Just In
- 54 min ago
உடல் எடையை குறைக்கும்போது இரவு உணவிற்கு முட்டை அல்லது கோழி எடுத்துக்கொள்வது நல்லதா?
- 1 hr ago
புதினா சட்னி
- 1 hr ago
திருமணமான ஆண்கள் தினமும் 'இத' ஒரு கையளவு சாப்பிடுவது ரொம்ப நல்லதாம்... இது ஆண்களின் பல பிரச்சனையை போக்குமாம்..
- 2 hrs ago
இரவு உணவை எத்தனை மணிக்குள் சாப்பிட வேண்டும்? விரைவாக சாப்பிடுவது உண்மையில் நல்லதா?
Don't Miss
- Sports
"ஓய்வு அது நியாயமாக இருக்காது".. சிஎஸ்கேவின் கடைசிப்போட்டி.. கேப்டன் தோனி கூறிய முக்கிய கருத்து!
- Technology
44எம்பி செல்பி கேமரா, 44வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு: பட்ஜெட் விலையில் அறிமுகமான விவோ ஒய்75!
- News
"தமிழ் கத்துக்கோங்க.. ரொம்ப நல்லது" - என்னப்பா பாஜக அமைச்சரே இப்படி சொல்றாரு.. விஷயம் என்ன?
- Automobiles
அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய ஸ்கார்பியோ காரின் அறிமுகம் எப்போது? அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!
- Finance
பணவீக்கத்தினால் ஐடி பங்குகள் தடம் புரளுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
- Movies
வொர்க் அவுட்டை நிறுத்த மாட்டேன்... ஷூ கழண்டாலும் வொர்க் அவுட்டை நிறுத்தாத ஐஸ்வர்யா ரஜினி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க திருமண உறவில் 'இந்த' காதல் விஷயங்கள நீங்க செஞ்சீங்கனா... வேற லெவலில் சந்தோஷமா வாழலாமாம்!
திருமண உறவு என்பது மிகவும் அழகானது. எப்போதும் நாம் வாழ்கின்ற வாழ்க்கையை பொறுத்துதான் அது மகிழ்ச்சியாகவும் இல்லை துன்பமாகவும் இருக்கும். திருமண உறவு நமக்கு பல கடமைகளையும் பொறுப்புகளையும் வழங்குகிறது. ஒரு திருமண உறவு மகிழ்ச்சியாக இருக்க, காதல் மற்றும் ஆரோக்கியமான தொடர்பு மிக முக்கியம். தவறான புரிதல்கள் மற்றும் சண்டைகள் வராமல் இருக்க இந்த அம்சங்கள் மிகவும் அவசியம் என்பதை தம்பதிகள் தெரிந்துகொள்ள வேண்டும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் பிரச்சனைகள் மற்றும் சூழ்நிலைகளை நுணுக்கமாக புரிந்து கொள்ளும்போது, அது சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களை குறைக்கிறது.
இதனால், குடும்பத்தில் பல பிரச்சனைகள் தவிர்க்கப்படும். உறவு மகிழ்ச்சியாக அமைய முதலில் ஒருவரையொருவர் காதலிக்க வேண்டும். மேலும், பொதுவான காதல் விஷயங்களை கடைப்பிடிப்பது வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு வழிவகுக்கும். திருமணத்தில் உள்ள காதல் மொழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

உறுதிமொழிகள்
நேர்மறையான வார்த்தைகள் ஒரு நபரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு திருமணத்திற்குப் பயன்படுத்தப்படும்போது, அது ஒரு தம்பதிகளின் உறவை மலரச் செய்யலாம். அது பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் கூட நேர்மறையான உறுதிமொழிகள் உங்கள் உறவை எப்போதும் பிணைத்து வைத்திருக்கும். பாராட்டுக்கள், ஊக்கமளிக்கும் வார்த்தைகள், இனிமையான செய்திகள் மற்றும் அழகான 'ஐ லவ் யூ' ஆகியவை சலிப்பான திருமண உறவைகூட காலப்போக்கில் அன்பான ஒன்றாக மாற்றும்.

போதுமான நேரம் செலவிடுதல்
உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேரத்தைச் செலவிடுவது, அவர்கள் உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதை உணர உதவும். தரமான நேரம் வெறுப்பையும் ஏமாற்றங்களையும் கணிசமாகக் குறைக்கும். உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களை ஒன்றாகச் செய்வது அல்லது நீண்ட உரையாடல்களை மேற்கொள்வது உங்கள் உறவைத் தொடர மற்றொரு சிறந்த வழியாகும்.

உதவும் மனப்பான்மை
உங்கள் மனைவிக்கு அவர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகளுக்கு நீங்கள் உதவுவது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். ஒரு குழுவாக வேலை செய்வது, வேலையில் ஒருவருக்கொருவர் உதவுவது சுமையை குறைக்க ஒரு சிறந்த வழியாகும். இது தம்பதிகள் இருவருக்குள்ளும் நெருக்கத்தை அதிகரிக்கும். இல்லையெனில் அது அழுத்தமாக உணர்கிறது. உங்கள் துணையின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் தேவைப்படலாம்.

தொடுதல் உணர்வு
உங்கள் துணையின் கைகளைப் பிடிப்பது, அவர்களின் நெற்றியில் அல்லது கன்னங்களில் சிறிய முத்தங்கள் கொடுப்பது, தொடர்ந்து அவர்களின் கைகளைத் தொடுவது ஆகியவை அன்பின் மற்றொரு வடிவமாகும். இது அவர்களின் வாழ்க்கையில் உங்கள் இருப்பை உறுதிப்படுத்துகிறது. வசதியான உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்துவது உண்மையில் திருமணத்திற்கு மிகவும் முக்கியமானது. இது உங்கள் உறவை மேலும் பலப்படுத்துகிறது.

பரிசுகளின் சின்னம்
பண்டிகை தினங்கள் அல்லது விசேஷ சந்தர்ப்பங்களில் உங்கள் மனைவிக்கு பரிசு வழங்குவதைத் தவறவிடாதீர்கள். இது உங்கள் அன்பை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். மேலும் நீங்கள் இன்னும் மேலே செல்ல விரும்பினால், உங்கள் பங்குதாரருக்கு அழகான பூக்கள், சாக்லேட்டுகள் அல்லது அவர்கள் விரும்பும் பொருட்களை பரிசளிக்கவும். இது நிச்சயமாக அவர்களின் உற்சாகத்தை உயர்த்தும் மற்றும் அவர்கள் மீண்டும் உங்களை காதலிக்க வைக்கும். இது உங்களின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு உதவும்.

ஆரோக்கியமான தொடர்பு
உங்கள் காதல் மொழியை அறிவதன் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, அது உங்கள் துணையுடன் உங்கள் தொடர்புத் திறனை வலுப்படுத்தும். நீங்கள் எப்படி அன்பைப் பெற விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானித்தவுடன், உங்கள் உறவை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றிய ஆக்கபூர்வமான உரையாடலை தம்பதிகள் இருவரும் நிகழ்த்தலாம்.