Latest Updates
-
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பெண்களே! உங்க கணவன் 'இந்த' மாதிரி நடந்துக்கிட்டா... கண்டிப்பா அவரு கள்ள தொடர்பில் இருக்கலாமாம்!
உங்கள் கணவன் உங்களை ஏமாற்றும்போது, அவர் தனது காதலியைச் சந்திப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறுவதற்கான எல்லா வழிகளையும் கண்டுபிடிப்பார். அதற்காக நிறைய பொய்களை உங்களிடம் கூற வாய்ப்புள்ளது.
ஒரு பொய்யை அடையாளம் காண்பது மிகவும் எளிதானது, குறிப்பாக அது ஏமாற்றுதல் மற்றும் துரோகம் பற்றியது என்றால், நீங்கள் அதை கண்டுபிடித்துவிடலாம். கணவன் மனைவி இடையில் பிரச்சனை மற்றும் சண்டை எழுவது சகஜம். ஆனால், திருமண உறவில் சலிப்பு மற்றும் பிரச்சனை எழுவதால், பல ஆண்கள் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள். வேறொருவருடன் உறவில் இருக்கும் உங்கள் கணவன் பல தில்லுமுல்லு வேலைகளை செய்யலாம். அப்படி அவர் செய்யும்போது, உங்கள் கணவன் மிகவும் கவனமாக இருக்கலாம். அதனால், பெரும்பாலான நேரங்களில், அவர்கள் வழங்கும் சாக்குகள் அவர்களின் பொய்கள் உங்களை ஏமாற்றுவதற்காக இருக்கலாம்.

உங்கள் கணவன் பொய் சொல்லும் மற்றும் ஏமாற்றும் முறையை நீங்கள் அறிந்ததும் புரிந்துகொண்டதும் இந்த நொண்டி சாக்குகளை எளிதில் அடையாளம் காண முடியும். எனவே, ஆண்கள் ஏமாற்றும் போது சொல்லும் சில பொதுவான சாக்குகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

வேலைக்கான சாக்கு எப்போதும் உண்டு
உங்கள் கணவன் எப்போதும் வேலை வேலை என்று அடிக்கடி உங்களிடம் காரணம் சொல்லுகிறாரா? அப்படி என்றால், அவர் மீது நீங்கள் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இரவு உணவின் நடுவில் உங்கள் கணவனின் ஃபோன் ஒலிக்கிறதா, உடனடியாக ஏதாவது வேலை என்று கிளம்புகிறாரா? உங்களுடன் இருக்கும்போது அடிக்கடி வேலை சாக்கு சொல்லி வெளியே கிளம்புகிறாரா? ஆம். எனில், அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்பதற்கான இது முக்கிய அறிகுறியாகும். ஆண்கள் எப்பொழுதும் தங்கள் தொழில்சார் கடமைகளைப் பற்றி சில காரணங்களைக் கூறுவார்கள். அது சாதாரணம். அது அதிகரிக்கும்போது சந்தேகம் எழுகிறது.

உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம்
உங்கள் ஆண் தனது உருவத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு தினமும் ஜிம்மிற்குச் செல்வதில் ஆர்வமாக இருந்தால், நிச்சயமாக வேறு யாரையாவது அவர் சந்திக்கிறார் அல்லது ஈர்க்க முயற்சிக்கிறார். அவருடைய நடத்தையில் சில மாற்றம் இருந்தால், நிச்சயமாக உங்களை ஏமாற்றுகிறார் என்பதைக் குறிக்கிறது. ஒருவரை கவர முயற்சிக்கும்போது, நம் உடல் மீதும் தோற்றத்தின் மீது அதிக கவனம் செலுத்துவது சகஜம். பெண்களே! இது உங்கள் கணவனை பற்றி தெரிந்துகொள்வதற்கான அறிகுறி.

அடிக்கடி பொய் சொல்லுவது
உங்கள் கணவன் உங்களை ஏமாற்றும்போது, அவர் தனது காதலியைச் சந்திப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறுவதற்கான எல்லா வழிகளையும் கண்டுபிடிப்பார். அதற்காக நிறைய பொய்களை உங்களிடம் கூற வாய்ப்புள்ளது. உங்கள் கணவன் அடிக்கடி உங்களிடம் பொய் சொல்லி வெளியேற முயற்சி செய்தால், கண்டிப்பாக அவர் காதலியை சந்திக்க செல்லலாம். நீங்களே ஒரு நாள் இதை கண்டுபிடிக்கலாம்.

கடுமையான சண்டைகள்
உங்கள் கணவன் எங்கிருந்தும் எப்போதும் உங்களிடம் சண்டைபோட்டு ஏமாற்றலாம். அவர் உங்களுடன் அடிக்கடி சண்டையிட முயற்சி செய்தால், அவர் உங்களை விட்டு விலகி வேறொருவருடன் இருக்க ஆசைப்படுகிறார் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். உங்களிடம் சண்டை போட்டு சமாதானம் செய்யாமல், அவர் கோபத்திலும் விரக்தியிலும் வீட்டை விட்டு வெளியேறலாம். உண்மையில், அவர் அவ்விடத்தை விட்டு வெளியேறி வேறொருவரை சந்திப்பதற்கான வழிகளைத் தேடுகிறார்.

வணிக பயணங்கள்
ஏமாற்றும் விஷயத்தில் ஆண்கள் கூறும் பொதுவான சாக்குகளில் இதுவும் ஒன்று. வணிகப் பயணத்திற்காக அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளியூர் செல்வதாக உங்கள் கணவன் சொன்னால், அவன் தங்கியிருக்கும் விவரங்கள், டிக்கெட்டுகள் போன்றவற்றை விசாரித்து, அவரிடம் கேட்கவும். ஏனெனில், அவர் உங்களை ஏமாற்றிவிட்டு வேறொருவருடன் இருக்க விரும்பலாம்.

நெருக்கம் குறைவது
உங்களுக்கும் உங்கள் கணவனுக்கு இடையில் நெருக்கம் குறையும்போது, நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் மீதுள்ள ஈர்ப்பு குறைந்து, வேறொருவருடன் அவர் நெருக்கமாக இருக்க விரும்பலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், உங்கள் இருவருக்குமான நெருக்கம் குறைய தொடங்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கமும், இணைப்பும் மிக முக்கியம். இதுதான் உறவை நீண்ட காலத்திற்கு வலுவாக வைத்திருக்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications
