வேறு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைப்பவர்கள் ஏன் மனைவியை விட்டுப் பிரிய மாட்டாங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

திருமணம் ஆன பிறகு ஒரு ஆணுக்கு இன்னொரு பெண் மீது வரும் காதலை இந்த சமூகம் ஒரு போதும் ஏற்பதில்லை.

மனைவி அருகில் இருக்கும் போதே இன்னொரு பெண்ணுடன் எப்படி காதல் வரும். சரி, காதல் வந்தால் மனைவியை விட்டு பிரிய வேண்டியது தானே. மனைவியை விட்டுப் பிரியாமல் காதலியையும் விட்டு வர மனமில்லாமல் தவிக்கிறார்கள் என்று தெரியுமா?

கொஞ்சம் விசித்திரமான அதே நேரத்தில் யோசிக்க வேண்டிய கேள்வி இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாற்றம் :

மாற்றம் :

ஆண்களுக்கு ஒரு மாற்றம் தேவையாய் இருக்கிறது. என்ன தான் மனதிற்கு பிடித்தவள் மனைவியாக இருந்தாலுமே சிறுமாற்றத்திற்காக இன்னொருவள் தேவைப்படுகிறாள். அதற்காக திருமண வாழ்க்கையை பிரச்சனைக்கு உள்ளாக்க அவர்கள் விரும்பவில்லை.

ஏமாற்றும் கணவன் தந்திரமாக டபுள் கேம் ஆட நினைக்கிறார். ஒன்று தனக்கு சேவை செய்திடும், இந்த சமூகத்திற்கு பகட்டாய் தெரியும் கணவன், தந்தை என்ற அந்தஸ்த்துடன் வாழவேண்டும் அதாவது பிறருக்காக வாழ்கிறார்.இன்னொன்று தனக்காக தன்னுடைய சந்தோசத்திற்காக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

இங்கே மனைவியை விட்டு பிரியாததற்கு காரணம் எங்கே சமூகத்தில் தனக்கு இருக்கும் மதிப்பு குறைந்திடுமோ என்ற பயம் தான்.

மனைவி :

மனைவி :

திருமணத்திற்கு பிறகு வேறொரு பெண்ணுடன் காதல் ஏற்ப்பட்டால் மனைவியை பிரியாததற்கு இருக்கும் காரணங்களில் முதன்மையானது ஆனால் அதை வெளியே சொல்ல சங்கோஜப்படும் ஒன்று மனைவி மீதான சாஃப்ட் கார்னர்.

குடும்பம் என்ற அமைப்பிற்குள் வந்த பிறகு மீண்டும் வெளியே செல்ல தயக்கம் காட்டுவது இதனால் தான்.

இரட்டை சவாரி :

இரட்டை சவாரி :

பொதுவாகவே ஆண்கள் ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்க அதிகம் யோசிப்பார்கள். இந்த விஷயத்தில் முடிவே எடுப்பதில்லை என்பதில் தான் சிக்கல்.

திருமணம் செய்து கொண்டு என்னை நம்பி வந்த பெண்ணை பார்ப்பதா அல்லது நான் காதலிக்கும் பெண்ணைப் பார்ப்பதா என்ற குழப்பத்தில் முடிவெடுக்கத்தெரியாமல் இரட்டை சவாரி செய்துகொண்டிருப்பார்கள்.

கலாச்சாரம் :

கலாச்சாரம் :

வெளியே என்னதான் மார்டன், ட்ரெண்டி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் குடும்பம் என்று வரும் போது தன்னுடைய பாரம்பரியமான கலாச்சாரத்தை விட்டுத் தர முன்வருவதில்லை.

விவாகரத்து பெற்று இன்னொரு துணையுடன் செல்வது என்பது இன்னும் அதிர்ச்சியாக அணுகும் சமூகமாகத்தான் இருக்கிறது. சில நகர்ப்புறங்களில் இது சர்வ சாதரணமாக நடந்தாலும் உள்ளூர்களில் அப்படியல்ல.

குழந்தைகள் :

குழந்தைகள் :

எப்போதும் திரில்லிங் லைஃப் வேண்டும் என்கிறவர்கள் எமோஷனல் லாக் ஆவது குழந்தைகளிடத்தில் தான்.

குடும்பத்தின் மீது, மனைவி மீது சில நேரங்களில் வெறுப்பு உண்டாகும் கணவன்மார்களுக்கு குழந்தைகள் விஷயத்தில் கொஞ்சம் சிக்கல் உண்டு. தனக்குப் பிறந்த குழந்தை என்று அதீத பாசத்தை வைத்திருப்பார்கள்.

அந்த பாசத்தினாலும் குழந்தையை விட்டு பிரிய மனமில்லாமல் மனைவியோடு இருப்பார்கள்.

பயம் :

பயம் :

காதலியின் எதிர்காலம் குறித்த பயமாகவோ அல்லது தன் இணைக்கு இன்னொருவள் மீது காதல் என்று தெரிந்து மனைவி அதனை எப்படி எதிர்கொள்வாளோ என்கிற பயம் தான் பல கசப்புகளின் ஆரம்பமாக இருக்கிறது.

யாரேனும் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது? என்னை கார்னர் செய்துவிடுவர் என்ற பயத்தில் தான் முந்திக் கொண்டு கோபமடைந்து ஆவேசமடைபவனாக தன்னை மாற்றிக் கொள்கிறான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Cheating husband doesn't leave his wife?

Why Cheating husband doesn't leave his wife?
Subscribe Newsletter