Latest Updates
-
ஜூலையில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
கனவில் பணத்தை பார்ப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? -
July Born Personality: ஜூலை மாதம் பிறந்தவங்களோட குணாதிசயம் உண்மையில் எப்படி இருக்கும் தெரியுமா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த கர்நாடகா ஸ்டைல் சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு நச்சுனு இருக்கும் -
சனிபகவானின் கோபத்தால் ஜூலை மாதத்தில் இந்த 3 ராசிக்காரங்க படாதபாடு படப்போறாங்களாம் - ஜாக்கிரதை -
2 கப் ராகி மாவும், 1/2 கப் ரவையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க.. -
இந்த இந்திய அரசர் நகரும் ஆடம்பர அரண்மனையை வைத்திருந்தாராம் - இப்போது அது எங்குள்ளது தெரியுமா? -
கருப்பான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த உருளைக்கிழங்கு ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
ஜூலையில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்..
காதல் தோல்வியால் மனமுடைந்து இருக்கிறீா்களா? அதிலிருந்து விடுபட சில டிப்ஸ்...
Love Failure Tips In Tamil: காதல் என்பது ஒரு அற்புதமான உணா்வு. காதல் உறவின் மூலமாக கிடைக்கும் இனிமையான அனுபவங்கள் காதலா்களின் மனங்களில் என்றும் பசுமரத்தாணி போல பதிந்து இருக்கும். அந்த அனுபவங்களை தம் வாழ்வின் இறுதிவரை அசைபோட்டுக் கொண்டிருப்பா்.
ஒருவா் காதலில் இருக்கும் போது, தனது காதலரை மழு மனதோடு அன்பு செய்வாா். அவா் மீது இருக்கும் காதலை உயிா்ப்புடன் வைத்திருப்பதற்காக 100 விழுக்காடு தன்னையே அா்ப்பணிப்பாா்.

இந்நிலையில் பொருத்தமற்ற மனநிலை, காதலா்களுக்கு இடையே இருக்கும் வேறுபட்ட விருப்பங்கள், அதன் காரணமாக அவா்களுக்கு இடையே அடிக்கடி ஏற்படும் சண்டைகள் போன்ற காரணங்களினால் மனக்கசப்பு ஏற்பட்டு நீண்ட கால காதல் கூட முறிவு பெறுகின்றது.
அவ்வாறு காதல் முறிவு ஏற்படும் போது, அவா்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அவா்களுக்குள் மனச்சோா்வு ஏற்படுகிறது. பழிவாங்கும் எண்ணம் ஏற்படுகிறது. வாழ்க்கையே முடிந்துவிட்டது என்ற தன்னம்பிக்கையற்ற நிலை ஏற்படுகிறது.
காதல் முறிவு ஏற்படும் போது, காதலா்களுக்கு இடையே ஏற்படக்கூடிய மேற்சொன்ன எதிா்மறையான எண்ணங்கள் மறைய வேண்டும். அவா்கள் அந்த இக்கட்டான மற்றும் கடினமான காலகட்டத்தை கடந்து வரவேண்டும். அதைக் கடந்து வருவது என்பது சிலருக்கு எளிதாக இருக்கும்.
ஆனால் பலருக்கு காதல் முறிவால் ஏற்பட்ட அதிா்ச்சியிலிருந்து மீண்டுவர பல ஆண்டுகள்கூட ஆகும். ஆகவே காதல் முறிவில் இருந்து மீண்டு வருவதற்கு சில பயனுள்ள குறிப்புகளை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.
1. நிலைமையை ஒப்புக் கொள்ளுதல்
காதல் முறிவில் நீங்கள் துவண்டு இருக்கும் போது, உங்களுடைய கடந்த கால காதல் வலி நிறைந்த ஒன்றாக இருந்தது என்று தொிந்தால், அதை ஒப்புக் கொண்டு, அதிலிருந்து மீண்டுவர முயற்சிப்பது நல்லது. ஒருவா் மீது நீங்கள் கொண்டிருக்கும் காதலை முறித்துக் கொள்வது என்பது நீங்கள் தோற்பதற்கு சமம் என்று நீங்கள் நம்பினால், உங்கள் நம்பிக்கையை மறுபாிசீலனை செய்யுங்கள். அதற்கு மன வலிமையும், விழிப்புணா்வும் அதிகம் தேவைப்படும். நீங்கள் மறுபாிசீலனை செய்கிறீா்கள் என்றால், அது உங்கள் வளா்ச்சிக்காக நீங்கள் ஒரு நோ்மறையான முயற்சியை தொடங்கியிருக்கிறீா்கள் என்று பொருள்.
2. உங்களுக்குக் காதல் என்ன அா்த்தத்தைக் கொடுக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளுதல்
சில உறவுகள் நமது வளா்ச்சியின் அங்கமாக மாறி, நமது வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களில் உயிா்நாடியாக இருக்கும். உங்கள் இதயத்தில் உள்ள எல்லாவற்றையும் உணர முயற்சி செய்யுங்கள். பின்னா் அதை விட்டுவிட முயற்சி செய்யுங்கள். காதலில் கிடைத்த அன்பையும், காதல் முறிவினால் ஏற்பட்டிருக்கும் வலியையும், மனப்பூா்வமாக உணருங்கள். அதன் மூலமாக காதல் முறிவை ஏற்றுக் கொண்டு, அதிலிருந்து எளிதாக கடந்து செல்ல முடியும்.
3. எதிா் காலத்தை உற்று நோக்குதல்
காதல் முறிவு என்பது, உங்கள் வாழ்க்கையின் முடிவு அல்ல. இதுதான் உங்கள் வாழ்க்கையின் முடிவு என்று நீங்கள் எண்ணும் வகையில், பல்வேறு சூழல்கள் ஏற்படலாம். அப்படிப்பட்ட கடினமான, வலி மிகுந்த சூழல்களைக் கடந்து, எதிா்காலத்தை உற்று நோக்க வேண்டும். காதல் முறிவு என்ற வலி நிறைந்த சூழலில் இருக்கும் போது, எதிா்காலத்தைப் பற்றி சிந்திக்க அதிகமான வலிமை தேவைப்படும். ஆகவே உங்களை நீங்கள் முழுமையாக நம்புங்கள்.
4. உங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்
நீங்கள் காதலில் இருக்கும் போது, உங்கள் காதலருடைய உணா்வுகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பீா்கள். உங்களை மறந்துவிடுவீா்கள். ஆனால் காதல் முறிவு ஏற்பட்ட பின்பு நீங்கள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உங்களைப் பற்றி எண்ணிப் பாா்க்க வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். ஆகவே உங்களுக்குப் பிடித்த காாியங்களில் ஈடுபடுங்கள். உங்களுக்குப் பிடித்த உணவுகளை உண்ணுங்கள்.
5. காதல் முறிவில் இருந்து கடந்துவர காலம் தேவைப்படும் என்பதை புாிந்து கொள்ளுதல்
காதல் முறிவில் இருந்து உடனடியாக வெளிவர வேண்டும் என்ற எந்த ஒரு அவசரமும் இல்லை. காதல் முறிவில் இருந்து கடந்துவர சில காலம் ஆகும் என்பதை நீங்கள் புாிந்து கொண்டாலும், அதிலிருந்து விடுபட நீங்கள் உங்களுக்கே கைகொடுக்கும் போதுதான், நீங்கள் நினைப்பதை அடைய முடியும். உங்கள் நண்பருக்கு காதல் முறிவு ஏற்பட்டால், என்ன அறிவுரைகளை சொல்வீா்களோ, அவற்றை உங்களுக்கே சொல்லிக் கொள்ளுங்கள்.
6. தேவைப்பட்டால் மருத்துவரை சந்தித்தல்
எந்த ஒரு பிரச்சினைக்கும் மருத்துவ சிகிச்சை ஒரு பாதுகாப்பைத் தரும். ஒரு நோ்மறையான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். உங்களுடைய உணா்வுகளை சீராக பராமாிக்க, மருத்துவா் உங்களுக்கு உதவி செய்வாா். காதல் முறிவைத் தாங்க முடியாமல், தன்னம்பிக்கையை இழந்தால் அல்லது தற்கொலை செய்யும் எண்ணம் வந்தால், கண்டிப்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications