மகிழ்ச்சியாக வாழும் தம்பதியர்களின் மகிழ்ச்சிக்கு காரணமான 5 இரகசியங்கள்!!!

By Boopathi Lakshmanan

கல்யாணம் என்ற பேச்சைக் கேட்டாலே நீங்கள் அலறிக் கொண்டு ஓடும் படி பலரும் செய்து வருவார்கள். ஆனால், அந்த ஒரு விஷயம் மட்டுமே திருமண உறவை நிர்ணயம் செய்வதில்லை. அது மிகவும் கடினமான பணியாக உங்களுடைய வாழ்வில் இருந்தால், நீங்களோ அல்லது உங்களுடைய துணைவரோ சுயநலம் கொணடவராக இருப்பது தான் காரணமாக இருக்கும்.

திருமணம் என்பது ஒரு பணி தான், நான் அதை மறுக்கப் போவதில்லை, ஆனால் மற்றவர்கள் சொல்வது போல் அல்லாத மகிழ்ச்சியான பணி இது. இரவுப் பொழுதைப் பற்றி நீங்கள் நினைத்துப் பார்க்க செய்யும் பணியாகவும், காலையில் மகிழ்ச்சியாக எழுந்திருக்கவும், விடுமுறையே வேண்டாம் என்று சொல்லும் வகையிலும் இந்த பணி இருக்கும்.

அவசியம் படிக்க வேண்டியவை: திருமண பந்தத்தை மூழ்கடிக்கும் ஐந்து பழக்கங்கள்!!!

உங்களுடைய திருமண வாழ்க்கை எளிதாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த விதிகளை பின்பற்றுங்கள். அவை உங்களை சிறந்த மண வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும் என்பதில் நம்பிக்கை வையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திடீரென கோபப்பட வேண்டாம்

திடீரென கோபப்பட வேண்டாம்

இது மிகவும் நேரடியான அறிவுரையாகும். எக்காரணத்தைக் கொண்டும் திடீர் திடீரென கோபப்படும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டாம். ஏனெனில் கோபப்படும் போது சொல்லப்படும் மோசமான, கொடூரமான, சகிக்க முடியாத போன்ற வார்த்தைகள் துணையின் மனதை பாதிக்கக்கூடும். ஆகவே கோபம் வரும் போது, கோபப்பட என்ன காரணம் என்பதை கண்டறிய முயற்சி செய்யுங்கள். பின் இதனால் என்னுடைய துணைவர்/துணைவியார் வருத்தமடைகிறாரா என்று கவனியுங்கள். விடை 'ஆம்' என்று தான் வரும்

சுயநலம் வேண்டாம்

சுயநலம் வேண்டாம்

நீங்கள் சுயநலத்துடன் இருப்பது ஒரு கேக்கின் கடைசி துண்டை எடுத்து வைத்துக் கொள்வது போன்றது. இதன் மூலம் மற்றவர்களை நீங்கள் எப்படி பாதிக்கிறீர்கள் என்பதை கவனிக்க மாட்டீர்கள். நீங்கள் இதை உங்களுக்குள் தெளிந்து கொண்டு, உங்களுடைய துணைவரை காயப்படுத்தினால், அந்த இடத்தில் சுயநலம் உங்களிடமிருந்து செல்கிறது என்று பொருள். இது நல்ல விஷயத்தில் எப்பொழுதும் முடிவதில்லை.

எண்ணிப் பாருங்கள்

எண்ணிப் பாருங்கள்

அழகான மனைவியரை கொண்டிருக்கும் ஆண்களை விட, சற்றே அழகு குறைவான மனைவியரை கொண்டிருக்கும் ஆண்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று ஜர்னல் ஆஃப் பர்சனாலிட்டி அண்ட் சோசியல் சைக்காலஜி என்ற இதழில் அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அழகான கணவர்களை கொண்டிக்கும் பெண்கள் இந்த வகையில் அதிக மகிழ்ச்சி அடையாமல் இருந்தாலும், அழகான மனைவியரின் மகிழ்ச்சி அதிகமாக உள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. எனவே, ஒரு சூப்பர் மாடல் அழகியால் தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக தர முடியும் என்று நீங்கள் கருத வேண்டியதில்லை.

விட்டுக் கொடுத்தல் மற்றும் பாராட்டுதல்

விட்டுக் கொடுத்தல் மற்றும் பாராட்டுதல்

ஒரு வேலையை 50-50 என்று பங்கிட்டுக் கொள்வதோ அல்லது கொடுத்து எடுத்துக் கொள்ளும் உறவோ திருமணம் ஆகாது. கொடுப்பது கண்டிப்பாக வேலை செய்யும், ஆனால் நீங்கள் ஒரே நேரத்தில் கொடுப்பவராகவும், பாராட்டுபவராகவும் இருந்தால், செய்யும் பணி (திருமணம்) மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். அடிப்படையிலேயே தாங்கள் பாராட்டப்படுவதை மனிதர்கள் விரும்புவர்கள் என்ற உண்மையை புரிந்து கொண்டு, அதை திரும்ப திரும்ப செய்து பாராட்டி வாருங்கள். எனவே, உங்களுடைய துணைவர் கொடுக்கும் அனைத்தும் உங்களுக்கே என்று எடுத்துக் கொள்ளாமல், அவருக்கு நன்றியாக பாராட்டு தெரிவியுங்கள்.

ஒருவரையொருவர் மதித்திருத்தல்

ஒருவரையொருவர் மதித்திருத்தல்

அமைதியாகவும் மற்றும் ஒருவருக்கொருவர் அன்புடனும் இருப்பது அவசியம். நீங்கள் பேசும் விஷயம் எதிரில் உள்ள உங்கள் துணைவர்/துணைவியாரை எப்படி பாதிக்கும் என்பதை அறிந்து, அதற்கேற்ப பேசும் முன் யோசித்து பேச வேண்டும். நீங்கள் செய்யும் விஷயம் நெடுநாட்களுக்கு உங்களுடைய துணைவரை எப்படி பாதிக்கும் என்பதையும் கவனித்துப் பார்க்கவும். நீங்கள் செய்யும் செயல்களை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள. அப்படி இருந்து வந்தால், ஒரு நல்ல மனிதனாகவோ, மகிழ்ச்சியான உறவுடனோ இருப்பது பெரிய விஷயமாக இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion