For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நல்ல காதலிக்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? இந்த மாதிரி காதலி கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!

ஆண்களின் எதிர்பார்ப்புகள் வெறும் உடல் சார்ந்ததாக மட்டுமே சித்தரிக்கப்படுகிறது, ஆனால் பெண்களை விட ஆண்களே அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பதே உண்மை.

|

பொதுவாக ஆண்கள்தான் காதலில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். பெரும்பாலான காதல்கள் முதலில் முன்மொழியப்படுவது ஆண்களின் மூலமாகத்தான், பெண்களுக்கு வெறும் வழிமொழியும் வேலை மட்டும்தான் வழங்கப்படுகிறது. விரட்டி விரட்டி காதலிக்கும் ஆண்களுக்கு காதலிக்க தொடங்கிய பிறகு அவர்களின் ஆர்வம் குறைவதை பார்க்கலாம். அதற்கு காரணம் அவர்களின் எதிர்பார்ப்பு பூரித்தியாகாமல் இருப்பதுதான்.

How To Become Good Girlfriend

ஆண்களின் எதிர்பார்ப்புகள் வெறும் உடல் சார்ந்ததாக மட்டுமே சித்தரிக்கப்படுகிறது, ஆனால் பெண்களை விட ஆண்களே அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என்பதே உண்மை. உடல் ஈர்ப்பைக் காட்டிலும் ஒரு பெண் உணர்ச்சிரீதியாக ஒரு ஆணை ஈர்க்கத் தொடங்கும்போது அவனின் காதல் எல்லைகள் அற்றதாக மாறும். ஆண்களை உணர்ச்சிரீதியாக கவர பெரிய முயற்சி எதுவும் தேவையில்லை, பெண்களின் சின்ன சின்ன செயல்கள் கூட அவர்களை ஆயுள் முழுவதும் பெண்ணின் அன்பிற்கு அடிமையாக மாற்றும். சிறந்த காதலியாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய மற்றும் எளிதில் செய்யக்கூடிய சின்ன சின்ன செயல்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 காதலியில்

காதலியில் " நண்பராக " இருக்க வேண்டும்

நீங்கள் காதலில் இருக்கும் போது உங்களுக்குள் கட்டியணைப்பதும், முத்தமும் மட்டும் இருக்கக்கூடாது. வலிமையான தொடர்பும் , ஆழமான நெருக்கமும் இருக்க வேண்டும். சிறந்த நட்பு இருக்கு இடத்தில் மட்டுமே ஆழமான புரிதல் இருக்கும். அவருக்கு துணையாக இருங்கள், உங்கள் ஆர்வங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், ஒருவருக்கொருவர் கருத்துக்களை மதிக்கவும். உங்களிடம் கூறினால் தன்னுடைய பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று அவர்கள் நம்ப வேண்டும்.

நண்பர்களை புறந்தள்ளக்கூடாது

நண்பர்களை புறந்தள்ளக்கூடாது

பெண்கள் செய்யும் முக்கியமான தவறு இதுதான். நல்ல காதலி ஒருபோதும் தனது காதலனை அவரது நண்பர்களிடம் இருந்து பிரிக்க மாட்டார். " நானா உன் பிரண்ட்ஸா " அப்படினு கேக்கற உறவுல ஆண்கள் எப்போதும் சந்தோஷமா இருக்க மாட்டாங்க. உங்களை காதலிக்க தொடங்குவதற்கு முன்னரே அவரின் நண்பர்களின் அவருடன் இருந்தார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். எனவே முடிந்தவரை அவர்களை மதிக்க பழகிக்கொள்ளுங்கள். உங்களுக்கும், உங்கள் தோழிகளுக்கும் இடையில் காதலர் வருவதை நீங்கள் விரும்ப மாட்டிர்கள் அல்லவா அதேபோல்தான் இதுவும்.

நம்ப வேண்டும்

நம்ப வேண்டும்

அவருக்கு போதுமான இடம் கொடுங்கள், எனவே நீங்கள் அவரை நம்புகிறீர்கள் என்று அவர் உணருகிறார். அவர் இருக்கும் இடத்தைப் பற்றி எப்போதும் அவரிடம் கேள்வி கேட்பது அவருக்கு சிறையில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். நீங்கள் பொஸசிவ் கொண்டவராகவே அவருக்கு காட்சியளிப்பீர்கள். நல்ல காதலிக்கு காதலனை நம்பவும் தெரிய வேண்டும், அந்த நம்பிக்கை உடைக்கப்படும்போது என்ன செய்ய வேண்டும் என்றும் தெரிய வேண்டும்.

MOST READ:650 பெண்களை கொன்று அவர்களின் இரத்தத்தில் குளித்த மனித அரக்கி... வரலாற்றின் கொடூரமான பெண்கள் ...!

மகிழ்ச்சியான ஆளுமையை வளர்த்துக் கொள்ளுங்கள்

மகிழ்ச்சியான ஆளுமையை வளர்த்துக் கொள்ளுங்கள்

எல்லோரும் ஒரு மகிழ்ச்சியான ஆளுமைக்கு ஈர்க்கப்படுகிறார்கள். எதிர்மறை என்பது உங்களுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதைப் பொருட்படுத்தாமல் மக்களை உங்களிடம் இருந்து விரட்டுகிறது. சிறந்த காதலிகள் எப்பொழுதும் மகிழ்ச்சியான ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். இது ஆண்களை கம்ஃபர்ட்டாக உணர வைக்கும். இதனால் அவர் உங்களுடன் அதிக நேரம் செலவிட விரும்புவார், மேலும் அவர் உங்களைப் பிரியப்படுத்த விரும்புவார்.

தவிர்க்க முடியாத கோரிக்கையாக மாற்றவும்

தவிர்க்க முடியாத கோரிக்கையாக மாற்றவும்

சில நேரங்களில் ஆண்கள் குழப்பமிக்கவர்களாகவும், குழந்தைத்தனமாகவும் நடந்து கொள்வார்கள். இந்த தருணங்களில் நீங்கள் கத்த தொடங்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு நல்ல காதலி " நச்சரிக்கும் " கலையை நன்கு அரிதிந்த்து வைத்திருப்பார். உங்கள் குரலை உயர்த்த வேண்டாம், அதற்குப் பதிலாக மென்மையாக சொல்லப்போனால் வசியம் செய்யும் தொனியில் பேசுங்கள். உங்கள் இனிமையால் அவரை நிராயுதபாணியாக்குங்கள், அப்போது அவர்கள் அமைதியாகித்தான் தீர வேண்டும்.

கேட்டல் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்

கேட்டல் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்

மோசமான நாளுக்குப் பிறகு மாலை நேரத்தில் அவர் புலம்ப நினைத்தால் அவர் புலம்பட்டும் விட்டுவிடுங்கள். ஆரோக்கியமான காதலுக்கு தொடர்பு கொள்வதும், கேட்பதும் மிகவும் முக்கியாயமானதாகும். நல்ல காதலி எப்போது பேச வேண்டும், அப்போது காதலர் பேசுவதை கேட்க வேண்டும் என்று நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

MOST READ:காதலர்களுக்கு அரசாங்க செலவில் திருமணம் செய்து வைக்கும் விசித்திர வழக்கம்... எங்கு தெரியுமா?

கேட்டல் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்

கேட்டல் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்

மோசமான நாளுக்குப் பிறகு மாலை நேரத்தில் அவர் புலம்ப நினைத்தால் அவர் புலம்பட்டும் விட்டுவிடுங்கள். ஆரோக்கியமான காதலுக்கு தொடர்பு கொள்வதும், கேட்பதும் மிகவும் முக்கியாயமானதாகும். நல்ல காதலி எப்போது பேச வேண்டும், அப்போது காதலர் பேசுவதை கேட்க வேண்டும் என்று நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

சரியான சண்டையை தேர்வு செய்யுங்கள்

சரியான சண்டையை தேர்வு செய்யுங்கள்

சிறிய விஷயங்களுக்கெல்லாம் பெரிய சண்டையை ஆரம்பிக்காதீர்கள். ஒரு நாளை மோசமான நாளாக மாற்றவோ அல்லது முற்றிலுமாக உறவை முறித்துக் கொள்ளவோ சிறிய காரணங்களை கையில் எடுக்க வேண்டாம். சண்டை போட வேண்டிய விஷயங்களுக்கு சண்டை போட வேண்டும் என்பது உண்மைதான் ஆனால் அனைத்திற்கும் சண்டை போடுவது உங்கள் மீதான வெறுப்பைத்தான் அதிகரிக்கும். எதற்கு சண்டை போட வேண்டும் என்று தேர்ந்தெடுத்து சண்டை போடுங்கள்.

பாராட்ட பழகிக்கொள்ளுங்கள்

பாராட்ட பழகிக்கொள்ளுங்கள்

அவர் உங்களை எவ்வாறு நடத்துகிறார் என்பதைப் பாருங்கள், நீங்கள் ஒன்றாகச் செய்யும் விஷயங்களைப் பற்றி சிந்தியுங்கள். உங்கள் உறவு முழுவதும் நீங்கள் அவரை எவ்வளவு பாராட்டினீர்கள் என்பதை அவரிடம் சொல்லவும் காண்பிக்கவும் வழிகளைக் கண்டறியவும். இது அவரின் அனைத்து முயற்சிகளுக்கும் கிடைத்த வெகுமதியாக நினைப்பார்கள். எனவே உங்களுடன் ஒரு நீண்டகால உறவில்இருப்பதில் அவருக்கு எந்த தயக்கமும் இருக்காது.

MOST READ:உடலுறவின் போது பெண்கள் செய்யும் இந்த செயல்கள் ஆண்களுக்கு வெறுப்பை மட்டும்தான் ஏற்படுத்துமாம்...!

 தன்னம்பிக்கையுடன் இருங்கள்

தன்னம்பிக்கையுடன் இருங்கள்

தன்னம்பிகையை விட பெண்களை அழகாக காட்டும் விஷயம் வேறு எதுவும் இல்லை. பாதுகாப்பின்மை மற்றும் சந்தேகங்கள் உங்களுக்குள் இருக்கும் சிறந்த குணத்தை அழிக்க அனுமதிக்காதீர்கள், நீங்கள் எந்த வகையான பெண் என்பதை இதிலிருந்துதான் அறிய முடியும். ஆண்களை இதைவிட பெரிதாக ஈர்க்கும் விஷயம் வேறெதுவும் இல்லை. இதனாலேயே நீங்கள் அதிகம் நேசிக்கப்பட்ட வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Become Good Girlfriend

Here are some easy ways to be a good girlfriend to your boyfriend.
Story first published: Wednesday, February 12, 2020, 15:27 [IST]
Desktop Bottom Promotion