Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
ஆண்கள் எப்போதும் தன்னைவிட வயதில் மூத்த பெண்களை விரும்புவதற்கான காரணம் என்ன தெரியுமா?
ஆண்கள் பெண்களை விட வயதில் மூத்தவர்களாக இருக்க வேண்டுமென்று காலம் காலமாக இருந்து வந்த நம்பிக்கை இப்போது பலரால் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
21 ஆம் நூற்றாண்டின் காதல் விவகாரங்களைப் பொறுத்தவரை, வயது என்பது வெறும் எண்ணாகிவிட்டது. ஆண்கள் பெண்களை விட வயதில் மூத்தவர்களாக இருக்க வேண்டுமென்று காலம் காலமாக இருந்து வந்த நம்பிக்கை இப்போது பலரால் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஒருவரின் மீது ஒருவர் நம்பிக்கையும், அன்பும் வைத்திருக்கும்போது வயது எதற்கு என்ற எண்ணம் துளிர்விட தொடங்கிவிட்டது.

இதற்கு மேலும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பல நட்சத்திர ஜோடிகள் இந்த வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொண்டு வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்கள் ஏன் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை விரும்புகிறார்கள் என்பதற்கான சில காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

அவர்கள் அதிக உந்துதல் மற்றும் முதிர்ச்சியுள்ளவர்கள்
ஆய்வில் கலந்து ஆண்கள் அவர்களை விட மூத்த பெண்களிடம் எப்போதும் ஒரு கவர்ச்சி இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் எல்லாவற்றிற்கும் தங்கள் கூட்டாளர்களைச் சார்ந்து இருப்பதை விட, அவர்கள் அதிக உந்துதல் மற்றும் முதிர்ச்சியுள்ளவர்கள் மற்றும் வாழ்க்கையில் அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிவார்கள். சில ஆண்கள் இதை அச்சுறுத்தலாகக் கருதினாலும், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் அவர்கள் எவ்வாறு சிறப்பாக நிர்வகிக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று தனிப்பட்ட முறையில் உணர்வதாக பலர் கூறுகிறார்கள்.

அனுபவசாலிகள்
நம் வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களைப் பார்க்கும்போது இளைய பெண்களைப் போலல்லாமல், வயதில் மூத்தவர்கள் அவர்களின் பாதைகளைக் கண்டுபிடிக்க இன்னும் முயற்சி செய்கிறவர்கள். வயதான பெண்கள் அதிக அனுபவம் வாய்ந்தவர்கள் அவர்களுக்கென குறிக்கோள்களும் அபிலாஷைகளும் உள்ளனர். அவர்கள் வாழ்க்கையில் தோல்விகளை நினைத்து கவலைப்பட மாட்டார்கள், அதற்கு பதிலாக அவர்கள் அதிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள். எனவே, அனுபவத்தைப் பொறுத்தவரை அவர்களே சிறந்தவர்கள்.

காதலில் நிலையானவர்கள் மற்றும் பாதுகாப்பானவர்கள்
காதல் மற்றும் ரொமான்ஸ் விஷயங்களில் அவர்களுக்கு அதிக அனுபவம் இருந்தாலும், உறவுகள் வரும்போது அவை மிகவும் நிலையானவை மற்றும் பாதுகாப்பானவர்கள். உங்களை மகிழ்விப்பதற்கான வழியை அவர்கள் அறிவார்கள், அதேசமயம் எப்போது நிறுத்த வேண்டும் என்பதையும் அவர்கள் அறிவார்கள். வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் கண்ணோட்டம் மிகவும் சுதந்திரமானது, ஆகவே இது ஆண்களுக்கும் சுதந்திரத்தை உணர்த்துகிறது.

ஆடம்பரமும் அதீத கவனமும் தேவையில்லை
இளைய பெண்களை காதலிக்கும் போது அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பரிசுகளுக்கும், ஆச்சரியங்களுக்கும், அதீத கவனத்திற்கும் அளவேயில்லை. ஆனால் வயதில் மூத்த பெண்களை காதலிக்கும்போது அவர்களில் பெரும்பாலோர் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு அதிகமாக முதிர்ச்சியுடன் இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் நேரம் மற்றும் பணத்தின் மதிப்பைப் புரிந்துகொள்கிறார்கள், அதை தேவையின்றி வீணாக்க மாட்டார்கள், தங்கள் கூட்டாளர்களும் இதைச் செய்ய விரும்ப மாட்டார்கள்.

லாஜிக்கையும் அன்பையும் குழப்பிக் கொள்வதில்லை
இளையப் பெண்களை போல அதிக உணர்ச்சிவசப்படாமல் வயதில் மூத்த பெண்கள் நேர்மையாகவும், உறுதியாகவும் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் லாஜிக்கை அன்போடு குழப்பிக் கொள்ள மாட்டார்கள், எது சரி எது தவறு என்பதற்கான வேறுபாட்டைப் புரிந்துகொள்கிறார்கள். இது மற்ற எல்லா குணங்களைக் காட்டிலும் ஆண்களை மிகவும் ஈர்க்கிறது.

தவறுகள் நேர்ந்தாலும் அவர்கள் அதிக புரிதல் கொண்டவர்கள்
பெரும்பாலான ஆண்கள் வயதில் மூத்த பெண்களிடம் அரவணைப்பு உணர்வும், அதிக அளவு புரிதலும் ஊக்கமும் இருப்பதாக கூறுகிறார்கள். இளைய பெண்கள் இதற்கு நேர்மாறாக தற்சார்பு எண்ணம் உள்ளவர்களாகவும் தங்கள் துணையிடம் இருந்து அதிக கவனத்தை பெற விரும்புபவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் ஆண்களின் உணர்வுகளை அறியாதவர்களாக இருக்கிறார்கள். எனவே, ஏதேனும் தவறு நடந்தால், வயதான பெண்கள் அதிக புரிதலும் ஆதரவும் உடையவர்கள், இது மிகவும் இனிமையானதாகவும் தங்களை ஈர்ப்பதாகவும் ஆண்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications











