For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க பெஸ்ட் ப்ரண்டை நீங்க கல்யாணம் பண்ணுனீங்கனா உங்க லைப் எப்படி இருக்கும் தெரியுமா?

உங்கள் சிறந்த நண்பர் எப்போதும் எல்லா சூழ்நிலையிலும் உங்களுக்கு துணையாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

|

ஆண், பெண் ஆகிய இருவருக்கும் திருமணம் செய்து கொள்ளும் ஒரு காலம் வரும்போது, அவர்கள் விரும்பும் நபருடனோ அல்லது பெற்றோரால் பார்க்கப்படும் நபருடனோ என எந்த வழியில் இருந்தாலும், திருமணம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையின் மிக முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் ஒரு நபருடன் திருமணம் செய்து கொள்ளும்போது, உங்கள் முழு வாழ்க்கையையும் அந்த குறிப்பிட்ட நபருடன் செலவழிக்க வேண்டும் என்று இந்த சமூகம் எதிர்பார்க்கிறது. மேலும் நீங்கள் அந்த நபரை விரும்புகிறீர்களா இல்லையா என்பது ஜன்னலுக்கு வெளியே பறக்கிறது. இது சோகம், ஆனால் உண்மை!

ten-reasons-why-marrying-your-best-friend

ஒருவேளை, சிலர் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கப்படும்போது, குறிப்பாக அது ஏற்பாடு செய்யப்படும்போது, அந்த நபர் உங்களுக்கு சரியானவரா இல்லையா என்பது பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. உங்களுக்குத் தெரியாத ஒருவருடன் உங்கள் வாழ்க்கையை செலவிடுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் உங்கள் சிறந்த நண்பரை திருமணம் செய்வது பற்றி நீங்கள் யோசித்தது உண்டா? உங்கள் பாதிப்புகள், பலவீனங்கள், பலங்கள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை அறிந்த ஒருவருடன் உங்கள் வாழ்க்கையை செலவிடுவது எளிதாகவும் அற்புதமாகவும் இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். உங்கள் சிறந்த நண்பர் உங்கள் வாழ்க்கைத் துணையாக இருக்க முடியுமா இல்லையா என்பது குறித்து நீங்கள் இன்னும் சந்தேகம் கொண்டிருந்தால், மேலும் அறிய இக்கட்டுரையை படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒருவருக்கொருவர் மிகவும் நன்றாக அறிவீர்கள்

ஒருவருக்கொருவர் மிகவும் நன்றாக அறிவீர்கள்

'நீங்கள் எப்போது எப்படி நடந்துகொள்வீர்கள்', 'ஒருசில விஷயத்தின் மீது நீங்கள் எவ்வளவு பைத்தியமாக இருக்கிறீர்கள்', 'நீங்கள் எந்த வகையான உணவை உண்ண விரும்புகிறீர்கள்' போன்ற உங்களைப் பற்றிய எல்லாவற்றையும் உங்களின் நெருங்கிய மற்றும் சிறந்த நண்பர் அறிவார். உண்மையில், சிறந்த நண்பர்களாக நீங்கள் ஒருவருக்கொருவர் இருப்பதால் இருவருக்குள்ளும் இருக்கும் விருப்பு வெறுப்புகள் நன்றாக அறிவீர்கள். எந்தவித தயக்கமும் இல்லாமல், உங்கள் சிறந்த நண்பர் உங்கள் வாழ்க்கை துணையாக மாறுவார் என்று சொல்வது தவறல்ல. எனவே, நீங்கள் உங்கள் சிறந்த நண்பரை திருமணம் செய்து கொள்ளும்போது, உங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கும்.

MOST READ:உங்கள் காதலில் இந்த பிரச்சனைகளை ஒருபோதும் புறக்கணிக்க நினைக்காதீர்கள்...!

ஒருவருக்கொருவர் நம்புங்கள்

ஒருவருக்கொருவர் நம்புங்கள்

கண்களை மூடிக்கொண்டு நீங்கள் நம்பும் ஒருவர் உங்கள் நெருங்கிய நண்பர்கள். உங்கள் சிறந்த நண்பர் எப்போதும் எல்லா சூழ்நிலையிலும் உங்களுக்கு துணையாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் உண்மையிலேயே அக்கறை காட்டுவதால் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கருத்துக்கள், தேர்வுகள் மற்றும் பரிந்துரைகளை நம்புகிறீர்கள். உங்கள் சிறந்த நண்பர் உங்களைத் துன்புறுத்துவதையோ அல்லது உங்கள் மகிழ்ச்சியை தட்டிப்பறிப்பதையோ நினைத்துப் பார்க்க மாட்டார் என்பது உங்களுக்கே தெரியும்.

வாழ்க்கையில் முக்கிய பங்கை வகிக்கிறீர்கள்

வாழ்க்கையில் முக்கிய பங்கை வகிக்கிறீர்கள்

சிறந்த நண்பர்களாக நீங்கள் ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் சில முக்கிய பங்கைக் கொண்டுள்ளீர்கள். சில நேரங்களில் பிரிந்த நேரத்தில் அல்லது உங்கள் உயர் படிப்பைத் தொடர நீங்கள் விலகிச் செல்லும்போது நீங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளித்தீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் சிறந்த கருத்தையும் ஊக்கத்தையும் தருகிறீர்கள். ஒருவருக்கொருவர் முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்கள், பிணைப்பைக் கெடுக்கும் விஷயங்களை நீங்கள் அரிதாகவே செய்வீர்கள்.

பலவீனங்களை நன்கு அறிவீர்கள்

பலவீனங்களை நன்கு அறிவீர்கள்

ஒருவருக்கொருவர் பலவீனங்களையும் பலங்களையும் நீங்கள் நன்கு அறிவீர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் சிறந்த நண்பரைப் போல உங்கள் கண்ணீரை துடைக்க இங்கு யாரும் வர மாட்டார்கள். உங்கள் பாதிப்புகளைப் பற்றி உங்கள் சிறந்த நண்பருக்குத் தெரியும். உண்மையில், உங்கள் பிரச்சினைகளை மற்றவர்களுக்கு தெரிவிப்பதை விட ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறீர்கள்.

MOST READ:முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான "அந்த" விஷயம் என்ன தெரியுமா?

மிகவும் இணக்கமானவர்

மிகவும் இணக்கமானவர்

நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பற்றி அதிகம் அறிந்திருப்பதால், உங்களுக்குள் புரிதல் நன்றாக இருக்கும். இது ஒரு ஆடையைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தாலும், அல்லது உணவைத் தயாரித்தாலும், ஒருவருக்கொருவர் விரும்பும் விருப்பு வெறுப்புகளை நீங்கள் அறிவீர்கள். எனவே, உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை உங்கள் துணை எப்போதும் அறிந்து கொள்வார். நீங்கள் சோகமாக இருந்தாலும், உங்கள் துணை அதைக் கண்டுபிடித்து, உங்கள் வலியைப் போக்க எல்லாவற்றையும் செய்வார்.

உங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை

உங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை

உங்கள் சிறந்த நண்பருடன், உங்கள் வித்தியாசமான மற்றும் வேடிக்கையான பக்கத்தை நீங்கள் வெளியே கொண்டு வரலாம். உங்களை பற்றிய வேடிக்கையான விஷயங்களை அவர் அல்லது அவள் ஏற்கனவே அறிந்திருப்பதால் உங்கள் சிறந்த நண்பர் உங்களை ஒருபோதும் தீர்மானிக்க மாட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் வேறொருவராக நடிக்க வேண்டியதில்லை அல்லது உங்கள் கூட்டாளியின் விருப்பப்படி செயல்பட வேண்டியதில்லை. அவர் உங்களிடம் உள்ள குழந்தை தனத்தை அறிந்திருக்கிறார். எனவே, நீங்கள் மகிழ்ச்சியுடன் நீங்களாகவே இருக்க முடியும். உங்கள் அச்சங்கள், ஆசைகள், நம்பிக்கைகள் மற்றும் பலவற்றைப் பற்றி நீங்கள் அவரிடம் அல்லது அவளிடம் சொல்லலாம்.

ஆழமான ரகசியங்களை அறிவீர்கள்

ஆழமான ரகசியங்களை அறிவீர்கள்

சாதரண நபர்களிடம் தங்கள் ஆழ்ந்த உணர்வுகளை பகிர்ந்து கொள்ள யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், உங்கள் உணர்வுகளையும் ரகசியங்களையும் உங்கள் நெருங்கிய நண்பருடன் பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள். பள்ளி அல்லது கல்லூரியில் நீங்கள் படிக்கும்போது, உங்களுடைய க்ரஷ் பற்றியும் மற்றும் நீங்கள் ஒருபோதும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாத லவ் லெட்டர் பற்றியும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடந்த வந்த பாதைகள் அவருக்குத் தெரியும். ஆனால், உங்கள் தேர்வுகள் காரணமாக அவர்கள் உங்களை ஒருபோதும் நீங்கள் இப்படிதான் என்ற தீர்மானத்திற்கு வர மாட்டார்கள். அதுவே அவர்களை தனித்துவமாக்குகிறது.

MOST READ:உங்களுக்கு பிடித்த மாறி உங்கள் துணையுடன் செக்ஸ் வைச்சிக்கணுமா? இந்த வழிகளை யூஸ் பண்ணுங்க...!

இலக்குகளை அறிவீர்கள்

இலக்குகளை அறிவீர்கள்

ஒருவருக்கொருவர் ஆர்வம் மற்றும் குறிக்கோள்களை நீங்கள் நன்கு அறிவீர்கள். இது மட்டுமல்ல, நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அவர்களின் கனவுகளை ஆதரிக்க தயாராக இருக்கிறீர்கள். மேலும், உங்கள் இருவருக்கும் சில பொதுவான குறிக்கோள்கள் இருக்கலாம். அவை, மேலும் உங்களை நெருக்கமாக கொண்டு வரக்கூடும். நீங்கள் ஒருவருக்கொருவர் குறிக்கோள்களையும் கனவுகளையும் மதிக்கும்போது நீங்கள் இருவரும் அந்தந்த இலக்குகளை அடைவதை உறுதி செய்வீர்கள்.

ஈர்க்க வேண்டியதில்லை

ஈர்க்க வேண்டியதில்லை

பொதுவாக மக்கள் தங்கள் காதலன் அல்லது காதலியை ஈர்க்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் நீங்கள் உங்கள் சிறந்த நண்பரை திருமணம் செய்து கொண்டால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் துணையை கவர எதையும் செய்ய வேண்டியதில்லை. இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருப்பதால் இயல்பாகவே இருக்கலாம். உங்கள் துணை என்ன சொல்லுவார் என்ற பயம் இல்லாமல் உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் ஆடை அணியலாம். அவர் அல்லது அவள் யாரிடமும் புகார் செய்ய மாட்டார்கள். உங்களை ஆதாரிப்பார்.

உங்களுக்காக இருப்பார்

உங்களுக்காக இருப்பார்

சில நேரங்களில், மனிதர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் கனவுகளிலும் பிஸியாகி விடுகிறார்கள். உங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள யாரும் இல்லை என்று நீங்கள் உணரலாம். ஆனால் நீங்கள் உங்கள் சிறந்த நண்பரை திருமணம் செய்யும்போது, உங்கள் நண்பரை இழப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அவர் உங்களுக்காக இருப்பார். நீங்கள் ஒருவருக்கொருவர் ஏற்ற தாழ்வுகளில் ஒன்றாக இருப்பீர்கள். உங்கள் எண்ணங்கள், கருத்துகள் மற்றும் உணர்வுகளை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் அவருடன் அல்லது அவருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

அழகாகும் வாழ்க்கை

அழகாகும் வாழ்க்கை

நெருங்கிய மற்றும் சிறந்த நண்பர்கள் உங்கள் வாழ்க்கையை ஆச்சரியமாகவும் அழகாகவும் மாற்ற முடியும் என்பதை மறுப்பதற்கில்லை. எல்லோரும் உங்களுக்கு எதிராகச் செல்லும்போது அவர்கள் உங்களுடன் இருக்கிறார்கள். உங்களை புரிந்துகொண்ட உங்களின் நெருங்கிய நண்பரை திருமணம் செய்யும்போது, உங்கள் திருமண வாழ்க்கை மிக அழகாகவும், ஆனந்தமாகவும் மாறும். எனவே, சிறந்த நண்பர்கள் உங்களின் சிறந்த வாழ்க்கை துணையாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ten reasons why marrying your best friend

We are talking about the ten reasons why marrying your best friend
Story first published: Wednesday, January 29, 2020, 16:53 [IST]
Desktop Bottom Promotion