Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
இல்வாழ்க்கையை இன்பமாக்கும் சில விசித்திரமான விஷயங்கள் - அறிவியல் கூற்று!!!
இல்வாழ்க்கை ஓர் இன்பமான வாழ்க்கையின் அடித்தளம் என்பது நமது சான்றோர்கள் கூறி சென்றது ஆகும். ஆனால், அந்த வாழ்கையை அப்படி இன்பாமாக ஆக்கிட அல்லது அமைத்துக்கொள்ள எது காரணமாய் இருக்கிறது என்பது தானே கேள்வி.
உங்களை ஒருவர் லவ்வுகிறாரா.. என்பதை இதை வைத்துக் கண்டுப்பிடித்துவிடலாம்!!!
அனைவருக்கும் தான் திருமணமாகி இல்வாழ்க்கை ஆரம்பமாகிறது. ஆனால், அவர்கள் எல்லாருமே இன்பமாக தான் வாழ்கின்றனரா என்ன? இல்லறத்தின் இன்பமாக வாழ்க்கையை தேர்வு செய்வது மூன்று முடிச்சுகள் மட்டும் அல்ல.
18 வயதிற்கு முன்பே தங்களது கற்பை இழந்த பிரபலங்கள் - அம்மாடியோவ்!!!
அதனுள் பின்னப்பட்டுள்ள வாழ்வியல் முடிச்சுகளை யார் சரியாக அவிழ்க்க தெரிந்து வைத்திருக்கிறார்களோ, அவர்கள் தான் இன்பாமான வாழ்க்கையை வாழ்கின்றனர். ஆயினும் கூட அறிவியல் சில விசித்திரமான விஷயங்களினால் கூட திருமண வாழ்க்கை இன்பமாக அமைய வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறது, அது என்னவென்று இனி காணலாம்....

வித்தியாசமான திருமணம்
பெரிய அளவில் அல்லது வித்தியாசமான முறையில் ஏற்படும் திருமண வாழ்க்கைகள் இன்பமாக அமைவதாக கூறப்படுகிறது. வர்ஜீனியா பல்கலைகழகத்தில் நடத்திய ஓர் ஆய்வில் 500க்கும் மேற்பட்ட தம்பதிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் இக்கருத்தை தெரிவித்துள்ளனர்.

எலும்பு வலுவாக இருப்பவர்கள்
நல்ல எலும்பு வலிமை உள்ளவர்களது வாழ்க்கை இன்பமாக அமைகிறதாம். 632 பேரை வைத்து இல்லறத்தை பற்றி நடத்திய ஓர் ஆய்வில், எலும்பின் வலிமை குறைவாக இருந்தவர்கள் தான் இல்வாழ்க்கை நலமாக இல்லை என்பதை போல கூறியிருக்கின்றனர்.

அழகான மனைவி
ஆண்ட்ரியா மெல்ட்சர் எனும் மனநல சிறப்பு நிபுணர் நான்கு ஆண்டுகளாக 450 தம்பதிகளுக்குமத்தியில் நடத்திய ஓர் ஆய்வில், அழகான மனைவி உள்ளவர்களின், அதாவது தனது மனைவி தான் அழகு என்று நம்பும் கணவன்மார்களின் வாழ்க்கை மிகவும் இன்பமாக அமைகிறதாம்.

சுமாரான கணவன்
இது தான் கொஞ்சம் வேடிக்கையாகவும், பெண்களின் மனதை அப்பட்டமாகவும் வெளிப்படுத்துகிறது. பெண்கள் தங்களை விட சுமாரான கணவனை தான் எதிர்பார்கின்றனர். ஏனெனில், அப்போது தான் அவர்கள் தங்கள் மீது மிகவும் அக்கறையாகவும், அன்பாகவும் இருப்பார்கள் என்பது பெண்களின் எண்ணமாம். (அடிப்பாவிகளா!!!! பாதகத்திகளா!!!! இப்படி எல்லாமா யோசிப்பிங்க!!)

தனித்தனியான பொழுதுபோக்கு
எந்த தம்பதிகள் தங்களுக்கான பொழுதுபோக்குகள் தனித்தனியாக வைத்திருக்கிறார்களோ, அவர்களது வாழ்க்கை இன்பமாக அமைகிறதாம். அதாவது, ஒரே பொழுதுபோக்காக அல்லாமல், வெவ்வேறு வகைகளில் இருப்பது. இதைப் பற்றிய ஓர் ஆய்வறிக்கை திருமணம் மற்றும் இல்லறம் என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள்
சமூகத்தில், சீக்கிரமாக குழந்தை பெற்றுகொண்டால் இல்லறத்தில் இன்பம் குறைந்துவிடும் என்பார்கள். ஆனால், சீக்கிரமாக குழந்தைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளின் வாழ்க்கையில் தான் இன்பம் அதிகமாகிறதாம்.



Click it and Unblock the Notifications
