒரு கணவன் தனது வாழ்க்கையின் மற்ற எல்லா அம்சங்களையும் ஒப்பிடும்போது திருமணத்தில் மனைவிக்கு முன்னுரிமை கொடுக்க முடியும். உங்கள் கணவர் அதைச் செய்யவில்லை என்றால், அவர் தனது மனைவியாக உங்கள் நிலையை அவமதிக்கிறார் என்று அர்த்தம். உறவில் கசப்பு ஏற்படும்போது, முன்னுரிமை தவிர்க்கப்படும்.

உங்களை ஆதிக்கம் செலுத்துகிறது
யாரையும் யாரும் ஆதிக்கம் செய்வதை யாரும் விரும்புவதில்லை. உறவில் இருவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஆனால், ஒருவர் மீது ஆதிக்கம் செலுத்துவது என்பது சரியானதல்ல. இது உங்கள் உறவில் ஒரு பெரிய சிவப்புக் கொடி. நீங்கள் அவருக்கு சொந்தமான பொருள்போல உங்கள் கணவர் உங்களை வழிநடத்தக்கூடாது. அவர் உங்கள் விருப்பங்களை மதிக்க வேண்டும். உங்களுக்காக எதையும் செய்ய அவர் ஆர்வமாக இருக்க வேண்டும். உங்கள் கணவர் உங்களை மீண்டும் மீண்டும் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள்.