Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
மாதவிடாய்க்கு பிறகு தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகளின் கவனத்திற்கு!
சராசரியாக 45 - 50 வயதில் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றுவிடும். இதற்கு பிறகு தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சரியா? அல்லது மாதவிடாய் நின்ற பிறகு பெண்கள் உறவில் ஈடுபட விரும்புவார்களா? இல்லையா? அவரது மனநிலை மற்றும் உடல்நிலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலும், மாதவிடாய் நின்ற பிறகு உறவில் ஈடுபடுவது பெண்களுக்கு வலி மிகுந்ததாக இருக்கும். அவர்களால் முன்பு போல உறவில் ஈடுபட முடியாது. ஏனெனில், அவர்களுக்கு வலி அதிகமாக ஏற்படும். எனவே, மாதவிடாய் நின்ற பிறகு தாம்பத்திய உறவில் ஈடுபடுபவர்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்....

செய்திகூறு # 1
மாதவிடாய் முற்றிலுமாக நின்ற பிறகு பெண்களுக்கு உணர்ச்சியின் அளவு குறைந்திருக்கும். அவர்களுக்கு உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற தூண்டுதல் குறைந்திருக்கும். மேலும், உறவில் ஈடுபட்டாலும் முந்தைய அளவிற்கு அவர்களால் இன்பம் காண இயலாது.

செய்திகூறு # 2
வலி மிகுந்த உடலுறவு! மேலும், மாதவிடாய் முடிந்த பிறகு உறவில் ஈடுபடும் போது, சில பெண்கள் மிகுந்த வலியை உணர்வதாக கூறுகின்றனர்.

செய்திகூறு # 3
மாற்று வழிகள்! உறவில் ஈடுபட உணர்சிகளை தூண்ட என்ன மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் கூட, அவை பெரியதாக பயனளிக்காது என மாதவிடாய் முடிந்த பெண்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

செய்திகூறு # 4
மாதவிடாய் நின்ற பிறகு உறவில் ஈடுபடுவதால் பெண்களுக்கு, தூக்கமின்மை, மன அழுத்தம், ஆரோக்கியப் பிரச்சனைகள், சிறுநீர் கட்டுப்படுத்துவதில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் எழுகின்றன.

செய்திகூறு # 5
அப்படியும், நீங்கள் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று எண்ணினால், முதலில் அவர்களுக்கு உணர்ச்சியை தூண்டும் வண்ணம் செய்த பிறகு ஈடுபடுவது நல்லது. இல்லையேல் கண்டிப்பாக அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிக வலியை உணர்வார்கள்.

செய்திகூறு # 6
நிபுணர்கள், மாதவிடாய் நின்ற பிறகு உறவில் ஈடுபடும் தம்பதிகள், முதலில் ஃபோர்ப்ளேவில் ஈடுபடுவதால் பெண்களை உணர்ச்சி ரீதியாக மேலோங்க வைக்க முடியும் என தெரிவிக்கின்றனர்.

செய்திகூறு # 7
மேலும், மாதவிடாய் முடிந்த பிறகு தாம்பத்யத்தில் ஈடுபடும் ஆண்கள், முதலில் உங்கள் துணையிடம் அவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள், அவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் என்னென்ன என்று தெரிந்துக் கொள்ள வேண்டும்.

செய்திகூறு # 8
பெண்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் மாதவிடாய் நின்ற பிறகு உறவில் ஈடுபடுவது சிரமமற்றதாக இருக்கும். மேலும், இது ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை சீராக்கும் எனவும் கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications
