Just In
- 1 hr ago
கொரோனா சோதனை முடிவு நெகட்டிவாக வந்தாலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத்துத்தானாம்...!
- 3 hrs ago
கூச்ச சுபாவமுள்ள ஆண்கள் 'இந்த' விஷயத்தை பெண்களிடம் எப்படி சொல்வார்கள் தெரியுமா?
- 8 hrs ago
இன்றைய ராசிப்பலன் (23.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்கக்கூடும். உஷார்…
- 19 hrs ago
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
Don't Miss
- News
கபசுரக் குடிநீர் விநியோகம்... நிர்வாகிகளிடம் தெரிந்த சுணக்கம்... முன்மாதிரியாக களத்தில் ஸ்டாலின்..!
- Movies
மாரி செல்வாராஜூடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாடும் ரசிகாஸ்!
- Finance
900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை வாங்கிய முகேஷ் அம்பானி.. எங்கே தெரியுமா?
- Automobiles
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- Sports
‘சோற்றில் மறைக்கப்பட்ட முழு பூசணிக்காய்’.. நடராஜன் விலகலில் எழுந்த சர்ச்சை.. உண்மை காரணம் என்ன?
- Education
கோவையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? அழைக்கும் ICAR நிறுவனம்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆண்கள் கள்ள உறவில் ஈடுபடும்போது என்னென்ன காரணங்கள் சொல்லி மனைவியை ஏமாற்றுவார்கள் தெரியுமா?
காரணம் சொல்வது, சாக்கு சொல்வது, சமாளிப்பது என ஒருவர் செய்யும் தப்புக்கு எப்போதும் அதிலிருந்து தப்பிக்க வழி வைத்திருப்பார்கள். மோசடியில் ஈடுபடும் ஒருவர் தங்கள் துணையால் கையும் களவுமாக பிடிபடும்போது அதனை சமாளிக்க பாக்கெட்டில் ஏகப்பட்ட சாக்குகளை வைத்திருப்பார்கள்.
ஒவ்வொருவருக்கும் இந்த காரணங்கள் மாறுபட்டாலும் சில பொதுவான காரணங்கள் இருக்கின்றன. அவை நம் கண்களுக்கு முன்னாலே இருந்தாலும் நம்மால் அதனை தெரிந்து கொள்ள முடியாது. ஆண்கள் உறவில் ஏமாற்றும் போது கூறும் சில பொதுவான காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

வேலையைக் காரணமாக கூறுவது
பெண்களே, உங்கள் கணவர் எத்தனை முறை வேலையை அவர்களின் சாக்காக பயன்படுத்தினார்கள்? அநேகமாக பல முறை உபயோகப்படுத்தி இருப்பார்கள். நெருக்கடியான நேரத்தில் கூட, உங்கள் கணவர் அடிக்கடி வேலையைக் காரணமாக காட்டி அவசரமாக சென்றால், அவர்களுக்காக வேறு யாரோ காத்திருக்கிறார்கள். ஆண்கள் தங்கள் அலுவலகம் மற்றும் வேலைக்கு வரும்போது தங்கள் துணையால் அவர்களிடம் அதிகம் கேள்வி கேட்க முடியாது என்ற உண்மையை ஆண்கள் விரும்புகிறார்கள்.

நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தேன்
ஆண்கள் சிறிது நேரம் வெளியில் செல்ல விரும்புவார்கள் அல்லது தங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிட விரும்புகிறார்கள். இருப்பினும், இதையே காரணமாக வைத்து அவர் நண்பர்களுடன் வெளியே செல்வதற்குப் பதிலாக, இரவில் வேறொருவருடன் வெளியே இருப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களை ஒரு முறை குறுக்கு சோதனை செய்வது அவசியம்.

வாக்குவாதத்தைத் தொடங்குவது
சண்டையில் ஈடுபடுவது அவர்களுக்கான நேரத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழியாகும், அல்லது வேறொருவரைச் சந்திக்கச் செல்லலாம். சிறிது நேரம் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே ஆண்கள் சண்டைகளைத் தொடங்கியுள்ளனர். கடும் சண்டைக்குப் பிறகு அனைவருக்கும் தீர்வு தேவைப்படுவதால் அவர்களின் கூட்டாளர்களும் உடனடியாக சமாதானமாகிறார்கள்.

நண்பருக்கு உடல்நிலை சரியில்லை
உங்கள் கணவரின் நண்பர் எப்போதுமே உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாரா? நீங்கள் அறிந்திருக்கக்கூடிய மிகவும் தீவிரமான பிரச்சினையாக இல்லாவிட்டால் வாய்ப்புகள் இல்லை. நீங்கள் இருப்பதை மறந்து, அவர்களின் நண்பருடன் இருக்க வேண்டுமென்று காரணம் கூறி செல்லலாம், ஏனெனில் அவர்களின் இருப்பு அவர்களுக்கு ஆறுதலளிக்கும் என்று கூறுவார்கள். இருப்பினும், உண்மையில், அவர் வேறு ஒருவருடன் நேரத்தை செலவிட செல்லலாம்.

புதிய பொழுதுபோக்கு அல்லது ஆர்வத்தை உருவாக்குதல்
உங்கள் கணவருக்கு ஒரு புதிய பொழுதுபோக்கு அல்லது கற்றுக்கொள்வதற்காக நேரத்தை செலவிடுவது பற்றி ஒரு வெளிப்பாடு இருக்கும்போது அது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இருப்பினும், அந்த புதிய ஆர்வங்கள் ஒருவரைச் சந்திக்க அவர் வெளியே செல்ல உங்களை ஏமாற்றுவதற்கான காரணமாகக் கூட இருக்கலாம்.

செக்ஸில் மட்டும்தான் என்று கூறுவது
உங்கள் கணவனை நீங்கள் ரெட் ஹேண்டராகப் பிடித்திருந்தால், அது வெறும் செக்ஸ் தான் என்றும் அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்று கூறி சமாளிப்பார். யாராவது ஒரு உணர்ச்சிபூர்வமான விவகாரத்தை முடிக்கும்போது, அது மிகவும் மோசமானது. இருப்பினும், இது ஒரு தெளிவற்ற உடல் விவகாரத்தைத் தவிர வேறில்லை என்று கூறி அதை நியாயப்படுத்த ஆண்கள் முயற்சி செய்வார்கள்.