நாளை தல தீபாவளி கொண்டாடவிருக்கும் நடிகர், நடிகைகள்!

நாளை தல தீபாவளி கொண்டாடவிருக்கும் நடிகர், நடிகைகள்!

By John

தீபாவளி என்பது ஒளிமயமான திருநாள் கொண்டாட்டம். இனிப்பு, புத்தாடை, வெடி, உறவுகளுடன் சேர்ந்து கொண்டாடப்படும் இந்திய விழாக்களில் முதன்மையானது தீபாவளி. தீபாவளியில் மட்டுமே ஒரு கூடுதல் சிறப்பு உண்டு. வேறு எந்தவொரு பண்டிகையிலும் திருமணமானவர்களுக்கு மட்டுமே சிறப்பாக எதுவும் இல்லை, தீபாவளியை தவிர.

தீபாவளி ஒன்று மட்டுமே புதுமண தம்பதியினரின் முதலாமாண்டு தீபாவளி, தலை தீபாவளி என்று கூறி கூடுதல் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியிலும், இந்த ஆண்டும் திருமணம் செய்துக் கொண்டு, நாளை (06/11/2018) தலை தீபாவளி கொண்டாடவிருக்கும் இந்திய நடிகர், நடிகைகள், பிரபலங்கள் யார், யாரென்று இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நமீதா!

நமீதா!

மச்சான்ஸ் என்று கூறி தமிழ் ரசிகர்களை சொக்க வைத்துக் கொண்டிருந்த வெயிட்டு நாயாகி நமீதா, பிக்பாஸ் சீசன் ஒன்று முடித்து வந்த கையோடு தனது திருமணம் வேலைகளில் இறங்கினார். இவர் தனது நண்பரான வீரா என்கிற வீரேந்திர சௌத்ரி என்பவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24ம் நாள் திருமணம் செய்துக் கொண்டார்.

ஹிப்ஹாப் ஆதி!

ஹிப்ஹாப் ஆதி!

இண்டிபெண்டன்ட் இசை கலைஞராக இருந்து இசை அமைப்பாளராக வளர்ந்து. சமூக உணர்ச்சி கொண்ட போராட்டங்களில் கலந்துக் கொண்டு பிரபலம் அடைந்த ஹிப்ஹாப் ஆதி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ம் நாள் திருமணம் செய்துக் கொண்டார்.

பாவனா!

பாவனா!

பெரும் துன்பத்தில் இருந்து மீண்டு வந்த நடிகை பாவனா, முன்பே நிச்சயம் செய்யப்பட்ட தன் காதலரும் கன்னட திரையுலக தயாரிப்பாளருமான நவீனை இந்த ஆண்டு துவக்கத்தில் ஜனவரி மாதம் 22ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார்.

ஸ்ரேயா சரண்!

ஸ்ரேயா சரண்!

நீண்ட காலமாக காதலித்து வந்த தனது ரஷ்ய காதலரான ஆண்ட்ரேய் கோஸ்ஷி என்பவரை கடந்த மே மாதம் 12ம் தேதி மும்பையில் திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா. பிறகு 12 நாட்கள் கழிந்து உதய்பூரில் வைத்து பிரம்மாண்டமான முறையில் ரிஷப்ஷன் நடந்தது.

மேக்னா ராஜ்!

மேக்னா ராஜ்!

காதல் சொல்ல வந்தேன் திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான மேக்னா ராஜ், சிரஞ்சீவி சர்ஜா என்பவரை கடந்த மே மாதம் 2ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவரும் பத்தாண்டு காலமாக ஒருவரை ஒருவர் அறிந்திருந்தவர்கள். இவர்களது திருமணம் பெங்களூரில் சர்ச்சிலும், மற்றும் இந்து முறைப்படி ஒருமுறையும் நடைப்பெற்றது.

கீர்த்தனா!

கீர்த்தனா!

குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது வாங்கிய பார்த்திபனின் மகள் கீர்த்தனா கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி அக்ஷை என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஆண்டு தென்னிந்தியா திரையுலகில் நடந்த பெரிய திருமணங்களில் இதுவும் ஒன்று.

சோனம் கபூர்!

சோனம் கபூர்!

அணில் கபூரின் மகளும், பிரபல இந்தி திரையுலக நடிகையுமான சோனம் கபூர் இந்தாண்டு மே மாதம் 8ம் தேதி, தனது நண்பரும், காதலருமான ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துக் கொண்டார். நீண்ட நாட்கள் ஊடகங்களுக்கு செய்தி கொடுத்த இந்த வருடத்தின் பெரிய திருமணம் இது.

மிலிந்த் சோமன்!

மிலிந்த் சோமன்!

மாடல் மற்றும் நடிகரான மிலிந்த் சோமன் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி தன்னைவிட 26 வயது இளையவரான அங்கிதா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

ஆதவ் கண்ணதாசன்!

ஆதவ் கண்ணதாசன்!

கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பேரன் ஆதவ் கண்ணதாசன், வினோதினி என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார்.

ரூபினா!

ரூபினா!

ரூபினா திலைக் தனது நீண்ட கால காதலரான அபினவ் சுக்லாவை சிம்லாவின் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார்.

சோனியா கபூர்!

சோனியா கபூர்!

தொலைக்காட்சி நடிகை சோனியா கபூரும், இசை அமைப்பாளரான ஹிமேஷ் ரேஷ்மய்யாவும் கடந்த மே மாதம் 12ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் தங்கள் திருமணம் குறித்து செய்தியை சமூக தளத்தில் வெளியிட்டனர்.

நேஹா துபியா!

நேஹா துபியா!

காதல் பறவைகளாக பறந்து வந்த இந்திய நடிகை நேஹா - மாடல் மற்றும் நடிகரான அங்கத் பேடி கடந்த மே மாதம் 10ம் தேதி புது தில்லியில் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களது திருமணம் சீக்கிய முறையில் நடந்தது. நடிகர் அங்கத் தங்கள் காதலை திருமணம் வரை இரகசியமாக வைத்திருந்தார்.

அனுஷ்கா ஷர்மா!

அனுஷ்கா ஷர்மா!

நீண்ட காலம் காதலித்து வந்த விராத் - அனுஷ்கா ஷர்மா ஜோடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்தை நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து செய்த இந்த ஜோடி, இந்தியாவில் ரிசப்ஷனுக்கு அனைத்து பிரபலங்களையும் அழைத்திருந்தனர்.

ஜஸ்ட் மிஸ்!

ஜஸ்ட் மிஸ்!

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்; ரன்வீர் - தீபிகா படுகோனே; அம்பானி வீட்டு திருமணங்கள் போன்றவை ஜஸ்ட் மிஸ்ஸில் தல தீபாவளியை இந்தாண்டு தவறவிட்டுள்ளனர். இவர்களது திருமணம் இந்தாண்டு நிறைவுக்குள் நடக்கவிருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion