செக்ஸை தவிர, நடுவயதில் மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 8 விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

திருமணமான புதியதில் வாழ்வில் நாம் அதிகம் தேடுவோம். வாழ்க்கை ஒரு சாகச பயணம் போல மகிழ்ச்சியாக அனுபவிக்க தான் எண்ணுவோம். உண்மையான இல்லற வாழ்க்கை பற்றி நீங்கள் அறிவது உங்களது நடுவயதாக தான் இருக்கும். செக்ஸ் என்பதை தாண்டிய மகிழ்ச்சி, இன்பம் அளிக்கும் தருணம் அது.

நடுவயதில் நீங்கள் வாழும் வாழ்க்கை தான் உங்கள் உங்கள் வாழ்நாளின் முக்கிய அங்கமாக இருக்கும். இந்த வயதில் தனது கணவனிடம் ஒரு மனைவி எதை எல்லாம் அதிகம் எதிர்பார்ப்பாள் என இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒப்பிடுதல்!

ஒப்பிடுதல்!

உன் வயது தானே, அந்த பெண் இன்றும் இளமையாக இருக்கிறார், நீ வயதானது போன்று ஆகிவிட்டாய் என அழகு, வடிவத்தை ஒப்பிட்டு பேசக்கூடாது.

ஏளனமாக நினைக்கக்கூடாது!

ஏளனமாக நினைக்கக்கூடாது!

வீட்டில் இருக்கும் மனைவியை, உனக்கு என்ன வேலை, வெட்டியா தானே இருக்க... என்று ஏளனமாக நினைக்க கூடாது. வீட்டின் மேலாண்மையை பார்த்துக் கொள்பவர்களே அவர்கள் தான் என்பதை உணர வேண்டும்.

சந்தேகப்படுற மாதிரி நடந்துக்க கூடாது!

சந்தேகப்படுற மாதிரி நடந்துக்க கூடாது!

நடுவயதில் தங்கள் மீது கணவனுக்கு ஈர்ப்பு குறைந்துவிடும், வேறு பெண்கள் மீது ஆசைக் கொள்வார்கள் என எண்ணுவார்கள். இது இருக்கத்தான் செய்யும். எனவே, இதை உண்மையாகும் படி நீங்கள் நடந்துக் கொள்ள கூடாது.

ஆரோக்கியத்தின் மீதான அக்கறை!

ஆரோக்கியத்தின் மீதான அக்கறை!

நாற்பது வயதுக்கு மேல் ஆரோக்கியத்தில் மெல்ல, மெல்ல தாக்கம் உண்டாகும். எனவே, இந்த வயதில் உங்கள் மீதும், குடும்ப உறுப்பினர் ஆரோக்கியத்தின் மீதும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகள் வளர்ப்பில் அதிக கவனம்!

பிள்ளைகள் வளர்ப்பில் அதிக கவனம்!

பிள்ளைகள் தவறு தான் அதற்கு அம்மா தான் காரணம் என கூறி திட்டக் கூடாது. அப்பா ஆகிய உங்கள் மீதும் தவறு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பணம், வேலை என்று மட்டுமின்றி, பிள்ளை வளர்ப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

ஊக்கம் அளித்தல்!

ஊக்கம் அளித்தல்!

உங்கள் மனைவியிடம் தனித்திறமை இருந்தால் அதை ஊக்குவிக்க வேண்டும். சிறுதொழிலாக இருக்கலாம். கைவினைப்பொருட்கள் செய்யும் திறமை இருக்கலாம், அவற்றை ஊக்குவிக்க வேண்டும்.

சேமிப்பு திட்டங்கள்!

சேமிப்பு திட்டங்கள்!

சேமிப்பு, வீடு, இன்சூரன்ஸ் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக செட்டில் ஆகிருக்க வேண்டும்.

கனவானாக இருக்க வேண்டும்!

கனவானாக இருக்க வேண்டும்!

வீட்டில் மட்டும் இன்றி, சமூகத்திலும் நல்ல பெயர் பெற்று விளங்க வேண்டும். நான்கு பேர் மதிக்கும் வண்ணம் நடந்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Rather Than Sex, your Wife will Expect these 8 things From you in Middle Age

Rather Than Sex, your Wife will Expect these 8 things From you in Middle Age!
Story first published: Thursday, March 2, 2017, 13:43 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter