Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
பெண்கள் இந்த ரகசியங்களை ஒருபோதும் தங்கள் கணவரிடம் சொல்லமாட்டார்களாம்... இப்பயாவது தெரிஞ்சிக்கோங்க!
திருமணத்திற்கு பிறகு ஆண், பெண் இருவரின் வாழ்க்கையுமே மாறிவிடும். அதுவரை அந்நியர்களாகவோ அல்லது காதலர்களாகவோ இருந்தவர்கள் அதன்பின் ஒரே அறையில் வாழப்போகிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு ஆண், பெண் இருவரின் வாழ்க்கையுமே மாறிவிடும். அதுவரை அந்நியர்களாகவோ அல்லது காதலர்களாகவோ இருந்தவர்கள் அதன்பின் ஒரே அறையில் வாழப்போகிறார்கள். தம்பதிகளுக்கு இடையேயான புரிதல்களும், வெளிப்படைத்தன்மையும்தான் அவர்களின் உறவை அழகானதாக மாற்றுகிறது. ஆனால் எவ்வளவு மகிழ்ச்சியான தம்பதிகளாக இருந்தாலும் அவர்களுக்குள் பகிர்ந்து கொள்ள முடியாத ரகசியங்களும், ஆசைகளும் நிச்சயம் இருக்கும்.

திருமண உறவில் ரகசியங்களை பாதுகாப்பதிலும், வெளிப்படைத் தன்மையாக இல்லாமல் இருபத்திலும் ஆண், பெண் இருவருமே விதிவிலக்கானவர்கள் அல்ல. தம்பதிகள் இப்படி வெளிப்படையாக இல்லாமல் இருப்பதற்கு காரணம் தங்கள் மீதான தங்கள் துணையின் அபிப்பிராயம் மாறிவிடுமோ என்ற அச்சம்தான். பொதுவாக பெண்களை ரகசியங்களை காப்பாற்ற முடியாதவர்கள் என்று கூறுவார்கள், ஆனால் இந்த விஷயத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். இந்த பதிவில் பெண்கள் ஒருபோதும் தங்கள் கணவரிடம் சொல்லாமல் வைத்திருக்கும் ரகசியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

தன்னை விட கணவர் அதிகம் சம்பாதிக்க வேண்டும்
பல பாலின ஸ்டீரியோடைப்கள் உண்மையில் பெண்களால் ஏற்படுத்தப்படுகின்றன. இது 21 ஆம் நூற்றாண்டு என்றும், பெண்கள் நமக்குச் சமமான சுதந்திரமானவர்கள் என்றும் நீங்கள் நினைக்கலாம். இதனால் கணவர் வலிமையானவராகவும், வயதானவராகவும், சம்பாதிப்பவராகவும் இருப்பது இனி முக்கியமில்லை என்று அர்த்தமில்லை. ஒவ்வொரு பெண்ணும் தனது கணவர் தன்னை விட அதிகமாக சம்பாதிக்க விரும்புகிறார். நிச்சயமாக, அவர் வெளிப்படையாக சொல்ல மாட்டார். பெண்கள் எவ்வளவு வலிமையானவராக இருந்தாலும் தங்கள் கணவர் தங்களை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்.

அவர்களும் ப்ளர்ட் செய்வார்கள்
இது உங்களுக்கு தெரிந்ததாக இருக்கலாம், ஆனால் உங்களுக்குத் தெரிந்ததை விட அவர்களும் தங்களுடன் வேலை செய்பவர்களுடன் கடலை போடுவார்கள். நீங்கள் அவர்களை குற்றம் சாட்டினால் அவர்களை நம்பவில்லை என்று உங்கள் மீது பழிசுமத்துவார்கள். தான் வெறும் நட்பாகவே பேசியதாகவே அவர்கள் சாதிப்பார்கள்.

பேச்சுலர் வாழ்க்கையில் நடந்தவை
பெண்கள் தங்களின் திருமணத்துக்கு முந்தைய வாழ்கையில் எப்போதும் சில பக்கங்களை ரகசியமாகவே வைத்திருப்பார்கள். அவர்களின் பேச்சுலர் வாழ்க்கை மற்றும் கடந்த கால காதல் வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாக இருந்தாலும் அதில் சில விஷயங்களை மறைப்பார்கள். அதைப்பற்றி பேசும்போதெல்லாம் அவர்களை பரிதாபத்துக்கு உரியவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் காட்டிக்கொள்வார்கள்.

உடலுறவில் நாட்டம்
ஆண்களைப் போலவே பெண்களும் உடலுறவில் சம அளவில் விருப்பம் கொண்டவர்கள். குறிப்பாக திருமணமான பெண்கள். திருமணமான பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைப் போலவே உணர்ச்சிவசப்பட்ட பாலியல் வாழ்க்கையை விரும்புகிறார்கள் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தங்கள் கணவர் உடலுறவை எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள், மேலும் அதை அவர்களின் நன்மைக்காகப் பயன்படுத்துவார்கள்.

போலியான உச்சக்கட்டம்
பெண்கள் பல சமயங்களில் போலியான உச்சக்கட்டத்தை வெளிப்படுத்துவார்கள். தாங்கள் உடலுறவை அனுபவிக்கவில்லை என்று கூறுவது தங்கள் கணவரது சுயமரியாதையை குலைத்துவிடும் என்று பெண்கள் நினைக்கிறார்கள், அதனால் தான் அவர்கள் போலியான உச்சக்கட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். போலியான உச்சக்கட்டத்தை கண்டறிவது கடினம் அல்ல என்றாலும், சில பெண்கள் நடிப்பது தெரியாத அளவிற்கு நடிப்பார்கள்.

கணவரின் பெற்றோரை பிடித்தது போல் நடிப்பது
இது பெரும்பாலான பெண்கள் செய்யும் ஒன்றாகும். தங்கள் கணவரின் பெற்றோர்கள் செய்யும் செயல்களோ அல்லது அவர்களையோ பிடிக்காமல் இருந்தால் பெண்கள் அதனை உடனடியாக வெளிப்படுத்த மாட்டார்கள். அதற்கான காலம் வரும்வரை காத்திருப்பார்கள்.



Click it and Unblock the Notifications











