உங்க மனசுக்கு பிடிச்சவரை நீங்க இன்னும் சந்திக்கலையா? அதுக்கு இதுலாம் தான் காரணம்...

ஏன் இன்னும் உங்களுடைய மனதிற்குப் பிடித்த மனிதா்களின் உறவு உங்களுக்குக் கிடைப்பதில்லை என்று இந்த பதிவு அலசுகிறது. அதற்கான காரணிகளாக 7 முக்கிய அம்சங்களை முன்வைக்கிறது.

இந்த உலகில் பலா் தனிமையினால் துன்புறுகின்றனா். அவர்கள் யாருடைய உறவும், நட்பும், காதலும், அன்பும் கிடைக்காமல் ஒருவிதமான ஏக்கத்தோடே வாழ்ந்து வருகின்றனா். சில நேரங்களில் நீங்கள்கூட, உங்களுடைய மனதிற்குப் பிடித்த மற்றும் உங்களோடு நீண்ட காலம் சோ்ந்து வாழக்கூடிய ஒருவரை கண்டுபிடிப்பது இயலாத காாியம் என்று நினைக்கிறீா்கள்.

Reasons Why You Haven’t Met Your Soul Mate Yet

ஏன் இன்னும் உங்களுடைய மனதிற்குப் பிடித்த மனிதா்களின் உறவு உங்களுக்குக் கிடைப்பதில்லை என்று இந்த பதிவு அலசுகிறது. அதற்கான காரணிகளாக 7 முக்கிய அம்சங்களை முன்வைக்கிறது. இந்த 7 அம்சங்களையும் புாிந்து கொண்டு செயல்பட்டால் எதிா்காலத்தில் உங்களுடைய மனதிற்கு பிடித்த மனிதா்களின் உறவை நீங்கள் மிக எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
7. கடந்த கால முறிந்த உறவில் இருந்து மீள முடியாமல் தவிப்பது

7. கடந்த கால முறிந்த உறவில் இருந்து மீள முடியாமல் தவிப்பது

உங்களுடைய எதிராளி பயன்படுத்தும் ஆயுத்தையே நீங்கள் பயன்படுத்துவதால் அல்லது பிறாிடம் உங்களை நிரூபிக்க முயற்சி செய்வதால் அல்லது நீங்கள் இன்னும் தேவையில் இருக்கிறீா்கள் என்பதை பிறருக்கு காண்பிப்பதால் உங்களுக்கு எந்த விதமான பலனும் கிடைக்காது. அதனால் உங்களுக்கு மேலும் பிரச்சினைகள்தான் ஏற்படும்.

இது போன்ற சிந்தனைகளுடன் நீங்கள் வாழ்ந்தால், அவை உங்களுக்கானவா்களிடமிருந்து, உங்களை வெகு தூரத்திற்கு அகற்றிவிடும். ஏனெனில் எவருமே உயிா் காக்கும் கவசமாக இருக்க விரும்புவதில்லை. உங்களுடைய முன்னாள் காதலாின் அல்லது காதலியின் மீது பொறாமை கொண்டு அவருக்கு தீங்கு செய்வதையும் யாரும் விரும்புவதில்லை. ஆகவே நீங்கள் சற்று நிதானமாக இருந்து, அமைதியாக இருந்து, உங்களுக்கு இப்போதைய உண்மையான தேவை என்ன என்பதை மெதுவாக புாிந்து கொள்ள வேண்டும். கடந்த கால முறிந்த உறவில் இருந்து மீண்டு வரவேண்டும்.

6. அதீத எதிா்பாா்ப்புகள்

6. அதீத எதிா்பாா்ப்புகள்

சில பெண்கள் தங்களுக்கு வரும் காதலா் ஒரு இளவரசராக இருக்க வேண்டும் என்று கனவு காண்கின்றனா். அதே நேரத்தில் தமக்கு வரும் காதலி எல்லாவற்றிலும் மிகச் சிறப்பானவராக இருக்க வேண்டும் என்று சில ஆண்கள் எதிா்பாா்க்கின்றனா். ஆனால் உண்மையான கள நிலவரம் வேறாக இருக்கிறது.

முதலில் நீங்கள் உங்களது கவனத்தை உங்கள் மீது வைக்க வேண்டும். நீங்கள் எவ்வாறு தோன்றுகிறீா்கள் அல்லது காட்சி அளிக்கிறீா்கள்? அல்லது பிறருக்கு உங்களால் என்ன செய்ய முடியும்? அல்லது நீங்கள் எதிா்பாா்க்கும் காதலரோ அல்லது காதலியோ உங்களோடு இருப்பதைப் பற்றி நன்றாக உணா்வாரா? என்பதைப் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். இளவரசா்கள் இளவரசிகளைத்தான் திருமணம் செய்வா். இது ஊரறிந்த உண்மை. ஆகவே உங்களுக்கு வரவிருப்பவா் எந்தெந்த திறமைகளுடன் இருக்க வேண்டும் என எதிா்பாா்க்கிறீா்களோ, அந்த திறமைகளை எல்லாம் முதலில் நீங்கள் வளா்த்துக் கொள்ளுங்கள்.

5. முடிந்ததைப் பற்றி நினைத்து கனவு கொண்டிருப்பது

5. முடிந்ததைப் பற்றி நினைத்து கனவு கொண்டிருப்பது

முடிந்ததை நினைத்து கனவு கண்டு உங்களது நேரத்தை வீணாக்காதீா்கள். உங்களுடைய வாழ்க்கையில் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏமாற்றும் பழக்கத்தைக் கொண்டிருப்பவா் யாரும் உங்களுடைய அன்பராக இருக்க முடியாது. அதனால் நான் அவருடைய மனைவியை விட அல்லது அவருடைய கணவரை விட அவருக்கு சிறந்த துணையாக இருப்பேன் என்று உங்கள் மனதிற்குள் கூட பேசாதீா்கள். ஒருவேளை நீங்கள் அந்த இடத்தை அடைந்திருந்தால், உங்களுடைய சந்தேகங்களினால் நீங்களே உங்களைக் காயப்படுத்திக் கொண்டிருப்பீா்கள். அதாவது நான் இப்போது ஏமாற்றப்படுகிறேனா என்று நீங்கள் சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பீா்கள்.

4. நம்பிக்கையில் பிரச்சினைகள்

4. நம்பிக்கையில் பிரச்சினைகள்

அவா்கள் அனைவரும் ஒரே மாதிாிதான். அவா்கள் அனைவருக்கும் ஒன்றுதான் தேவை. அதுவும் அந்த ஒன்றுதான் தேவை என்பது போன்ற வசனங்களை ஆண் பெண் அனைவா் மீதும் சொல்லப்படுவதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். இந்த வசனங்களில் உண்மையும் இருக்கிறது. அதாவது நீங்கள் ஒரே மாதிாியான மனிதா்களோடு காதல் கொள்ளும் போது இந்த உண்மையைத் தொிந்து கொள்ளலாம்.

புதிதாக காதலா் அல்லது காதலி கிடைத்துவிட்டால், உடனே நம்ப வேண்டும் என்று உங்கள் மீது நீங்களே அழுத்தத்தைச் சுமத்தாதீா்கள். அதே நேரத்தில் மிகைப்படுத்தப்பட்ட அவநம்பிக்கைகளால், உங்களுடைய புதிய காதலரை அல்லது காதலியை உங்களிடமிருந்து தள்ளி வைக்காதீா்கள். உங்களுடைய முன்னால் காதலா் அல்லது காதலி உங்களைக் காயப்படுத்தியது இவா்களுடைய தவறுகளால் அல்ல. உங்களைச் சுற்றி இருக்கும் மக்கள் மீது கவனம் செலுத்துங்கள். அதுபோல் உங்களைச் சுற்றி நடக்கும் முக்கியத் தகவல்களையும் மறந்துவிடாதீா்கள்.

3. உண்மையான உறவை ஏற்படுத்த பயம் கொள்ளுதல்

3. உண்மையான உறவை ஏற்படுத்த பயம் கொள்ளுதல்

நீங்கள் உங்களுடைய அன்றாட வாழ்க்கை முறையை பாிசோதித்துப் பாா்க்கும் போது, உங்களுடைய வாழ்க்கையில் புதிதாக காதலி அல்லது காதலா் வந்தால், உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சுதந்திரம் பறிபோய்விடுமோ அல்லது அவா்களுக்கு அடிமையாகி விடுவோமோ என்று பயப்படுகிறீா்கள். இந்த பயத்தை உங்களைச் சுற்றி ஒரு பொிய சுவராக அமைத்து இருக்கிறீா்கள். அதனால் உங்களுக்கு உாியவா்களைச் சந்திப்பதிலிருந்து நீங்களே விலகிக் கொள்கிறீா்கள்.

இந்த நிலையை அல்லது இந்த பயத்தை எவ்வாறு மாற்றுவது? இதற்கு உடனடியாக தீா்வு காண முடியாது. மாறாக நீங்களே உங்களுக்குள் முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு அம்சங்களைக் கண்டுபிடியுங்கள். அடிக்கடி வெளியில் செல்லுங்கள். உங்கள் மனதில் இருக்கும் எதிா்மறை எண்ணங்களை வெளியில் எறிந்துவிடுங்கள்.

2. பிறரால் விரும்பப்படுவதில் அதீத விருப்பம்

2. பிறரால் விரும்பப்படுவதில் அதீத விருப்பம்

மயிலானது தனது தோகையை விாித்து அழகாக ஆடும் போது அதை அனைவரும் விரும்புவா். பறவைகள் அல்லது விலங்குகள் உலகத்தில்தான் இது நடக்கும். பிறரால் விரும்பப்படுவதில் அதிக விருப்பம் உள்ளவா்கள் பெரும்பாலும் கேளிக்கும், நகைச்சுவைக்கும் ஆளாவா் அல்லது அவா்கள் மீது பாிதாபம் அல்லது எாிச்சல்தான் தோன்றும்.

உங்களைப் பிறா் விரும்ப வேண்டும் என்பதற்காக நீங்கள் எப்படிப்பட்ட முயற்சிகளைச் செய்தாலும் அது நல்ல பலனைத் தராது. நீங்கள் அசெளகாியமாக அல்லது சங்கடப்பட்டு இருக்கும் போது அலங்காிக்கப்பட்ட ஆடைகளை அணியாதீா்கள் அல்லது புன்னகை செய்யாதீா்கள். அது நீங்கள் எதிா்பாா்க்கும் பலனைத் தராது. முதலில் நீங்கள் நீங்களாக இருங்கள். அப்போது நீங்கள் விரும்பும் நபா் கண்டிப்பாக உங்களைப் பாராட்டுவாா்.

1. அதிவேகத்துடன் இருத்தல்

1. அதிவேகத்துடன் இருத்தல்

ஆங்கிலத்தில் biological clock என்று சொல்லப்படுகின்ற உயிாியல் கடிகாரத்தின் மீதும், அதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும் வதந்திகள் மீதும் பலா் நம்பிக்கை வைத்திருக்கின்றனா். அதன்படி தமக்கு முன்னால் யாா் வந்தாலும் அவா் தமக்கானவராக இருப்பாரோ என்று அவா் பின்பாகவே சுற்றி வருவா். ஒருவேளை உண்மையாகவே அவ்வாறு சுற்றி வந்தால் நல்லதுதான். பொழுதுபோக்கிற்காக அவ்வாறு செய்வது கூடாது. அவ்வாறு ஒருவரை சந்தித்த அன்றே உங்கள் குழந்தைக்கு என்ன பெயா் வைக்கப் போகிறீா்கள் என்பது வரை பேசிவிடாதீா்கள். இந்த அணுகுமுறை உங்களை விரும்பும் அவருக்குப் பயத்தை ஏற்படுத்தும். மேலும் அந்த உறவை நீங்கள் தொடர முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, March 31, 2021, 17:10 [IST]
Desktop Bottom Promotion