For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இருபது வயதில் கர்ப்பமானால் இது தான் நிலை - My Story #038

எதிர்காலம் குறித்த தேடலுடன் ஒரு பெண் காதல் வலையில் சிக்கினால் அவள் எதிர்கொள்ள யதார்த்தமான பிரச்சனையின் தாக்கமே இந்த கதை

By Volga
|

ஒரு பெண் தன் வாழ்வின் பக்கங்களை நினைவு கூறும் பதிவு இது. பெண்கள் எளிதாக எல்லாவற்றையும் செய்து விடுகிறார்கள். அவர்களின் அவசரத்தனமான முடிவினால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. விட்டுக் கொடுக்கும் தன்மையே இல்லை என்று நாமெல்லாம் இங்கே பட்டியல் வாசித்துக் கொண்டிருக்க..... இங்கே ஒரு பெண் தன் காதலையும் ,குழந்தையையும் எப்படி அணுகுகிறாள் என்பதே கதை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீங்கள் சந்தித்திருப்பீர்கள் :

நீங்கள் சந்தித்திருப்பீர்கள் :

இக்கதையில் வருகின்ற பெண்ணை நாம் சந்தித்திருப்போம். இப்பாத்திர படைப்பில் உங்களையும் பொறுத்தி பார்க்க முடியும். காதலை அவள் எப்படி பார்க்கிறாள். அந்த காதலின் சாட்சியாக வந்த குழந்தை என்னவாகிறது என்பதை தெரிந்து கொள்ள தொடருங்கள்

35 நாட்கள் ஆகிவிட்டது இன்னமும் மாதவிலக்கு வரவில்லை பெரும் அவஸ்தையான ஒன்றென்றாலும் வழக்கமாக மாதவிலக்கு வரும் நாளிலிருந்து ஒரு நாள் கடந்தாலும் மனம் தவியாய் தவிக்கிறது. நாள் முழுவதும் அதே சிந்தனை இன்று ஆகிடுமா? ஒன்றிரண்டு நாட்கள் தள்ளிப்போவதுண்டு ஆனால் இவ்வளவு நாட்கள்... என்றால் கொஞ்சம் பயம் தான்.

மிடில் கிளாஸ் :

மிடில் கிளாஸ் :

நிச்சயமாய் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் சூழல் என்னிடத்தில் இல்லை. வயது இருபது. இப்போது தான் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கிறேன்.மிடில் க்ளாஸ் குடும்பம் எனக்கடுத்து இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள்.

அப்பா கொண்டு வரும் சொற்ப வருமானத்தை மிச்சம் பிடித்து இறுக்கி எங்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறாள் அம்மா. வீட்டிற்கு சிரமம் கொடுக்க கூடாது என்று பகுதி நேரமாக வேலைக்கு சென்று கொண்டே என் படிப்பை தொடர்கிறேன்.

கருக்கலைப்பு :

கருக்கலைப்பு :

அதே நேரத்தில் ஒரு குழந்தையை கருவிலேயே அழிப்பதென்பதும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அந்த காரியத்தை அவ்வளவு எளிதாக என்னால் செய்ய முடியும் என்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

அது ஒரு உயிர்.

வேறு என்ன வழியிருக்கிறது. குழந்தையை பெற்று வேறு யாருக்காவது தத்து கொடுத்துவிடலாம். யோசனை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இது சாத்தியமா? யாரிடம் சென்று கொடுப்பது,அவர்களை எப்படி அணுகுவது? இது யாருடைய குழந்தை என்று கேட்டாள் என்ன சொல்வது?

என்னைச் சுற்றி ஓடும் குழந்தை :

என்னைச் சுற்றி ஓடும் குழந்தை :

அதை விட குழந்தையை பெற்றெடுக்கும் உடல் வலிமையும் அதனை தத்து கொடுப்பது, அந்த பிரிவை ஏற்பது போன்ற மன வலிமையும் என்னில் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

ச்ச... இன்னும் எதுவுமே கன்ஃபார்ம் பண்ணல டேட் ஐஞ்சு நாள் தள்ளிப் போனா உடனே இது தானா இதுவா மட்டும் இருக்க கூடாது. என்று வேண்டிக் கொண்டேன். அப்படியே நான் கர்ப்பமாக இருந்தாலும் அந்த குழந்தையை பெற்று வளர்க்க வேண்டும். கற்பனைக் குதிரை ஓடத்துவங்கியது சிறிய ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை என்னைச் சுற்றி ஒடுகிறது.

யாரைப் போல இருக்கும் :

யாரைப் போல இருக்கும் :

உருவத்தில் அப்படியே அவனை ஒத்திருந்தது. இன்னொரு முறை பார்க்கையில் என்னைப் போல இருந்தது. குழந்தை என்பது ஒரு ப்ராடெக்ட். ஒன்று என்னைப் போல இருக்கும் இல்லை அவனைப் போல இருக்கும்.

ஒவ்வொரு முறையும் அந்த குழந்தையை பார்க்கும் போதும் அவனின் முகமே நினைவிற்கு வந்தால்..... வந்தால் என்ன செய்வது. வாழ்க்கையில் மறக்க நினைக்கிற முகமாயிற்றே அது. கனத்தது.குழந்தை வேண்டும், குழந்தையை கொடுத்த அவன் வேண்டாமா?

பாலியல் வன்புணர்வு :

பாலியல் வன்புணர்வு :

அப்படியானால் நீ பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டாயா என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது.அல்லது காதல் என்ற பெயரில்..... உன்னை மிரட்டி போதும் நிறுத்துங்கள்.

நான் ஒருவனை காதலித்தேன். காதலித்தேன் என்பதை விட ஒருவனுக்கு பாலியல் தொழிலாளியாக அடிமையாக கிடந்தேன் என்று சொல்லலாம்.அவனுக்கு நான் சுகமளிக்கும் ஒரு போதை அவ்வளவு தான். நினைத்தாலே உடலெல்லாம் நடுங்குகிறது. அந்த நாட்களை முற்றிலுமாக மறக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மறந்து விட வேண்டும்.

பயம் :

பயம் :

இன்றும் அவனது பைக் சத்தம், சட்டையின் நிறம், அவன் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் எங்கே கேட்டாலும் பார்த்தாலும் வியர்த்துக் கொட்டி விடுகிறது. அந்த எண்ணமே எனக்கு வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். என் சிந்தனைகளை மாற்றிக் கொள்ள முயற்சித்துக் கொண்டேயிருப்பேன்.

அப்போது எனக்கு ஆறுதலாய் ஒரு கரம் தேவைப்பட்டது. என்னை அன்பு செலுத்தும் ஒரு ஜீவன் தேவைப்பட்டது. கண்கொத்தி பாம்பாய் காத்திருந்து என்னை கொத்தினான். அவனிலிருந்து சிறு துளியாய் வெளிப்பட்டு அன்பே எனக்கு போதுமானதாய் இருந்தது. ஆனால் அவனுக்கு முழுமையாய் தேவைப்பட்டேன்.

அன்புக்காக ஏங்குதல் :

அன்புக்காக ஏங்குதல் :

அன்புக்காக ஏங்கி அவனையே நம்பி சென்ற பிறகு சட்டென உதறித்தள்ளிவிட்டு வர முடியாது. இப்படியிருக்கையில் நீங்கள் எளிதாக சொல்லலாம். அவனை விட்டு வெளியே வா உதறித்தள்ளிவிட்டு வா, இன்னும் ஏன் அவனுக்கு அடிமையாய் இருக்கிறாய் என்று பொதுவாக வசனங்களை வீசிவிட்டு நகர்ந்து விடுவீர்கள் உங்களுக்கெல்லாம் persuasion, Stockholm syndrome பற்றியெல்லாம் ஏதேனும் அறிமுகம் உண்டா?

இவை எல்லாவற்றையும் விட உங்கள் மனம் சிந்திப்பதைப் போலவே அதே பாதையில் தான் எல்லாருடைய சிந்தனையும் இருக்கும் என்று நினைப்பது முட்டாள்தனமானது தானே. நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் அவன் என்ன செய்வான்? எப்படி ரியாக்ட் செய்வான் என்று கற்பனையில் ஓட்டிப் பார்த்தேன்.

அபார்ட் பண்ணிரு :

அபார்ட் பண்ணிரு :

சோ... வாட்? அபார்ட் பண்ணிரு என்று பதில் வரும். ஒரு வேளை அவன் வா, கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்வானா? என்று எவ்வளவோ முயற்சி செய்தும் கற்பனையில் கூட அது நடக்கவில்லை.

நான் கர்ப்பம். என்னுடைய சுதந்திரம் முடிந்தது. இனி என் கவனம் முழுவதும் குழந்தை வளர்ப்பிலேயே தான் கழியும்.என்னுடைய செயலும் சிந்தனையும் அந்த குழந்தையைச் சுற்றியே தான் இருக்கும்.

இந்த சமூகத்தில் தனியொரு பெண்ணாக ஒரு குழந்தையை வளர்த்து விட முடியுமா? அப்பா எங்கே என்ற கேள்வியை என் குழந்தை கேட்டால் என்ன சொல்வேன்? எப்படி சமாளிப்பேன்.அதை விட இந்த சமூகம் என்னை எப்படி பார்க்கும்,

என்னை கேள்விகளால் துளைத்தெடுத்து விட மாட்டார்கள்? வாழ்நாள் முழுமைக்கும் போராடிக் கொண்டேயிருக்க வேண்டுமா?

அவனைத் தேடி... :

அவனைத் தேடி... :

என்னை வேண்டாமென்று தூக்கியெறிந்து விட்டு சென்றவர்கள் பின்னால் வழியச் செல்வதில் எனக்கு உடன்பாடு துளியும் இல்லை.என்னுடைய சுதந்திரத்தை அடகு வைத்து எனக்கு துளியும் பிடிக்காத வாழ்க்கையை சகித்துக் கொண்டு வாழ்வதெல்லாம் என்னால் முடியாத ஒன்று.

குழந்தையை பெற்றுக் கொண்டாள்.... இது அவனுடைய குழந்தையும் தானே. நான் வேண்டாமென்று நினைத்தாலும் சூழல்கள் அவனைத்தேடி போகச் சொல்லுமே...

ஆம், அந்த நிலை மட்டும் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது.வேண்டாம் குழந்தையே வேண்டாம்.அவனின் அடிமையாக வாழ வேண்டும் என்றால் எனக்கு அவனுடைய குழந்தையே வேண்டாம்.அவனா? குழந்தையா என்று குழம்பி உட்கார்ந்திருந்தேன். ஒன்று மட்டும் நிச்சயம் அவன் வேண்டாம் என்பது தான் அது. அப்படியானால் அவனின் குழந்தையும் எனக்கு வேண்டாம்.

ஆம் இந்த குழந்தை எனக்கு வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real life story of young girl explains her sexual life

Real life story of young girl explains her sexual life
Desktop Bottom Promotion