Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
வெள்ளைக்கார பெண்கள் ஏன் இந்திய ஆண்களை திருமணம் செய்ய விரும்புகின்றனர்?
இன்றைய கால கட்டத்தில் கலப்பு திருமணம் என்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. கலப்பு திருமணம் என்பதை விட, மேற்கத்திய வெள்ளைகார பெண்களை திருமணம் செய்வது இப்போது ஒரு ஃபேஷனாகி விட்டது. பல இந்திய ஆண்கள் அழகான வெள்ளைகார பெண்களை மணப்பதற்காகவே வெளிநாட்டிற்கு குடி பெயர்கிறார்கள்.
மறுபுறம் இந்த வெள்ளைக்கார பெண்களோ, இந்திய ஆண்களை திருமணம் செய்வதற்கு பல காரணங்களை வைத்துள்ளனர். உங்களுக்கு ஒரு வெள்ளைக்கார பெண் காதலியாகவோ அல்லது மனைவியாகவோ இருந்தால், ஏன் வெள்ளைக்கார பெண்கள் உயரமான, கருமையான, அழகிய இந்திய ஆண்களுக்காக விழுகின்றனர் என்ற சில காரணங்கள், இதோ உங்களுக்காக.
பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!
இந்திய ஆண்களை ஷெர்வானி அல்லது பந்த்கலா உடைகளில் பார்த்தால் வெள்ளைக்கார பெண்கள் அப்படியே சொக்கி போவார்கள் என நம்பப்படுகிறது. வெளிநாட்டு ஆண்களை போல் அல்லாமல் இந்திய ஆண்கள் குடும்ப பிணைப்புடன் இருப்பதாலும் கூட, அவர்களை தேர்ந்தெடுக்கின்றனர் வெள்ளைக்கார பெண்கள்.
இந்திய ஆண்கள் சிறப்பாக சமைப்பதாலும் கூட அவர்கள் மீது நாட்டம் கொண்டுள்ளனர் வெள்ளைக்கார பெண்கள். இந்திய உணவுகளையும், வாசனை மிக்க மசாலாக்களையும் வெள்ளைக்காரர்கள் விரும்புவதுண்டு. இதுப்போக, அவர்கள் இந்தியாவின் ஒரு அங்கமாக வகிக்க விரும்புவதற்கு பெருமை வாய்ந்த நம் இந்திய பண்பாடும் கூட ஒரு காரணமாக விளங்குகிறது.
காதலித்து திருமணம் செய்ய ஏன் தென்னிந்திய ஆண்கள் தான் சிறந்தவர்கள்?
இப்போது இந்திய ஆண்களின் மீது வெள்ளைக்கார பெண்கள் காதல் கொள்வதற்கான சில காரணங்களை பார்க்கலாமா...

இந்திய காதல்
மரங்களின் பின் சுற்றி, பூங்காவில் காதல் செய்து, அங்குள்ள நாற்காலிகளில் அமர்ந்து விளையாடி செய்யும் காதலில் வெள்ளைக்கார பெண்களுக்கு நாட்டம் அதிகம். இந்த இந்திய வகை காதலில் அவர்களுக்கு அலாதி விருப்பம்.

அவர்களின் IQ அளவு
இந்திய ஆண்கள் வெள்ளைக்கார ஆண்களை விட அதிகமாக படித்தவர்கள்; அதிகமாக சம்பாதிப்பவர்கள். இந்திய ஆண்களை வெள்ளைக்கார பெண்கள் மணக்க விரும்புவதற்கு இதுவும் கூட ஒரு காரணமாகும். நிதி சார்ந்து எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் மனதில் இருக்கும்.

அர்ப்பணிப்பு
இந்திய ஆண்கள் என்று வந்து விட்டால் அர்ப்பணிப்பை எண்ணி கலங்க தேவையில்லை. அவர்களை நல்ல படியாக நடத்தினால், அவர்களுடன் சுலபமாக காதலில் விழுந்து விடலாம். அதன் பின் உங்களை அட்டை போல் ஒட்டிக் கொள்வார்கள். அதனால் தான் என்னவோ இந்திய ஆண்களை திருமணம் செய்ய வெள்ளைக்கார பெண்கள் விரும்புகின்றனர்.

திருமணம் எப்போதும் நிலைக்கும்
மேற்கத்திய நாடுகளில் உள்ள விவாகரத்து வீதத்தை ஒப்பிடுகையில், இந்தியாவில் அது குறைவே. தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவரால் மட்டுமே காதலிக்கப்பட விரும்பும் வெள்ளைக்கார பெண்கள், இந்திய ஆண்களை திருமணம் செய்ய விரும்புவார்கள்.

வெள்ளை குமரிகள்
இந்திய ஆண்களுக்கு வெள்ளை தோல் என்றாலே ஒரு தனி மோகம் தான். அதனால் ஒரு வெள்ளைக்கார பெண்ணை திருமணம் செய்வது அப்படிப்பட்ட ஆண்களுக்கு கட்டாயமாகி போகிறது.

வாழ்வதற்கு அதிக செலவாகாத இடம்
வெளிநாட்டை காட்டிலும் இந்தியாவில் வாழ்வதற்கான பொருளாதார செலவு குறைவு. அதனாலும் கூட இந்திய ஆண்களை திருமணம் செய்து இங்கு வாழ விருப்பப்படுவார்கள்.

காதல் பூமி
இந்தியா என்பது காமசூத்திரத்தின் பூமியாகும். காம சுகத்தை முழுமையாக அனுபவிக்கும் எண்ணத்திலும் கூட இந்திய ஆண்களை திருமணம் செய்ய அவர்கள் விரும்புவார்கள்.

இந்திய மரபுகளும் பண்பாடுகளும்
இந்திய ஆண்களை வெள்ளைக்கார பெண்கள் விரும்புவதற்கு இந்தியாவின் வளமையான மரபுகளும், பண்பாடுகளும் கூட ஒரு காரணமாக விளங்குகிறது.

இந்திய திருமண சடங்குகளின் மீதான தாகம்
சில நேரங்களில் வெள்ளைக்கார பெண்களுக்கு இந்திய திருமண சடங்குகளின் மீது காதல் ஏற்படும். நம் இந்திய நாட்டின் திருமண சடங்குகள் மற்றும் பாரம்பரியங்களின் மீது அவர்கள் நாட்டம் கொள்வதாலும் கூட அவர்கள் இந்திய ஆண்களை தேர்ந்தேடுப்பார்கள்.

குளிர்விப்பது சுலபம்
இந்திய ஆண்களை குளிர்விப்பது சுலபம் என நினைக்கிறீர்களா? இந்திய ஆண்கள் தங்கள் காதலி அல்லது மனைவியுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவார்கள். அவர்களின் மீது முழு கவனத்தையும் செலவழிப்பார்கள். இந்திய ஆண்களை வெள்ளைக்கார பெண்கள் தேர்ந்தெடுக்க இதுவும் கூட ஒரு காரணமாகும்.
இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...



Click it and Unblock the Notifications
