For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுவதும் பெண்கள் உடலுறவின் போது செய்யும் மோசமான தவறுகள் இதுதான்... ஆண்கள் ரொம்ப பாவம்யா...!

|

உலகிலேயே இரண்டாவது பெரிய மக்கள்தொகையை கொண்ட நாடாக இருந்தபோதிலும் இந்தியாவில் பாலியல் கல்வி என்பது இப்பொழுதும் மறுக்கப்படும் ஒன்றாகவே இருக்கிறது. உடலுறவு என்பது இரு பாலினத்திரிடையே ஏற்படும் இயல்பான உணர்வு என்பதை இங்கு ஒரு சாரார் இன்னும் புரிந்து கொள்ளவேயில்லை.

பாலியல் என்ற தலைப்பில் அதிக பேச்சு இல்லாததால், மக்கள் சரியான அறிவு மற்றும் அதைப் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கவில்லை. படுக்கையில் சிறந்த பாலியல் அனுபவங்களைப் பெற ஒருவர் நெருங்கிய உறவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக படுக்கையில் ஆண்கள்தான் சிலதவறுகளை செய்வதாக உருவகப்படுத்தப்படுகிறது, இது முற்றிலும் தவறான ஒன்றாகும். ஏனெனில் பெண்களும் கலவியின் போது சில தவறுகளை செய்கிறார்கள். அது என்னென்ன தவறுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலவியின் போது அழுவது

கலவியின் போது அழுவது

பெண்கள் உடலுறவின் போது அவர்கள் வழியாகப் பாயும் உணர்வுகளின் வெள்ளத்தால் அழத் தொடங்குகிறார்கள். அந்த தருணத்தை சிதைப்பதால் ஆண்கள் இதனை விரும்புவதில்லை. பெண்கள் அழுகும் போது தாங்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டோமா என்ற குற்ற உணர்வுக்கு ஆள்கிறார்கள். இதனால் ஆண்களின் கவனம் கலவியில் இருந்து பெண்களின் அழுகையை நிறுத்துவதற்கு மாறுகிறது. இதனால் கலவி முற்றிலும் தடைபடும்.

ஓய்வெடுத்தால் திட்டுவது

ஓய்வெடுத்தால் திட்டுவது

கலவிக்கு பிறகு ஆண்களுக்கு கண்டிப்பாக தூக்கம் வரும், இது முழுக்கு முழுக்க அறிவியல். உடலுறவின் முழுச் செயலும் புரோலேக்ட்டின், ஆக்ஸிடாஸின் மற்றும் மெலடோனின் ஆகியவற்றை உதைக்கிறது, இது ஒரு சரியான தூக்கத்திற்கான தடையற்ற கலவையாகும், மேலும் ஆண்கள் தூங்குவதைக் குறை கூற முடியாது. ஆண்கள் உடலுறவுக்குப் பிறகு தூங்கும்போது பெண்கள் கஷ்டப்படுகிறார்கள், அது அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று அவர்களின் மனதில் ஒரு உணர்வைத் தூண்டுகிறது. இதனால் அந்த சமயத்தில் அவர்களிடம் கத்த வேண்டாம்.

உச்சக்கட்டம் வந்ததுபோல நடிப்பது

உச்சக்கட்டம் வந்ததுபோல நடிப்பது

பெண்கள் தங்கள் துணையை மகிழ்விக்க எடுக்கும் ஒரு மோசமான நடவடிக்கை இது. ஆனால் உச்சகட்டத்தைப் போலியாக பெற்றது போல வெறுமனே நடிப்பது சரியானது மற்றும் பொருத்தமானது அல்ல என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். இதன்மூலம் தாங்கள் பகிர்ந்து கொள்ளும் பாலியல் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான நோக்கத்தை அவர்கள் கொல்கிறார்கள். பெண்கள் போலியான உச்சக்கட்டத்தை அடைந்தது தெரிந்தால் அவர்களின் துணை மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுவார், இல்லையெனில் அவரை நம்ப வைத்துவிட்டால் பெண்கள் ஒருபோதும் உச்சக்கட்டத்தை பெற முடியாது. இரண்டுமே அவர்களுக்கு பாதகமானவைதான்.

MOST READ: இங்கு உடலுறவில் ஈடுபடும் வயது ஆண்களுக்கு 10 பெண்களுக்கு 6 .... உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்...

கலவியை மறுப்பது

கலவியை மறுப்பது

தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைக்காக உடலுறவை மறுப்பது ஒரு தீர்வு என்று பெண்கள் நினைக்கிறார்கள், இதனால் அவர்கள் உடலுறவை வேண்டாம் என்று கூறுகிறார்கள். இது உறவுக்கு எந்த நன்மையும் செய்யாது, அதற்கு பதிலாக ஜோடிக்கு இடையே உளவியல் தடைகளை உருவாக்குகிறது. உங்கள் உறவை ஆர்வமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ப்பதை நீங்கள் உண்மையில் நிறுத்துகிறீர்கள். பாலியல் நெருக்கமானது தம்பதிகளிடையே பதற்றத்தைத் தடுப்பதற்கும், உங்கள் பிணைப்புக்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தருவதற்கும் ஒரு அருமையான வழியாகும்.

 சோம்பேறித்தனமாக இருப்பது

சோம்பேறித்தனமாக இருப்பது

உடலுறவு கொள்ளும்போது செயலற்ற தன்மை எந்த ஆணையும் செய்லபட விடாமல் தடுக்கும். ஒரு ஆனந்தமான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இருவருக்கும் உடலுறவின் போது சமமான பங்கேற்பு இருக்க வேண்டும். பெண் மகிழ்ச்சியை அடைய ஆண் அனைத்து முயற்சிகளையும் மட்டுமே செய்கிறான் என்றால், அது நியாயமில்லை. ஆண்களும் ஒரே மாதிரியான தொடுதலுக்கும், அரவணைப்புக்கும் தகுதியானவர்கள், பெண்கள் சோம்பேறித்தனமாக இருந்தால், ஆணின் ஆசைகளை நிறைவேற்ற முயற்சிக்காவிட்டால், ஆண்கள் ஆர்வத்தை இழந்து, உடலுறவுக்குப் பிறகு மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பார்கள்.

நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி கொள்வது

நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி கொள்வது

உங்கள் விருப்பு வெறுப்புகள் என்ன என்பதை ஆண்கள் ஏற்கனவே அறிந்திருக்க வேண்டும் என்று நம்புவது வெறுமனே ஒரு முட்டாள்தனமான விஷயம். இது நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை அமைக்கிறது. போதுமான நேரத்தை உங்களுடன் செலவிடாமல் உங்களின் தேவை என்ன, எதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை ஆண்களால் அறிய இயலாது. எனவே உங்களின் விருப்பத்தை ஆண்கள் தெரிந்து கொள்ளாவிட்டால் கோபப்படாதீர்கள், மாறாக அவர்களுக்கு உங்களின் தேவை என்னவென்பதை புரிய வையுங்கள்.

MOST READ: உடலுறவில் பெண்களுக்கு எத்தனை வகை உச்சக்கட்டம் உள்ளது தெரியுமா? ஆண்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க...!

விரைவில் முடிந்துவிட்டால் கோபப்படுவது

விரைவில் முடிந்துவிட்டால் கோபப்படுவது

சில நேரங்களில் ஆண்கள் அதிகளவு ஆற்றலாலோ அல்லது முன்விளையாட்டுகளாலோ விரைவிலேயே உச்சக்கட்டம் அடைந்து விடுவார்கள். பெண்களுக்கு முன்னரே உச்சக்கட்டத்தை அடைவது ஆண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும், எனவே மேலும் அதற்காக கோபப்படுவது ஆண்களுக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தும். அவரை விமர்சனத்திற்கு உட்படுத்துவது அவர்களின் மனதை காயப்படுத்தும்.

ஆதிக்கம் செலுத்துவது

ஆதிக்கம் செலுத்துவது

கலவி என்பது திட்டமிட்டு செயல்பட்டு ஒருவர் மட்டுமே அதிகாரம் செலுத்தும் நிகழ்வல்ல. கலவியின் ஒவ்வொரு நொடியையும் திட்டமிடுவது முழு அனுபவத்தையும் இயந்திரத்தனமாகவும், களைப்பாகவும் ஆக்குகிறது. படுக்கையில் ஆதிக்கம் செலுத்து வேண்டும் என்ற உங்களின் எண்ணத்தை நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களின் மந்திரத் தருணங்களை அதன்போக்கில் இருவரும் மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்.

மெலே இருக்கும்போது கழுத்தை பிடிப்பது

மெலே இருக்கும்போது கழுத்தை பிடிப்பது

கலவியின் போது பெண்கள் மேலே இருக்கும்போது ஆண்களின் கழுத்தைப் பிடிக்கிறார்கள். எதற்காக அவர்கள் இதனை செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. உங்கள் கைகளை வேறு எங்காவது வைக்கவும், உதாரணமாக, நீங்கள் அவற்றை அவரது தோளில் அல்லது அவரது தலைக்கு அருகில் வைக்கலாம். நீங்கள் அவர்களை அசௌகரியப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இது ஆண்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்தும்.

முதல் நகர்வை செய்யாமல் இருப்பது

முதல் நகர்வை செய்யாமல் இருப்பது

உங்கள் இளவரசி அந்தஸ்தை கைவிட வேண்டியது முக்கியம். ஆண்களே எப்போதும் முதல் நகர்வைச் செய்யக் கடமைப்பட்டிருக்க மாட்டார்கள், ஆண்களே தங்கள் ஆண்மை நிரூபிக்க முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. ஆண்கள் கடமைப்பட்டிருந்தால், பெண்கள் சமமாக கடமைப்பட்டுள்ளனர். எனவே முதல் நகர்வை நீங்களும் செய்ய முயற்சி செய்யுங்கள்.

MOST READ: நீண்ட நாட்கள் சுயஇன்பம் செய்யாமல் இருந்தால் ஆண்கள் உடலில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா?

மிகைப்படுத்துவது

மிகைப்படுத்துவது

சில நேரங்களில் பெண்கள் ஆபாச திரைப்படங்களை நகலெடுப்பதால் முழு அனுபவத்தையும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்த முடியும் என்று நினைக்கிறார்கள். பெண்கள் உரத்த ஒலிகளை எழுப்புகிறார்கள், மேலும் ஆக்ரோஷமாக மாறுகிறார்கள் அல்லது செயற்கையாக நடந்துகொள்கிறார்கள். விஷயங்களை பெரிதுபடுத்துவது கலவியின் அமைதியைக் கெடுக்கும். இதுபோன்ற சமயங்களில் நீங்கள் நீங்களாவே இருங்கள் அதுதான் ஆரோக்கியமான கலவிக்கு நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mistakes Women Make During Love making

Check out the common mistakes women make during love making.
Story first published: Saturday, May 23, 2020, 17:35 [IST]