For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கள்ளக்காதல் ஆப்... கணவன் மனைவி உறவுக்கு ஆப்பு - காரணங்களை அலசும் சர்வே

கார் டயருக்கு ஸ்டெப்னி இருக்கலாம், ஒரு செல்லில் 2 சிம் கூட போட்டு பேசலாம், ஆனால் குடும்ப உறவில் தம்பதியரிடையே எக்ஸ்ட்ரா துணை தேடுவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 20 சதவிகித ஆண்களும், 13 சதவிகித பெ

|

2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆப் 2017ஆம் ஆண்டுதான் இந்தியாவிற்கு வந்தது. கடந்த 2 ஆண்டுகளில் இந்த ஆப்பில் நடுத்தர வயதுடைய திருமணமாகாத 34 முதல் 49 வயதுடைய பெண்கள் அதிகம் இணைந்துள்ளனர். 5 லட்சம் பேர் பயன்படுத்தும் இந்த ஆப்பை பெங்களூரு, மும்பை, கொல்கத்தா நகரங்களில்தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

Extramarital relationship

இந்த ஆப்ஸ் பயன்படுத்தும் மக்களிடம் கிளீடன் நிறுவனம் சர்வே நடத்தியது. அந்த சர்வே முடிவில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன. கூடாவே இருக்கும் கணவன் அல்லது மனைவிக்கு துரோகம் செய்து விட்டு எக்ஸ்ட்ரா துணைகளிடம் தங்களின் மனதை பறி கொடுப்பதோடு நேரத்தை செலவிடுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கணவன் மனைவி உறவு நீடிக்க

கணவன் மனைவி உறவு நீடிக்க

தம்பதியரின் உறவு

கணவன் மனைவி உறவில் கள்ளத்தனம் இருக்கக் கூடாது. ஒருவருக்கொருவர் உண்மையாக இருந்தாலே கள்ள உறவுகள் தேவையிருக்காது. உண்மையை மறைத்தால்தான் கள்ளத்தனம் குடியேறும். இன்றைய ஸ்மார்ட் யுகத்தில் குடும்பத்திற்கும் கணவன் மனைவி இடையேயும் நேரத்தை செலவு செய்வதை விட ஸ்மார்ட் போனிலும் சமூக வலைத்தளங்களிலும் குடும்பம் நடத்துகின்றனர். இதுவே கணவன் மனைவி இடையேயான விரிசலுக்கு விதையை தூவுகிறது.

விதை மரமாகிறது

விதை மரமாகிறது

விரிசல் அதிகரிப்பு

விதையாக விழுந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து பெரிய விருட்சமாக வளர்ந்த பின்னர் கணவன் மனைவி இடையே வேறு துணைகள் நுழைகின்றனர்.

கிராமமோ நகரமோ கள்ள உறவுகள் அதிகரிக்க அதிகரிக்க நம்பிக்கை துரோகம் பற்றிய எண்ணங்கள் அதிகரித்து கொலை வரை செல்கிறது. இன்றைய நவீன யுகத்தில் கள்ள உறவுகளுக்காக ஆப் வரை ஆரம்பித்து முகம் தெரியாத நபருடன் உறவாக வைக்கிறது.

திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு

திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு

வேறு ஆண்களின் ஸ்பரிசம்

வேலைக்கு செல்லாமல் வீட்டிற்குள் இருக்கும் பெண்களுக்கு ஸ்மார்ட்போன்களே பலவித தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுக்கின்றன. அதே போல வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சக ஆண் ஊழியர்கள் வடிகாலாக இருக்கின்றனர். வேலைக்கு செல்லும் ஆண்கள் தன்னுடன் பணிபுரியும் சக பெண் ஊழியர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்றனர். தனது கணவன், மனைவி அல்லாத வேறு ஒருவரின் ஸ்பரிசத்தில் மகிழ்ச்சியடைவதாக உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

எக்ஸ்ட்ரா மெரிடியல் ஆப்

எக்ஸ்ட்ரா மெரிடியல் ஆப்

கணவனுக்கு தெரியாத உறவு

பிற நபருடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக எக்ஸ்ட்ரா மெரிடியல் ஆப் பயன்படுத்தும் மக்களிடம் கிளீடன் நிறுவனம் ஒரு சர்வே நடத்தியது. அந்த சர்வேயில் பத்தில் நான்கு பெண்கள் தெரியாத நபர்களுடன் பிளார்ட் செய்வது அவர்களின் கணவர்களுடன் அதிக நெருக்கத்தை உருவாக்குவதாக கூறியுள்ளனர். மற்றவர்களுடன் நெருக்கமாக இருப்பது போல தெரிந்தால் கணவர்கள் தங்களுடன் நெருக்கமாவார்கள் என்று கூறியுள்ளனர்.

துணைக்கு துரோகம்

துணைக்கு துரோகம்

வெறுமையே துரோகத்திற்கு காரணம்

இந்த ஆப் பயன்படுத்தும் மக்களில் 20 சதவிகித ஆண்களும், 13 சதவிகித பெண்களும் தங்களின் துணைக்கு துரோகம் செய்வதாக கூறியுள்ளனர். திருமணத்திற்கு பிறகான வெறுமையே கணவருக்கு துரோகம் செய்தற்கான முக்கியமான காரணமாக உள்ளதாக 77 சதவிகித பெண்கள் கூறியுள்ளனர். பத்தில் ஏழு பெண்கள் ஒரு திரில்லுக்காகவே இதுபோன்ற கள்ளத்தனமான உறவில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ரகசியத்திற்காக டேட்டிங் ஆப்

பாதுகாப்பு, ரகசியம் கருதி 48 சதவிகித பெண்கள் இதுபோன்ற டேட்டிங் ஆப்ஸ்களில் தங்களின் துணையை தேர்வு செய்ய விரும்புவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. கள்ளத் தொடர்பு ஆப் நடத்திய ஆய்வு பற்றிய தகவல் பலவித அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. கணவனோ, மனைவியோ தனது துணையிடம் அன்பாக அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்தில் கள்ள உறவுகள் ஏற்படுகின்றன. எனவே கணவனோ மனைவியோ அன்பாகவும் அனுசரணையாகவும் நடந்து கொண்டாலே போதும் கள்ள உறவுகள் ஏற்படுவதை தவிர்த்து விடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Extramarital relationship: women cheat on Husbands in India says Survey

Seven out of 10 women in India cheat on their husbands because they do not take part in domestic chores and the similar number of women turned unfaithful because their marriage had become monotonous a survey by extra-marital dating app Gleeden.
Story first published: Tuesday, July 16, 2019, 15:45 [IST]
Desktop Bottom Promotion