Latest Updates
-
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
தம்பதிகளே! உடலுறவு கொள்ளும்போது இந்த அறிகுறிகள் உங்களிடம் இருக்கா? அப்ப அது மோசமான உச்சக்கட்டமாம்!
ஒரு பெரிய சண்டை அல்லது வாக்குவாதத்திற்குப் பிறகு உடலுறவு கொண்டவர்கள் அதை "மேக்கப் செக்ஸ்" என்று குறிப்பிடுகின்றனர். உண்மையில், நீங்கள் கோபமாக இருக்கும்போது உடலுறவு கொள்ள வேண்டாம்.
உடலுறவில் உச்சக்கட்டம் அடைவது என்பது இன்பத்தை பற்றியது மட்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஆனால், அவை அப்படி இல்லை. மோசமான உச்சக்கட்டமும் உள்ளது எனக்கூறப்படுகிறது. இது உங்களுக்கு விசித்திரமாக தோன்றலாம். பொதுவாக உடலுறவு என்பது தம்பதிகள் இருவருக்கும் பேரின்பத்தை கொடுக்கும் ஒரு அற்புதமான செயல். சில தம்பதிகளின் சலிப்பான பாலியல் வாழ்க்கையால், உச்சக்கட்டம் அடைவது என்பது கடினமாக இருக்கலாம். ஆனால், இந்த மோசமான உச்சக்கட்டம் பற்றி நீங்கள் கேள்வி பட்டிருக்கிறீர்களா? ஆம், விரும்பத்தகாத உச்சி உங்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் மன உளைச்சலான உச்சக்கட்டமாக இருக்கும். ஒரு ஆய்வின்படி, மோசமான உச்சக்கட்டம் ஒரு நபரின் உறவு, பாலியல் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறுகிறது.

தம்பதிகள் இருவரும் விரும்பி உடலுறவு கொள்ளும்போது, மோசமான உச்சக்கட்டம் ஏற்படுகிறது என்பதற்கு சில காரணங்கள் உள்ளன. பெரும்பாலான மக்கள் புணர்ச்சியுடன் வலுவான இணைப்புகளைக் கொண்டுள்ளனர் மற்றும் அவற்றின் மீது அதிக ஆசையை வைக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு மோசமான புணர்ச்சி இருக்கலாம். இது நேர்மறையற்ற, விரும்பத்தகாத அல்லது எதிர்மறையான உச்சியை மோசமான உச்சியை குறிப்பிடப்படுகிறது. அவை ஏன் ஏற்படுகிறது என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

அதிகளவு மன அழுத்தம்
மன அழுத்தம், துரதிர்ஷ்டவசமாக, உங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. அதிக அளவு மன அழுத்தம் உங்கள் லிபிடோவில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் மற்றும் உடலுறவில் உச்சத்தை அடைவதை கடினமாக்கலாம். இருப்பினும், மன அழுத்தம் ஒரு சங்கடமான அல்லது விரும்பத்தகாத உச்சக்கட்டத்தை உங்களுக்கு ஏற்படுத்தலாம். உங்களுக்கு மன ரீதியாக பிரச்சனை இருந்தால், நீங்கள் மோசமான உச்சிக்கட்டத்தை அடையும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சனையை நீங்கள் சந்தித்தால், மருத்துவ ஆலோசனையை பெறுங்கள்.

மோசமான செக்ஸ்
செக்ஸ் குறித்து வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஒருமித்த உடலுறவின் போது மோசமான உச்சக்கட்டத்தை அடைவது நிச்சயமாக நடக்கும் என்று தெரிவிக்கிறது. ஒருமித்த கருத்தோடு உடலுறவு கொள்ளும்போது, தம்பதிகளில் ஒருவருக்கு அது மோசமானதாக தோன்றலாம். பொதுவாக பெண்கள் இந்த பிரச்சனையை சந்திப்பதாக கூறப்படுகிறது. மோசமான செக்ஸ் அவர்களுக்கு மோசமான உச்சக்கட்டத்தை தருவதாக கூறப்படுகிறது.

குற்ற உணர்வு மற்றும் அவமானம்
பாலியல் செயல்பாட்டின் போது, ஒரு பெண் தொடர்ச்சியான பாலியல் தூண்டுதலுடன் மூலம் பலமுறை உச்சியை அடைய முடியும். இருப்பினும், இருவரின் சம்மதத்துடன் நடக்கும் உடலுறவில் கூட, ஒரு மோசமான உச்சியை நீங்கள் அடையலாம். ஏனெனில், சமூக நெறிகள் மற்றும் மத நம்பிக்கைகள் காரணமாக இன்பத்தை அனுபவிப்பதில் நிறைய குற்ற உணர்வு ஏற்படலாம். இதன் விளைவாக, புணர்ச்சியின் போது, குற்ற உணர்வை அடைவதால், மோசமான உச்சியை நீங்கள் பெறக்கூடும். எனவே, உங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபடும் போது ஏற்படும் உச்சக்கட்டம், உங்களை மகிழ்ச்சியற்றதாகவோ அல்லது வெறுப்பாகவோ உணர வைக்கிறது.

உச்சகட்ட அழுத்தம்
உச்சக்கட்ட கவலை என்பது உடலுறவில் உச்சக்கட்டத்தை அடைவதை நோக்கி அதிக கவனம் செலுத்துதல். உச்சக்கட்டம் அடைய வேண்டும் என்று நினைத்து நீங்கள் உடலுறவு கொள்வது, உங்களை அழுத்தத்திற்கு ஆளாக்கும். பாலியல் செயல்பாடுகள் தானாக நடக்கும்போது, அவை உங்களை உச்சக்கட்டம் அடைய வைக்கும். ஆர்கஸம் கவலை என்பது ஒரு பொதுவான மற்றும் உண்மையான உணர்வாகும். இதை பற்றி தெரியாமலே பலர் இதை சகித்துக்கொண்டு வாழ்கிறார்கள். இருப்பினும், குறைந்த அளவு அழுத்தம் இருந்தால், நீங்கள் மிகவும் சுவாரஸ்யமான உச்சியை பெறலாம். அழுத்தத்துடன் கூடிய புணர்ச்சி மோசமான உச்சியாகக் கருதப்படுகிறது.

துணையின் மீது கோபமாக இருக்கும்போது...
ஒரு பெரிய சண்டை அல்லது வாக்குவாதத்திற்குப் பிறகு உடலுறவு கொண்டவர்கள் அதை "மேக்கப் செக்ஸ்" என்று குறிப்பிடுகின்றனர். உண்மையில், நீங்கள் கோபமாக இருக்கும்போது உடலுறவு கொள்ள வேண்டாம். இது உங்கள் உறவிலும் வாழ்க்கையிலும் எதிர் விளைவை ஏற்படுத்தும். வலுவான உணர்வுகள் காரணமாக, உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே பிரச்சனைகள் இருந்தாலும், நீங்கள் சற்று தாழ்வாக உணரலாம் மற்றும் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட ஒப்புக்கொள்ளலாம். ஆனால் அவ்வாறு செய்வது உங்களை வெறுப்படையச் செய்யலாம். மேலும் இது உடலுறவு கொள்ளும்போது சங்கடமான உச்சியை ஏற்படுத்தலாம்.

பெண்களின் உச்சக்கட்டப் பிரச்சனை
பெண்களின் உச்சக்கட்ட பிரச்சனைகளுக்கு உடல் மற்றும் உளவியல் காரணிகள் காரணமாகும்.
- பாலியல் தூண்டுதல் இல்லாதது
- முந்தைய அதிர்ச்சிகரமான பாலியல் அனுபவம்
- உறவில் சிக்கல்கள்
- ஹார்மோன் மாற்றங்கள் அல்லது மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள்
- ஆண்டிடிரஸண்ட்ஸ் அல்லது செலக்டிவ் செரடோனின் ரீஅப்டேக் இன்ஹிபிட்டர்ஸ் (எஸ்.எஸ்.ஆர்.எஸ்) போன்ற சில வகையான மருந்துகளை எடுத்துக்கொள்வது
- கருப்பை நீக்கம் அறுவை சிகிச்சை
- மனநிலை கோளாறுகள் மற்றும் மனச்சோர்வு
- மூட்டுவலி போன்ற நீண்ட கால வலி நிலைகள் போன்ற உடல் ஆரோக்கிய பிரச்சனைகள்



Click it and Unblock the Notifications