Latest Updates
-
நவம்பர் 06, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த துயரமான நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க.. -
இராவணனுக்கு தங்க நகரமான இலங்கை எப்படி கிடைத்தது? அதை இராவணனுக்கு கொடுத்தது யார் தெரியுமா? -
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும் -
தீபாவளிக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரண களமா இருக்கப்போகுது..
உறவில் 80/20 ரூல் என்றால் என்ன?இதனால் உண்டாகும் நன்மைகள் என்ன?
இங்கு தம்பதிகள் அறிந்துக் கொள்ள வேண்டிய 80/20 ரூல் பற்றி கூறப்பட்டுள்ளது.
கணிதத்திலும், அறிவியலிலும் மட்டுமல்ல, இல்வாழ்விலும் கூட சில ரூல்களை ஃபாலோ செய்தால் தான் ரிசல்ட் பெஸ்ட்டாக இருக்கும். அதில் திருமணமான தம்பதியர்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய 80/20 ரூல் என்ன என்பது பற்றி அறிந்துக் கொள்ளலாம் வாங்க...

உணவில் இருந்து உறவு வரை...
இந்த 80/20 ரூல் என்பது நாம் உண்ணும் உணவு முதல், உறவின் உணர்வுகள் வரை எல்லா அம்சங்களிலும் பொருந்தும். இது உங்கள் உடல், பொருளாதாரம், உறவு என அனைத்தும் ஆரோக்கியமாக அமைய உதவும்.

நூறு சதவீதம்!
நாம் விரும்புவது போலவே அனைத்தும் நூறு சதவீதம் அமைந்துவிடாது. குறைந்தபட்சம் 10 - 20% நாம் நினைப்பதற்கு எதிர்மாறாக தான் அமையும். இது, பொருளாதார லாப நஷ்டம், ஆரோக்கியத்தின் நிலை மற்றும் உடலுறவு வரை நாம் கண்கூட பார்க்க முடியும்.

விட்டுக்கொடுக்க வேண்டியது!
உங்கள் துணையின் தனிப்பட்ட விருப்பம், சுதந்திரம் என நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டியது தான் இந்த 20%. இதை நாம் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த முயன்றாலும் அது எதிர்மறை விளைவுகளை தான் பரிசளிக்கும். இதை நீங்களும் உங்கள் துணையிடம் இருந்து எதிர்பார்க்க வேண்டிய ஒன்று தான்.

விருப்ப - வெறுப்பு!
அவரவருக்கு என தனி விருப்பங்களும், வெறுப்புகளும் இருக்கும். இதில் தலையிட முடியாது. தனியாக பயணிக்க வேண்டும், நண்பர்களுடன், உறவினர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும், புத்தகம் எழுதுவது, வேறு விஷங்கள் கற்பது என பலவன இதில் அடங்கும்.

செக்ஸிலும் கூட...
இந்த 80/20 ரூல் தாம்பத்திய உறவிற்கும் பொருந்தும். தாம்பத்தியம் என்பதும் கூட அதுவாக அமைய வேண்டும். 80% இருவரின் ஒருமித்த விருப்பமும், 20% அவரவருடைய தனிப்பட்ட விருப்பமும் இதில் அடங்கும்.

முக்கியமானது!
எப்போது இந்த 80 குறைய ஆரம்பித்து, தனிப்பட்ட வாழ்வெனும் 20 அதிகரிக்க ஆரம்பிக்கிறதோ, அன்று முதல் உறவில் பிரிவு அதிகரிக்க ஆரம்பிக்கும்.
எனவே, உங்கள் துணையின் சுதந்திரம் கெடாமல் 80 கட்டிக்காப்பாற்றி கொள்வது உங்கள் திறமை.



Click it and Unblock the Notifications
