Latest Updates
-
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்..
கணவன் மனைவி மத்தியில் மறைக்க கூடாத ஏழு இரகசியங்கள்!!!
இரகசியங்கள் காக்கப்பட வேண்டியவை தான். ஆனால், ஆண் பெண், கணவன் மாணவி உறவுகளில், ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் இரகசியம் பாதுகாக்கும் போது, அது சந்தேகம் எனும் விஷச்செடி உறவின் மத்தியில் வளமாய் வளர கருவாகிவிடும்.
கணவனாக இருந்தாலும் கூட, பெண்கள் ஆண்களிடம் மறைக்கும் அந்தரங்க விஷயங்கள்!!!
உங்கள் இருவருக்குள் வளமான, நிரந்தரமான உறவு நிலைக்க வேண்டுமெனில் சிலவற்றை நீங்கள் இரகசியம் காக்க கூடாது. அப்படி கணவன் மனைவிக்கு மத்தியில் மறைக்க கூடாத இரகசியங்கள் குறித்து இனி காணலாம்...
உங்களை ஒருவர் லவ்வுகிறாரா.. என்பதை இதை வைத்துக் கண்டுப்பிடித்துவிடலாம்!!!

நகைச்சுவை உணர்வு
சிலருக்கு நிறைய நகைச்சுவை உணர்வு இருக்கும். ஆனால், அதை நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் உடன் பணிபுரிவோரிடம் மட்டும் தான் வெளிக்காட்டுவார்கள். வீட்டில் மனைவியிடம் தான் ஓர் கர்ஜிக்கும் சிங்கம் என்பது போல விறைப்பாகவே இருப்பார்கள். இது ஒருவேளை உங்களுக்கு உங்கள் துணையை பிடிக்கவில்லையோ என்ற எண்ணத்தை உண்டாக்கிவிடும். எனவே, உங்கள் துணையிடமும் சிரித்து மகிழ்ந்து பேசுங்கள்.

காதல் கண்டறிந்து வெளிப்படுத்துங்கள்
சிலருக்கு அவர்களது துணையின் மீது அளவில்லாத காதல் இருக்கும். ஆனால் அதை வெளிப்படையாக காட்டமாட்டார்கள். சிலருக்கு, அவர்களது துணைக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதை கூட அறிந்திருக்க மாட்டார்கள். அதற்கு அவர்களது துணையும் கூட ஓர் காரணம். உங்கள் உறவு நிரந்திரமாக நிலைக்க வேண்டும் எனில், ஒருவருக்கு ஒருவர் நன்கு புரிதலோடு இருக்க வேண்டியது அவசியம்.

நெரித்துக் கொள்ள வேண்டாம்
ஒருவொருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்கிறோம் என்று, இருவரது நிலையையும் நெருக்கிக் கொண்டு மூச்சுத் திணறலோடு வாழ வேண்டாம். இருவரும் அவரவருக்குப் பிடித்ததை செய்யுங்கள், அது உங்கள் துணையை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் பார்த்துக்கொண்டாலே போதுமானது.

வெளிப்படையாக பேசுங்கள்
உடல், மனது மற்றும் உணர்வு ரீதியாக எந்த ஒளிவுமறைவும் இன்றி வெளிப்படையாக பேச வேண்டியது அவசியம். உங்கள் நண்பரோடு பகிர்ந்துகொள்வதை ஏன் உங்கள் துணையுடன் பகிர்ந்துக்கொள்ள கூடாது? கணவன் மனைவி சிறந்த நண்பர்களாக திகழ வேண்டும். இது, உங்கள் உறவை நிலைக்க வைக்கும் தூணாக இருக்கும்.

உங்களுக்கு என்ன வேண்டுமோ அதற்காக உழைக்க வேண்டும்
பணத்திற்காகவோ, உங்களது துணையின் ஆசைக்காகவோ உழைப்பதை நிறுத்தி, உங்கள் மனதிற்கு எது சந்தோஷத்தை தருகிறதோ அதற்காக உழைக்க வேண்டும். ஏனெனில், உங்கள் சந்தோஷத்தை பிடிக்காத துணை, உங்களின் சரிப் பாதியாக இருக்க இயலாது. எனவே, கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி, அவரவர் மனதிற்கு பிடித்த வேலைகளை செய்தலும், துணையை அவர்களுக்கு பிடித்த வேலைகளை செய்ய ஊக்குவித்தலுமே உங்கள் வாழ்க்கையை நல்ல நிலைக்கு எடுத்து செல்ல உதவும்.

உங்கள் பாதையில் பயணம் செய்யுங்கள்
நீங்கள் எந்த பாதையில் செல்கிறீர்கள் என்பதை உங்கள் துணை நன்கு அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு சரியான உறுதுணையாகவும், உங்களை அறிந்தும் வாழ இயலும். எனவே, நீங்கள் செல்லும் பாதையை அவர்களும் அறிந்திருக்க வேண்டும் மற்றும் புரிந்துக்கொள்ள வேண்டும். அதற்கெல்லாம் மேலாக, நீங்கள் செல்லும் பாதை நல்ல பாதையாக இருக்க வேண்டும்.

இன்பாமான நாட்களை மறக்க வேண்டாம்
உங்கள் இருவருக்குள் நிகழ்ந்த இன்பான தருணங்களை மறந்துவிடாதீர்கள். அந்த நினைவுகள் தான் உங்கள் இருவருக்குள்ளும் எழும் சண்டைகளை போக்கும் சரியான மருந்து. மற்றும் உங்களது இன்பமான தருணங்களையும் மறைக்காமல் கூறுங்கள். உங்கள் நண்பர் வட்டாரத்தில், அலுவலகத்தில், உங்களை மகிழ்வித்த தருணங்களை, உங்கள் துணையோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

இரகசியங்கள்
உங்கள் இருவரை பற்றிய இரகசியங்கள் உங்கள் இருவருக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே தவிர, தனித் தனியாக பாதுகாக்கப்பட கூடாது. எனவே, உங்கள் உடல் இரண்டாக இறந்தாலும், உயிர் ஒன்றாக பிணைந்து வாழ்தலே , ஓர் நிரந்தரமான உறவை மலர வைக்கும்.



Click it and Unblock the Notifications
