For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கள்ளக்காதலை தவிர்த்து கணவர்கள் தங்களது திருமண வாழ்க்கையை இப்படிதான் கெடுத்துக் கொள்கிறார்கள்

|

திருமண வாழ்க்கை சிதைந்து போவதற்கு இது தான் காரணம்

முந்தைய கால கணவர்கள் திருமண வாழ்க்கைக்கு ஒரு கருத்தை கற்பிப்பவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றைய கணவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்கிற கணவர்களாக மாறிவிட்டார்கள். மாடர்னாக இருப்பார்கள் ஆனால் பழைய பஞ்சாங்கத்தையும் பழைய மதிப்பீடுகளையும் மனதில் சுமந்து கொண்டு திரிபவர்களாக இருப்பார்கள்.

Husband Destroys His Marriage

பெண்ணியம் பேசக்கூடியவராக இருந்தாலும் பெண்களின் பாதுகாவலராகவே இன்று வரை இருந்து வருகிறார். வீட்டு வேலைகள் உட்பட எல்லா வேலைகளையும் பகிர்ந்தே செய்வார்கள். ஆனால் புதிய பழைய இரண்டு உலகையும் ரசிப்பார்கள் ஒன்றில் நிலையாக இருக்க மாட்டார்கள். ஆக இங்கு ஆண்கள் இப்படி இருக்க முற்படுகிறார்கள் ஆனால் அவர்களால் இருக்க முடிவதில்லை. அதனால் ஏற்படும் மனக்கசப்புகளை நிச்சயம் தீர்க்கவே முடியாது. எதுக்கு பாஸ் உங்களுக்கு பிடித்த மாதிரியான வாழ்வியல் கட்டமைப்பை மனைவியிடம் சொல்லிவிடுங்களேன். ஒன்று அவர் அதை ஏற்றுக் கொள்ளப்போகிறார். இல்லையென்றால் அதற்கு பழகிக் கொள்ளப்போகிறார். அதைவிட்டுட்டு பிடிச்ச மாதிரி நடக்க முயற்சி செஞ்சு கானல் நீர் விளையாட்டுலாம் ஆடாதீங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழி மாறிப் போனால்

வழி மாறிப் போனால்

இன்றைக்கு திருமணம் என்பது உளவியல் பொருத்தங்களை மையமாகக் கொண்டே நடக்கின்றன. இப்படி திருமணங்கள் நடக்கும் போது தான் சமநிலை ஏற்படும் என கருதுகிறார்கள். ஆனால் எப்போதெல்லாம் இந்த வரையறுக்கப்பட்ட ட்ராக்கில் இருந்து மாறிப் போகிறார்களோ அப்போதெல்லாம் அவர் தனது வாழ்க்கையில் பாதியை மட்டுமல்ல கல்யாணம் எனும் புனிதத்தன்மையையே கொன்று விடுகிறார்கள்.

Most Read:என்ன செஞ்சாலும் உங்க காதலர் கண்டுக்கவே மாட்டேங்கிறாரா? இதை செய்து பாருங்கள் உங்களை சுற்றி வருவார்

சர்வநாசமாகும் திருமணம்

சர்வநாசமாகும் திருமணம்

ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் திருமண வாழ்க்கை தொடர்வதற்காக எண்ணற்ற முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் ஒருவரது தேவையை மற்றொருவர் புரிந்துக் கொள்ளவில்லை எனில் திருமண வாழ்க்கை என்பது சர்வ நாசமாகிவிடும்.

மோசடிக்காரன் மட்டுமல்ல

மோசடிக்காரன் மட்டுமல்ல

கணவர் எப்போதெல்லாம் திருமண வாழ்க்கையின் முக்கிய அம்சமான நம்பிக்கையில் இருந்து விடுபடுகிறானோ அப்போதெல்லாம் அவனை மோசடிக்காரன் என்று பட்டம் கட்டிவிடுகிறோம். ஆனால் எல்லா ஆண்களும் அப்படி இருப்பதில்லை. ஏமாற்றுவது மட்டும் திருமண வாழ்க்கையில் பிரிவை ஏற்படுத்துவதில்லை. கள்ள உறவு வைத்திருப்பதை எதிர்த்தாலும், அதற்கு தடைகற்களாக நின்று குடும்பத்திற்காக இணைந்திருக்கும் குடும்பங்கள் எத்தனையோ இருக்கின்றன.

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில்லை

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில்லை

இந்த சமுதாயத்தில் ஆண்கள் மட்டும் தான் குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும் என எழுதப்படாத சட்டத்தில் எழுதி வாங்கிக் கொண்டது. உணவு, உடை, இருப்பிடத்தை அவள் மனைவி குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் , தன்பெற்றோர், தன் மனைவியின் குடும்பத்தின் தேவைகள் , தன் சொந்த பந்தங்கள், காது குத்து, திருமணம், மஞ்சள் நீராட்டு விழா என எல்லாத்துக்கும் சீர் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் ஒரு ஆண் இருக்கிறான். இதெல்லாம் பொதுவானவை என்றால் குழந்தைக்கு ம்யூசிக் வகுப்பு, பள்ளி கல்லூரி, மாதாந்திர செலவு நீண்டுக் கொண்டே போகிறது என செலவு நீண்டுக் கொண்டே இருக்கிறது.

சில சமயங்களில் இதை பூர்த்தி செய்யமுடியாத சூழல்கள் வரத்தானே செய்யும். வாழ்நாள் முழுக்க உழைத்தால் கூட இம்மாதிரியான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. இது மாதிரியான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத போது பெரும் சிக்கலுக்கு ஆளாகிவிடுகிறார்கள். பணத்தை வைத்து தினந்தோறும் சண்டை வந்தால் நிம்மதியாக வாழ முடியுமா என்ன? பின் பணத்தை தேடி அலையும் மிருகமாக மாறிப்போகி வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள்.

உங்க மேல நம்பிக்கை வச்சாத் தான் மனைவியும் உங்களை நம்புவாங்கலாம்

உங்க மேல நம்பிக்கை வச்சாத் தான் மனைவியும் உங்களை நம்புவாங்கலாம்

ஒரு கணவராக இந்த நிலையற்ற வாழ்க்கையில் ஒருபோதும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது. குடும்பத்தின் பாதுகாவலராக இருக்கக்கூடிய நீங்கள் உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லாமல் இருக்கும் போது நிச்சயம் உங்கள் மனைவி உங்களுக்கு உதவி செய்ய மாட்டார். உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் தான் உங்களுக்கு உங்கள் மனைவியும் குழந்தைகளும் தங்களது ஆதரவை தருவார்கள்.

மனைவி தான் முதலில் இருக்கணுமாம்

மனைவி தான் முதலில் இருக்கணுமாம்

பணத்தேவைகள் அதிகமாக ஆகும் போது வேலைப் பளுவும் அதிகமாக உள்ள நிறுவனங்களில் தான் போய் சேர வேண்டியிருக்கிறது. அப்படி போய்ச்சேருகிற போது அவர்களே உங்கள் வாழ்நாட்களை எல்லாம் பிடுங்கிக் கொள்கிறார்கள். தூங்குவதற்கே நேரமில்லாத போது எப்படி குடும்பத்துடன் நேரம் செலவிட முடியும். மனைவியும் மனிதர்கள் தானே ஒருவருடைய இருப்பு திடீரென்று இல்லாமல் போகும் என்னவாகும் மனம். இதனால் ஏற்படுகிற கருத்து முரண்பாடு கணவருக்கு எதிராகவே மாறிப்போகும்.

அப்படிப்பட்ட சூழலில் அவருடைய அழைப்புகளை ஏற்காமல் இருப்பது அவருடைய மெசேஜ்களை பார்க்க மறுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது உங்களை உயிருக்கு உயிராக நினைக்கும் காதலிக்கும் உங்களை பிடிக்காமல் போவதற்கான காரிய காரணங்களை நீங்களே உர்ய்வாக்கித் தந்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

Most Read:கல்யாண வாழ்க்கை சந்தோசமா அமைய இந்த 9 ஸ்டேஜை கம்ப்ளீட் பண்ணிருக்கனுமாம்

மனைவியின் விருப்பங்களுக்கு மதிப்பளியுங்கள்

மனைவியின் விருப்பங்களுக்கு மதிப்பளியுங்கள்

கணவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் இது மிகவும் முக்கியமானது. உங்களையே உலகமாக நினைக்கும் மனைவிகளின் சின்னச் சின்ன உணர்வுகளைக் கூட புரிந்து கொள்ளாமல் நடந்துக் கொள்வது தான். மனைவி உங்கள் மீதான காதலை வெளிப்படுத்தி குறுஞ்செய்தி அனுப்புகிறாள் என்றால் ஓகே. ஹிம்ம்ம்ம் என ஒற்றை வரியில் பதிலளிப்பது என்பது அவளது மனதை எவ்வளவு காயப்படுத்தும் என்பதை என்றாவது உணர்ந்ததுண்டா? இந்தச் சமயங்களில் தான் உங்கள் மனைவிக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. உங்களுக்கு பிடித்த மனைவியாக இல்லையோ என அப்போதும் கூட உங்களைப் பற்றியே சிந்திப்பவளாக இருப்பாள். மனைவியை புரிந்து கொள்ளுங்கள். அவள் தாரமல்ல. உங்களின் இளையத் தாய்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Husband Destroys His Marriage

Unlike the image of an ideal husband from past years, today’s men are expected to be a spot-on husbands, like be both modern yet walk in old values, believer of feminism yet serve as protector, take equal responsibility of housework yet keep fending for it. Like the best of both worlds; it doesn't mean that men back then weren't expected of a lot. Its just time has changed and so does people and their expectation. In this article we are sharing about How to Grow Seedless Watermelons in 5 Steps. Read on
Story first published: Friday, July 26, 2019, 16:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more