Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த 4 கேள்விகளை கேட்டால் உங்கள் துணை தடுமாறுகிறாரா? அப்ப கொஞ்சம் உஷாரா இருங்க...
உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையில் ஏதேனும் மாற்றத்தை காண்கிறீர்கள் என்றால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைக் கேட்டு பார்த்து அவர் பதில் கூறும் விதத்தை வைத்து புரிந்து கொள்ளுங்கள்...
திருமணமான அனைவருமே சந்தோஷமாக, ஒளிவு மறைவற்ற வாழ்க்கை வாழ தான் விரும்புவார்கள். எந்தவொரு ஆரோக்கியமான உறவுக்கும், வெளிப்படைதன்மை மற்றும் ஆரோக்கியமான பேச்சுவார்த்தை மிகவும் முக்கியம். பெஸ்ட்ஃலைப் காலிஸ்டோ ஆடம்ஸ்-ல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், ரிலேஸன்ஸிப் எக்ஸ்பெர்ட் ஒருவர் கூறுகையில், எந்த தம்பதியினர் தன் துணையுடன் அனைத்து வகையான விஷயங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு இடையே நம்பிக்கையும், உணர்ச்சிபூர்வமான பிணைப்பையும் உருவாக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

நீங்கள் உங்கள் துணையுடன் எவ்வளவு வெளிப்படைத்தன்மையுடன் பேசுகிறீர்களோ, அவரை அவ்வளவு நம்புகிறீர்கள் என்று அர்த்தம். அப்படிப்பட்ட சூழலில், உங்கள் துணை ஏதோ ஒரு விஷயத்தை மறைக்கிறார் அல்லது ஏமாற்றுகிறார் என்று நீங்கள் உணரும் பட்சத்தில், அவர் வெளிப்படையாக பேச மிகவும் சிரமப்படுவதை காண முடியும். இந்த பதிவில், தன் துணையை ஏமாற்றும் ஒருவர் எந்ததெந்த கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்கிறார் என்பதைப் பற்றி சொல்ல போகிறோம். உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையில் ஏதேனும் மாற்றத்தை காண்கிறீர்கள் என்றால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைக் கேட்டு பார்த்து அவர் பதில் கூறும் விதத்தை வைத்து புரிந்து கொள்ளுங்கள்...

நான் உங்கள் போனை பயன்படுத்தலாமா?
பொதுவாக, ஏதாவது திருட்டுத்தனம் செய்யும் ஒருவர் தான் தனது செல்போனை பிறருடன் பகிர்ந்து கொள்ள மறுப்பார்கள். சான்றளிக்கப்பட்ட நிபுணர் ஒருவர் கூறுகையில், உங்கள் துணை உங்களிடமிருந்து எதையாவது மறைத்தால் அல்லது உங்களை ஏமாற்றினால், அவர் தனது செல்போனை கண்டிப்பாக உங்களிடமிருந்து மறைப்பார் என்று கூறியுள்ளார். அத்தகைய சூழ்நிலையில், நான் உங்கள் செல்போனைப் பயன்படுத்தலாமா என்று நீங்கள் அவரிடம் கேட்டால், அவர் அதற்கு ஆயிரம் சாக்குபோக்குகளைக் கூறிவிட்டு, எப்படியாவது அந்த பேச்சை தட்டிக்கழிக்க பார்ப்பார், உங்களை வெளிப்படையாக புறக்கணிக்க முயல்வார்.

இவ்வளவு நேரம் வெளியே எங்கு சென்றிருந்தீர்கள்?
நீங்கள் உங்கள் துணையிடம் இப்படி ஒரு கேள்வியை நேரடியாக கேட்கும் பட்சத்தில் அதற்கு அவர் நேரடியாக பதிலளிக்காமல், சுற்றி வளைத்து சமாளிக்க பார்ப்பார். அதிலும், பதிலளிக்கும் போது அவரது நடத்தையில் பெரிய வித்தியாசத்தையும் நீங்கள் காணலாம். இப்படி உங்கள் துணை நடந்து கொண்டால் கண்டிப்பாக ஏதோ தவறு செய்கிறார் என்று அர்த்தம்.

நான் ஊருக்கு போவதில் நீங்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள்?
திருமண மற்றும் குடும்ப சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகையில், உங்கள் வாழ்க்கைத் துணை திடீரென்று உங்கள் விடுமுறையில் கொஞ்சம் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தாலோ அல்லது எங்கே போகிறாய், எப்போது வருவாய், எப்படிப் போகிறாய் போன்ற கேள்விகளை அதிகப்படியான ஆர்வத்தில் அடிக்கடி கேட்டால், பதிலளிக்காமல் சிறிது கால தாமதம் செய்யுங்கள். பின்னர், நான் வெளியே செல்வதில் நீங்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள் என்று ஒருமுறை கேட்டு பாருங்கள். உடனே, அவர் கோபப்பட்டாலோ அல்லது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பேச்சை மாற்றினாலோ, அது அவர் உங்களை ஏமாற்றுவதை குறிப்பதாகும்.

நீங்கள் என்னை ஏமாற்றுகிறீர்களா?
இது மாதிரியான ஒரு கேள்வியை நீங்கள் கேட்டு பிறகு, எந்த பதற்றமும் இல்லாமல் உங்கள் துணை பதிலளித்தால், எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். அதுவே, உங்கள் துணை இந்த கேள்வி கேட்டவுடன் பயந்தாலோ அல்லது திடீரென்று சாக்கு சொல்ல ஆரம்பித்தாலோ, அவரிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம்.



Click it and Unblock the Notifications