TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
மத்தவன் பொண்டாட்டி கூட பார்ட்டி பண்ணி கூத்தடிக்கிறது தான் சோஷியல் லைஃபா? - My Story #329
இந்த உலகத்துல அடிக்ஷன் இல்லாத ஆளே இல்ல. இத பல ஆய்வுகளும் ஊர்ஜிதம் பண்ணியிருக்கு. சிகரெட், கஞ்சா, குடி மட்டும் தான் போதைன்னு நாம சொல்லிட முடியாது. சிலரால டீ குடிக்காம இருக்க முடியாது, சிலரால பார்ன் படங்கள் பார்க்காம இருக்க முடியாது... ஏன் பப்ஜி விளையாட்டு கூட ஒரு அடிக்ஷன் தான்.
அடிக்ஷன்ங்கிறது நம்ம எல்லாருக்குள்ளயும் இருக்க ஒன்னு. ஆனா, மூணு பேருல ஒருத்தர் கிட்ட இந்த அடிக்ஷன் அளவுக்கு மீறி இருக்கும். அதனால, அவங்க வாழ்க்கையில நிறையா பாதிப்புகள், தாக்கங்கள் உருவாக அவங்களே காரணமா இருப்பாங்கங்கிறது தான் அதிர்ச்சியான விஷயம்.
என் வாழ்க்கையில என் மனைவிக்கு இருந்த அளவுக்கு மீறின அந்த பார்ட்டி லைஃப் போதையினால, என்னோட வர்க்கஹாலிக் அஅடிக்ஷனால என்னென்ன மாதிரியான தாக்கங்கள் எல்லாம் உருவாச்சுங்கிறத My Story மூலமா உங்க கூட பகிர்ந்துக்க விரும்புறேன். எல்லார் வாழ்க்கையும் ஒரு பாடம் தானே... இது உங்களுக்கோ இல்ல உங்கள சுத்தி இருக்கிற யாருக்காவது ஒரு பாடமா இல்ல, முன்னெச்சரிக்கையா அமையலாம்ங்கிறது என்னோட நம்பிக்கை.
(முழு தவறையும் என் மனைவி மேல சுமத்த நான் விரும்புல, அது நியாயமும் இல்ல, உண்மையும் இல்ல... தப்பு என் மேலையும் இருக்கு...)
பார்ட்டி லைப்!
என் மனைவிக்கு பார்ட்டி லைஃப் மேல அடிக்ஷன்னு சொன்னா... எனக்கு வர்க் லைஃப் மேல பெரிய அடிக்ஷன் இருந்துச்சு. என் மேனேஜர் என்ன பாராட்டிட்டா போதும் வர்க்கஹாலிக்னு யாராகிச்சும் சொல்லிட்டா போதும் ஓவர் டைம் தாண்டி வேலை பண்ணுவேன். எங்க ரெண்டு பேரோட இந்த அடிக்ஷன் எங்க குழந்தையோட வாழ்க்கையை பாதிச்சது.
நிச்சயம்!
எங்க கல்யாணம் பெரியவங்க பார்த்து நிச்சயம் பண்ணது. கல்யாணம் நிச்சயம் ஆன போதே என் மனைவி எனக்கு வீட்டு வேலை எல்லாம் பார்க்க வராது, தெரியாதுன்னு அதா ஒரு கண்டிஷனா சொல்லி, அதுக்கு சம்மதம் வாங்கிக்கிட்டாங்க. மாசம் இலட்ச ரூபாய்க்கு மேல சம்பளம் வாங்கிட்டு இருந்த எனக்கு இது ஒரு பெரிய விஷயமா தெரியல. அதுவும் இல்லாம, எதுவா இருந்தாலும் டைரக்ட்டா பேசுற என் மனைவியோட சுபாவம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அந்த சுபாவமே கல்யாணத்துக்கு பின்னாடி பிரச்சனையாவும் இருந்துச்சு.
வளைகாப்பு!
கல்யாணம் ஆகி சில மாசம் வாழ்க்கை நல்லா தான் போச்சு.. ஆறாவது மாசம் என் மனைவி கன்சீவ் ஆனாங்க. சாதாரணமா கன்சீவ் ஆனா வளைகாப்பு முடிஞ்சு அம்மா வீட்டுக்கு போவாங்க. என் மனைவி கன்சீவான மூணாவது மாசம் அம்மா வீட்டுக்கு போனவங்க தான். இப்ப என் குழந்தைக்கு நாலு வயசாச்சு... இப்ப வரைக்கும் என் மனைவி அவங்க அம்மா வீட்டுல தான் இருக்காங்க.
ஸ்ட்ரைட் பார்வேர்ட்!
கல்யாணம் ஆகுற வரைக்கும் அவங்க ஒரு ஸ்ட்ரைட் பார்வேர்ட் பொண்ணுன்னு தான் தெரியும். கல்யாணத்துக்கு அப்பறம் தான் அவங்களுக்கு பார்ட்டி லைஃப்'ல இருக்குற மோகம் தெரிய வந்துச்சு. இத ஏன் முன்னாடியே சொல்லலன்னு கேட்டா.. இதெல்லாம் பெரிய விஷயமான்னு அசால்ட்டா கேட்குறாங்க. இத கூடயே இருந்து திருத்தவோ, பக்கத்துல உட்கார்ந்து பேசி மனச மாத்தவோ எனக்கும் நேரம் கிடைக்கல.
டெல்லி!
ஒரு கட்டத்துல குழந்தை பிறந்த பின்ன நான் டெல்லிக்கு ஷிப்ட் ஆனேன். ஆரம்பத்துல ஏர் பொல்யூஷன் குழந்தைக்கு ஆகாதுன்னு காரணம் சொன்னாங்க... நானும் அக்ஸப்ட் பண்ணிக்கிட்டேன். ஆனா, அதே காரணமா வெச்சு இந்த நாலு வருஷமா நாங்க பிரிஞ்சு வாழுறதே முடிவா போச்சு.என் வேலைய விட்டு வர எனக்கு விருப்பமில்ல... என் கூட வந்திருந்தா பார்ட்டி பண்ண முடியாதுன்னு என் மனைவியும் டெல்லிக்கு வர விரும்பல.
அம்மா வீடு!
பெங்களூர்ல அவங்க அம்மா வீட்லயே இருக்காங்கன்னு தான் பேரு. என் குழந்தைக்கு அப்பா, அம்மாவவிட தாத்தா, பாட்டிய தான் அடையாளம் தெரியுது. ஒரு வகையில எங்க ரெண்டு பேர் கிட்ட வளரது விட தாத்தா பாட்டி கிட்ட வளர்ந்தா நல்லதுன்னு நினைக்கிறேன். ஆனா, பொண்ணையே பார்ட்டி வாழ்க்கையில இருந்து வெளிய கொண்ட வர முடியாத இவங்க, என் பொண்ண எப்படி நல்லா வளர்ப்பாங்கனு பெரிய கேள்வியும் இருக்கு.
மறுப்பு!
பேசாம எங்க அப்பா, அம்மா கிட்ட குழந்தையையும், அவளையும் வர சொன்னாலும் அதுக்கு வைப் காது கொடுத்து கேட்கிறது இல்ல. அதுக்கு காரணம் எங்க அவங்களோட பார்ட்டி வாழ்க்கை பாதிச்சிடுமோங்கிற பயம். என்ன தான் ஹை-பை வாழ்க்கை வாழ்ந்தாலும் உள்ளக்குள்ள இருக்க அந்த ட்ரெடிஷன் டைவர்ஸ் வாங்க மறுக்குது . இன்னொரு விஷயம் டைவர்ஸ் வாங்குனா அது என் மகளோட வாழ்க்கையை வலுவா பாதிக்கும்னு எனக்குள்ள பெரிய பயம் இருக்கு.
மகள்?
ஆனா, தொடர்ந்து இப்படியே போனா என் மகளையே நான் இழந்துடுவேனோன்னு பயமா இருக்கு. குழந்தைக்கு ரெண்டு வயசுல இருந்து நிறைய ஆரோக்கிய பிரச்சனை தாய் பால் சரியா கொடுக்காததால உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்குன்னு தெரிஞ்சவங்க, டாக்டர் எல்லாம் சொல்றாங்க.
ஹாஸ்ப்பிட்டல்!
மூணு, நாலு மாசத்துக்கு ஒரு தடவையாவது ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிடுறாங்க. இந்த வயசுலயே மாத்திரை, மருந்து, ஊசின்னு என் குழந்தையை அப்படி ஒரு நிலையில என்னால பார்க்கவும் முடியல. இதுல ஒன்றை வயசுல இருந்து டூட்லர்ல சேர்த்துவிட்டதால குழந்தைக்கு அப்பா, அம்மா மேல பெருசா ஈர்ப்போ, அன்போ இல்லாம போச்சு.
அடிக்ஷன்!
இந்த டிஜிட்டல் யூகத்துல எல்லாமே ஈஸியா கிடைச்சிடுது... பணம் சம்பாதிக்கு ஆயிரம் வழி இருக்கு. ஆனா, நம்ம சந்தோஷம், நமக்கு பிடிச்சவங்க கிட்ட தான இருக்கு. ஒருவேள நான் வர்க் அடிக்ஷன் இல்லாம மனைவி பக்கத்துலயே இருந்து அரவணைப்பா இருந்திருந்தா அவளோட பார்ட்டி லைஃப் மோகத்த குறைச்சிருக்கலாமோ தோணுச்சு. அதான்... டெல்லியில இருந்து பெங்களூர் திரும்ப வந்துட்டேன்.
தப்பு!
சந்தோஷம்ங்கிறது நம்மளோட எதிர்பார்ப்புல தான் இருக்கு. என் மனைவி பார்ட்டிய தேடி ஓடுனது தப்புன்னா... நான் பணத்த தேடி ஓடுனதும் தப்பு தான்... நம்ம எல்லாரும் ஏதோ ஒரு அடிக்ஷன்ல சிக்கி... அதுல இருந்து வெளிய வராம... அடுத்தவங்க அடிக்ஷன் தான் தப்புன்னு காரணம் சொல்லி தப்பிச்சுட்டு இருக்கோம். ஒரு கட்டத்துல, அந்த அடிக்ஷன் நம்ம வாழ்க்கையை முழுசா நாசம் பண்ணும் போது தான் மண்டையில உரைக்கும்.