Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
தலை தீபாவளி எப்படி கொண்டாட வேண்டும்? ஏன்?
வாழ்நாளில் ஒரே ஒருமுறை நடக்கும் சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. அந்த தருணங்களை நீங்கள் தவறவிட்டீர்கள் எனில், மீண்டும் கிடைக்கவே கிடைக்காது. முதல் நாள் கல்லூரி, முதல் காதல் தெரிவித்தல், முதல் மாத சம்பளம், பிறந்த குழந்தையின் உச்சி நுகர்தல் என நிறைய இருக்கின்றன. இதில் தலை தீபாவளி என்பது மிகவும் முக்கியமானது.
திருமணமான புதுமண தம்பதியர் வாழ்க்கையில் பிரகாசமான பண்டிகை மற்றும் செம ஜாலியான கொண்டாட்டங்கள் நிறைந்தது இந்த தலை தீபாவளி. முக்கியமாக நீங்கள் இங்கு கற்றுக் கொள்ள வேண்டியது சிக்கனத்தை. ஓர் குடும்பஸ்தனாக உருவெடுத்திருக்கும் உங்களுக்கு எப்படி எல்லாம் செலவு வரும், அதை எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டும் என்று நீங்கள் இந்த தலை தீபாவளியைக் கொண்டாடி தெரிந்துக் கொள்ளலாம்.
ஏனெனில், இதுநாள் வரை நீங்கள் தான் மற்றவர் காலில் விழுந்து பணம் வாங்கியிருப்பீர்கள். ஆனால், இன்று முதல் வாய் நிறைய மாமா என்று கூறி, பை நிறைய பணத்தை பறித்து செல்ல சில செல்லமான வாண்டுகள் வந்து செல்லும். இனி எப்படி தலை தீபாவளி கொண்டாட வேண்டும் என்று பார்க்கலாம்...

சல்லிக்காசு செலவில்ல
தலை தீபாவளியை கொண்டாட காலம் காலமாக மாமனார் வீட்டுக்கு செல்வது தான் வாடிக்கை. இங்கு உங்களுக்கு சல்லிக்காசு செலவு இருக்காது, தப்பி தவறி நீங்களாக செலவு செய்திடவும் கூடாது. உங்கள் வீட்டில் இருந்து மாமனார் வீட்டிற்கு சென்றவுடனே ஆட்டோ, டாக்ஸி எதுவாக இருந்தாலும் இறங்கியவுடன் வீட்டை நோக்கி வணக்கம் மாமா, அத்தை எப்படி இருக்கீங்க என்று நடையை மட்டும் கட்டுங்கள். கட்டணத்தை மாமா கட்டிக்கொள்வார்!

எண்ணெய் குளியல்
காக்கா குளியல் குளிக்கும் நமக்கு எதுக்கு எண்ணெய் குளியல் என்ற பெனாத்தல் வேண்டாம். எண்ணெய் குளியல் மற்றும் கங்கா ஸ்நானம் போன்றவற்றை முடித்து வந்தால் தான் புதிய பட்டு பீதாம்பரம் உடை எல்லாம் கிடைக்கும். புது டிரஸ் வேணுமுன்னா போய் எண்ணெய் தேச்சு குளிங்க!!

கெடச்சத வாங்கி மாட்டிக்கிங்க
எப்படியும் பொன் போன்ற பெண்ணை கொடுத்தவர்கள், தலை தீபாவளிக்கும் அவர்களால் முடிந்த அளவிற்கு தங்கத்தில் எதாச்சும் போடுவாங்க. இல்ல, இல்ல எனக்கு இது தான் வேண்டும், இன்னும் நல்ல பெருசா வேணும் என்று அடம்பிடிக்க வேண்டாம். கெடச்ச வரைக்கும் லாபம் என்று இருந்துவிடுங்கள். (அவனவன் பொண்ணே கிடைக்காம இருக்கான், ஹேப்பியா இருங்க அண்ணாச்சி!!)

காலை உணவு
காலை உணவை சிற்றுண்டி என்றும் கூறுவார்கள். அதை இங்கு நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தலை தீபாவளி என்பதால், நிறைய பலகாரம், கார உணவு, ஸ்பெஷல் ரெசிபி என கண் முன்னே பலவகையான உணவுகள் பரிமாறப்படும். அதைக் கண்டதும் காஞ்ச மாட்டை போல புகுந்து விளையாடிவிட வேண்டாம், பிறகு "பின்" விளைவுகள் அபரிமிதமாக இருக்கும். பாத்து சூதானம் மாப்புள!!!!

பாராட்டுதல் முக்கியம்
கூச்சம், கெத்து இதையெல்லாம் தூர எறிந்துவிட்டு. சமைதவர்களை பாராட்டுதல் அவசியம். அதற்கென மிகவும் அசடு வழிந்துகொண்டே பேச வேண்டாம். கொஞ்சம் கெத்து மெயின்டெயின் செய்தல் அவசியம்.

பட்டாசு
பட்டாசு வெடிக்க கூப்பிட்டால், அய்யோ சுற்றுசூழல் மாசுபாடு, காசை கரியாக்கும் காரியம் என்று பேசாமல், இந்த ஒருநாள் அளவாக வெடித்து கொண்டாடுங்கள். நீங்கள் பட்டாசு வெடிக்கும் ஸ்டைலைக் கண்டு வாண்டுகள் வாயைப் பிளக்க வேண்டும், மச்சினிச்சி அசந்து போய் உச்சுக் கொட்ட வேண்டும். ஓவர் பில்டப் செய்து கோமாளி ஆகிவிட வேண்டாம். பிறகு காலாகாலத்திற்கும் கேலி செய்து கொன்றுவிடுவார்கள்.

நாட்டு நடப்பு
தலை தீபாவளி எனும் போது எப்படியும் தீபாவளிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு சென்று, முடிந்த ஓரிரு நாட்கள் கழித்து தான் "வூடு" திரும்புதல் இருக்கும். எனவே, இந்த ஓர் வார பயணத்தில் உங்க மனைவியின் வீட்டார் மத்தியில் நீங்கள் நல்ல பெயர் வாங்க வேண்டியது அவசியம். எப்படியும் சொந்தக்காரர் எவராவது நாட்டு நடப்பு பற்றி எல்லாம் பேசி உங்கள் ஞானத்தை சோதிப்பார். அதற்கெல்லாம் பதில் கூறுகிறேன் என்று உளறிக்கொட்டிவிட வேண்டாம். தெரிந்ததை மட்டும் பேசுங்கள். தெரியாவிட்டால் சோர்வாக இருக்கிறது என்று உறங்க சென்றுவிடுங்கள்.

பேக்கப் அண்ட் எஸ்கேப்
எண்ணெய் குளியலில் ஆரம்பித்து வகை வகையான பலகாரங்களை சாப்பிட்டு, ஏகபோகமாக ஓய்வெடுத்து முடித்த பிறகு மாமனார், மாமியார் முகத்தில் புன்னகை காய்வதற்குள் பேக்கப் அண்ட் எஸ்கேப் என்று கிளம்பி விடுங்கள்! இல்லாங்காட்டி சும்மானாச்சுக்கும் கூட மறுபடியும் கூப்பிடமாட்டாங்க!!!



Click it and Unblock the Notifications