Just In
- 4 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 5 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
- 14 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- 15 hrs ago
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
Don't Miss
- Finance
3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் கணிப்பு..!
- News
"இலக்கு இல்லாமல் தடுமாறும் திமுக அரசு! மோடியின் நல்லாட்சியால் மக்கள் மனதில் மாற்றம்!" அண்ணாமலை பளீச்
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Movies
ரோஜா சீரியலில் இருந்து ரசிகர்களின் ஃபேவரைட் 'அர்ஜுன் சார்' சிபு சூரியன் விலகல்...கவலையில் ரசிகர்கள்
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா உறுதி.. இங்கிலாந்து தொடரில் அடுத்தடுத்த சர்ச்சை.. எப்படி பரவியது??
- Technology
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உங்க கணவன் அல்லது மனைவி உங்கிட்ட அடிக்கடி பொய் சொல்லுறாங்களா? அப்ப 'இது' தான் காரணமா இருக்குமாம்!
தவிர்க்க முடியாத சூழலில், யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பொய் கூறலாம் என்று மக்கள் மத்தியில் கூறப்படுகிறது. பொய் சரியானதா என்றால்? அவை, ஒருபோதும் சரியாக இருக்காது. ஒரு பொய் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அல்லது பாதிப்பில்லாததாக இருந்தாலும், அது இன்னும் பொய்யாகவே இருக்கும். நம்பிக்கை மற்றும் நேர்மையின் அடிப்படையில் உறவுகள் கட்டமைக்கப்படுவதால், பொய் ஒரு நொடிக்குள் உங்கள் மீது வைத்த நம்பிக்கையையும் உறவுகளையும் அழித்துவிடும். உங்கள் பங்குதாரர் நேர்மையின்மையை நோக்கிச் சாய்ந்து, உங்களிடம் உண்மையைச் சொல்வதைத் தவிர்க்கும்போது, அவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது உங்களுக்கு அவசியம்.
பொய் சொல்வதை யாரும் விரும்புவதில்லை. ஆனால் அவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்போம். சமீப காலமாக உங்கள் பங்குதாரர் உங்களிடம் பொய் சொல்வதற்கு சில காரணங்கள் இருக்கலாம். அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

துரோகம்
சமீபகாலமாக உங்கள் கணவன் அல்லது மனைவி உங்களிடம் அதிகம் பொய் சொல்கிறார்கள் என்றால், அவர்கள் ஒருவேளை உங்களை ஏமாற்றுகிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் உங்களுக்கு உண்மையாக இல்லை என்று புரிந்துகொள்ளுங்கள். வேறொருவருடன் இருக்க விரும்புகிறார்கள் என்ற உண்மையை போதுமான சான்றுகள் சுட்டிக்காட்டினால், உங்கள் பங்குதாரர் உங்களை விட்டு விலகுவதற்கும் பொய் சொல்லுவதற்கும் இது ஒரு நல்ல காரணம்.

நிதி இரகசியங்கள்
உங்கள் பங்குதாரர் உங்களிடமிருந்து நிதி சிக்கல்களை மறைக்க முயற்சிக்கிறார். அவர்கள் தங்கள் நிதி நிலையைப் பற்றி மிகவும் கவலைப்படும் சூழ்நிலையில் இது இருக்கலாம். மேலும் நீங்கள் அதிகம் கவலைப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் கடன் வாங்கிய பணம் அல்லது சூதாட்டப் பழக்கம் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், குடும்பத்தில் பிரச்சனை எழலாம் என்று நினைக்கலாம்.

தவறு செய்வது
உங்கள் பங்குதாரர் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பாத சில சிக்கலில் இருக்கலாம். மோசமான வியாபாரத்தில் ஈடுபடுவது, குடும்பப் பிரச்சனைகள் மற்றும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வசதியாக இல்லாத பல பிரச்சனைகள் இதில் அடங்கும். இதனால், உங்களிடம் அடிக்கடி பொய் கூறலாம்.

இரகசியங்களைப் பாதுகாத்தல்
உங்கள் பங்குதாரர் தம்முடைய அல்லது வேறு ஒருவரின் சில ரகசியங்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கலாம். அது பிந்தையவருடையதாக இருந்தால், அவர்கள் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் விடாப்பிடியாக இருந்தால், அது ஒரு நல்ல அறிகுறி. ஏனென்றால் அவர்கள் தங்கள் ரகசியத்தை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று மற்றவருக்கு உறுதியளித்துள்ளனர். இதன் பொருட்டு உங்கள் பங்குதாரர் நம்பகமானவர்.

தாழ்வு மனப்பான்மை
உங்கள் கணவன் அல்லது மனைவி சில விஷயங்களில் தாழ்வு மனப்பான்மை கொண்டிருக்கலாம். உங்களிடம் கூறுவதற்கு சங்கட்டமாக உணரலாம். நீங்கள் கேலி செய்வீர்கள் என நினைக்கலாம். ஆதலால், உங்கள் பங்குதாரர் தங்களைப் பற்றி ஏதாவது அல்லது எல்லாவற்றையும் கூட வெட்கப்படுகிறார். தாழ்வு மனப்பான்மையை மறைக்க அவர்கள் மீண்டும் மீண்டும் பொய் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தொடர்ந்து பொய் சொல்வது உறவுக்கு என்ன செய்யும்?
சிறிய மற்றும் அரிதான பொய்கள் கூட அவநம்பிக்கை மற்றும் பிற உறவுச் சிக்கல்களை ஏற்படுத்தலாம். உங்கள் பங்குதாரர் உங்களிடம் தொடர்ந்து பொய்களைச் சொன்னால், அது நம்பிக்கையின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அவர்கள் எவ்வளவு பொய்களைச் சொல்கிறார்களோ, அவ்வளவு குறைவாக நீங்கள் அவர்களை நம்புகிறீர்கள். இது உறவில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். ஆதலால், முடிந்தவரை உறவுகளிடம் பொய் கூறாமல், உண்மையை சரியாக எடுத்துக் கூறுங்கள்.