உங்க மனைவியின் சோகத்தை போக்க இத முயற்சி பண்ணியிருக்கீங்களா?

Posted By:
Subscribe to Boldsky

உண்மையாகவே மனைவி, காதலி என தங்களது துணை அழுதாலோ, புலம்பினாலோ, எதையாவது எண்ணி அதிகமாக வருந்தினாலோ அதை உடனே போக்க வேண்டும் என தான் ஆண்கள் எண்ணுவார்கள். ஏனெனில், இது நாளுக்கு நாள் தொடர ஆண்களின் உற்பத்தி திறன் குறையும் என்பது எந்த ஆய்வாளர்களும் கண்டறியாத உண்மை.

உடலுறவில் ஈடுபட்ட பிறகு ஆண்கள் செய்யும் இரண்டு மிகப்பெரிய தவறுகள்!

பெண்களிடம் இருக்கும் ஒரு கெட்டப் பழக்கம் என்னவெனில், காரணமே கூறாமல் மணிக்கணக்கில் கண்ணை கசக்குவார்கள். அதற்குள் ஆண்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவார்கள்.

உடல்பருமனால் தாம்பத்தியத்தில் ஏற்படும் பாதிப்புகள்...

இரண்டு நிமிட நூடுல்ஸ் போல மிக விரைவாக இவர்களது சோகத்தை போக்குவது சற்றுக் கடினமான காரியம் தான். ஆனாலும், இதை நீங்கள் முயற்சித்தால் சோகம் மறைந்து, காதல் மேகம் சூழும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது...

Image Courtesy: Postize Facebook Page

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படுக்கை விரிப்பு

படுக்கை விரிப்பு

ஒரு படுக்கை விரிப்பை எடுத்துக் கொள்ளுங்கள், அதை சமமான தரையில் விரித்து வையுங்கள்.

உங்கள் துணை

உங்கள் துணை

உங்கள் துணை எங்கிருந்தாலும் அவரை அலேக்காகத் தூக்கிக் கொண்டு படுக்கை விரித்து வைத்திருக்கும் இடத்திற்கு செல்லுங்கள்.

ஆராரோ ஆரிராரோ

ஆராரோ ஆரிராரோ

அவரை அந்த படுக்கை விரிப்பில் படுக்க வைத்து, கொஞ்ச நேரம் தாலாட்டுங்கள்.

ரோல்

ரோல்

அவர் மீண்டும் மீண்டும் தேம்பி அழுதால், அந்த படுக்கை விரிப்புடன் அவரை சுற்றி மூட்டைக் காட்டுங்கள்.

சௌகரியமான இடம்

சௌகரியமான இடம்

சோபா, மெத்தை போன்ற இடத்திற்கு மீண்டும் தூக்கி சென்று படுக்க வையுங்கள். அந்த இடம் அவருக்கு சௌகரியமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவணைப்பு

அரவணைப்பு

அந்த ரோலுடன் அவரை அவ்வாறே கட்டியணைத்து இறுக்கமாக அரவணைத்துக் கொள்ளுங்கள். (கொஞ்சம் ஆசை வார்த்தையுடன் கொஞ்சவும் செய்யலாம்.)

பிடித்த சேனல்

பிடித்த சேனல்

அவருக்கு பிடித்தமான சேனலை ஆன் செய்து டிவி பார்க்க வையுங்கள். முடிந்த வரை உணர்ச்சிப்பூர்வமான நிகழ்ச்சிகளை போடாமல், சிரிக்க வைக்கும் நிகழ்ச்சிகளை காண வையுங்கள்.

உணவு

உணவு

அவருக்கு பிடித்த, அல்லது உங்களுக்கு நன்கு சமைக்க தெரிந்த உணவை சமைத்தோ, அல்லது கடையிலோ கூட வாங்கி வந்து ஊட்டிவிடுங்கள்.

சூடு

சூடு

உங்கள் உணவு தான் அவரது சோகத்தை போக்கி குளிர்ச்சிப் படுத்த வேண்டுமே தவிர, அவரது கண்ணீரின் சூடு உணவை குளிர்ச்சிப் படுத்திவிடக் கூடாது.

நல்ல உறக்கம்

நல்ல உறக்கம்

கண்டிப்பாக அவர்களுக்கு பிடித்த நிகழ்ச்சியும் உணவும், உங்களது அன்பும், அரவணைப்பும் அவரது சோகத்தைப் போக்கிவிடும் என நம்புவோம்.

மைன்ட் வாய்ஸ்

மைன்ட் வாய்ஸ்

மூட்டைப்பூச்சி-ய புடிச்சி நசுக்கி போட்டு போக வேண்டியத விட்டுட்டு... மொதல்ல புடிக்கனுமா, அப்பறம் உரல்-ல போட்டு நங்கு நங்குன்னு சாகுற வரைக்கும் குத்தனுமா?? என்னடா நொன்னைகளா'ங்கிற மைன்ட் வாய்ஸ் ஏதோ கேக்குற மாதிரி இருக்கா...!!! எங்களுக்கும் இஸ்க்கு இஸ்க்கு என்று தான் கேட்கிறது!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Care For Your Sad Partner

How To Care For Your Sad Partner, read here in tamil.
Subscribe Newsletter