Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
உங்க வாழ்க்கையில் திருமணத்திற்கு பிறகு நடக்கும் இந்த விஷயங்கள நீங்க எப்படி கையாளனும் தெரியுமா?
திருமண வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை கண்டு நாம் அனைவரும் பயப்படுகிறோம். நம் அடையாளத்தை, சுதந்திரத்தை, நம் வாழ்க்கை முறைகளை இழந்துவிடுவோமோ என்று அஞ்சுகிறோம்.
திருமணம் என்பது எல்லாருடைய வாழ்விலும் நடக்கும் ஓர் முக்கியமான விசேஷம். இதில், ஆண், பெண் இருவரும் இணைந்து தங்கள் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். நம் இந்திய கலாச்சாரத்தில் பொதுவாக பெண்கள் தங்கள் கணவனுடன் அவர்களுடைய வீட்டில் சென்று வாழ்வது வழக்கம். புதிய துணையுடன் இதுவரை பழக்கமில்லாத புதிய குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்வது என்பது பெண்களுக்கு மிகப்பெரிய சவால். அவர்கள் எல்லாவற்றையும் புரிந்துகொண்டும், தெரிந்துகொண்டும் வாழ வேண்டும். இதற்கு அவர்களின் கணவனின் ஆதரவு மற்றும் அரவணைப்பு அவசியம் தேவைப்படும். சந்தேகத்திற்கு இடமின்றி, அன்பு என்பது நம் வாழ்க்கையை மாற்றும் மிகவும் சக்திவாய்ந்த உணர்ச்சியாகும். நாம் அனைவரிடத்தும் அன்பை செலுத்துவோம்.

புதிய உறவுகள் மற்றும் மாற்றங்களை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பது குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதை தெரிந்துகொள்வதன் மூலம், புது மணப்பெண்களுக்கு, திருமணத்திற்குப் பின் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் எளிதாகவும் இலகுவாகவும் இருக்கும். நீங்கள் புதிதாக திருமணமான பெண்ணாக இருந்தால், புதிய சவால்களையும், திருமணத்திற்குப் பிந்தைய மாற்றங்களையும் சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவை என்னென்ன என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்
திருமண வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை கண்டு நாம் அனைவரும் பயப்படுகிறோம். நம் அடையாளத்தை, சுதந்திரத்தை, நம் வாழ்க்கை முறைகளை இழந்துவிடுவோமோ என்று அஞ்சுகிறோம். இன்னும் இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லலாம். ஒன்றை எப்போதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள், வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே நிலையானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் புத்திசாலிகளாகவும், படித்த பெண்களாகவும் இருப்பதால், உங்கள் துணை மற்றும் புதிய குடும்ப உறுப்பினர்களிடம் உங்கள் நல் மதிப்புகளை வெளிப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். உங்கள் புதிய உறவுகளில் வலுவாக வளர உங்கள் பயம் மற்றும் பாதுகாப்பின்மையை உங்கள் பலமாக மாற்றவும். மாற்றங்களை அன்போடும், பணிவோடும் ஏற்றுக் கொள்ளுங்கள், புதிதாக எதுவும் பயமுறுத்துவதாக உணர மாட்டீர்கள்.

வேறுபாடுகளை மதிக்கவும்
இரண்டு வெவ்வேறு கருத்துக்கள் கொண்ட நபர்கள் ஒன்றிணைந்து, ஒரு சிறந்த திருமண வாழ்க்கையை வாழ விரும்பினால், அதில் வேறுபாடுகள் என்பதை தவிர்க்க முடியாதவை. ஆனால், அந்த வேறுபாடுகள் உங்களைத் தாழ்த்துவதற்கு நீங்கள் அனுமதிக்கக்கூடாது. அதற்கு பதிலாக, வலிமை மற்றும் மதிப்புமிக்க ஒன்றை உருவாக்க ஒரு குழுவாக அல்லது குடும்பமாக இணைந்து பணியாற்ற கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இருவரும் எப்போதும் பிரச்சனைக்கு எதிராக இருக்கிறீர்கள், ஒருவருக்கொருவர் எதிராக அல்ல என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். எப்படி சரியான வழியில் நேசிப்பது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களோ, அதுபோலவே, மோதல்களை ஆரோக்கியமான முறையில் எதிர்கொள்ளும் கலையையும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

உறவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்
ஒரு புதிய குடும்ப சூழலில் நுழையும்போது, நீங்கள் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் புதியவராக இருப்பீர்கள். உங்கள் புதிய குடும்பம் மற்றும் துணையைப் பற்றி தெரிந்துகொள்ள அந்த ஆரம்பகால நேரத்தைப் பயன்படுத்துங்கள். முடிந்தவரை தரமான நேரத்தை அவர்களிடம் செலவிட முயற்சி செய்யுங்கள். அவர்களைப் பற்றிய புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். மேலும் அன்றைய உணவை எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்படி, நீங்கள் வழிவகை செய்யுங்கள். இது உங்களை குடும்பத்தில் உள்ள அனைவருடனும் நன்றாக இணைக்க உதவும்.

அன்பு மட்டுமே உங்களுக்கு தேவை
அன்பினால் எதையும் வெல்ல முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அன்பு இருக்கும் இடத்தில், சில கஷ்டங்களையும் மற்றும் பிரச்சனைகளையும் உங்களால் எளிதில் சமாளிக்க முடியும். எப்பொழுதும் நேர்மறை எண்ணங்களில் கவனம் செலுத்தவும், காதல் மற்றும் திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். அன்பு காட்டுதலும், பெறுதலும் வாழ்க்கையில் மிக அவசியம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

அதிகமாக ஏற்றுக்கொண்டு குறைவாக எதிர்பாருங்கள்
நீங்கள் ஏற்றுக்கொள்ளும் வாழ்க்கையை சரியாக இயக்குவதும், புதிய நபர்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய குறைவான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதும் முக்கியம். வாழ்க்கை அதன் சொந்த வழிகளில் இயற்கையாக வெளிப்படட்டும். மேலும் நீங்கள் வலுவான இணைப்புகளை உருவாக்க விரும்பினால் அவர்களுடன் இணக்கமாக இருங்கள். ஆனால், அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருக்காதீர்கள். ஏனெனில், எதிர்பார்ப்புகள் உங்களுக்கு ஏமாற்றத்தையே தரும்.



Click it and Unblock the Notifications