Latest Updates
-
மக்கள் நீண்ட ஆயுளோடு வாழும் டாப் 10 நாடுகள் - இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மகாளய அமாவாசைக்கு கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பாருங்க.. -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும் -
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்! -
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: அக்டோபர் இறுதியில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
முதல் உலகப்போரின் ஹீரோவாக விளங்கிய நாய் - அந்த நாய் அப்படி என்ன செய்தது தெரியுமா? -
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட் உறவில் நீங்க இருக்கீங்களா? அப்ப இந்த விஷயங்கள கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!
இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தங்கள் நோக்கங்களைப் பற்றி தெளிவாக இருந்தால் மட்டுமே பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ் உறவில் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
நாகரீகம் வளர வளர உறவுகளும் பல்வேறு வகைகளாக வளர்ந்து வருகிறது. பெஸ்டி, லிவிங் டூ கெதர், ஒன் நைட் ஸ்டாண்ட் மற்றும் பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ் என பல்வேறு உறவுகளில் இளைஞர்கள் ஈடுபடுகிறார்கள். இப்போதுள்ள இளைஞர்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகள் நிறைந்த உறவுகளில் இருக்க அச்சம் கொள்கிறார்கள். எந்த கமிட்மென்டும் இல்லாத உறவுகளில் இருக்கவே பலர் விரும்புகிறார்கள். காலப்போக்கில், நட்பு மற்றும் உறவுகளின் புரிதலும் மாறிவிட்டது. நீண்ட காலம் நீடிக்கக்கூடிய தீவிர உறவுகள், தற்போது உருமாற்றம் கண்டுள்ளன. அதை பலர் சாதாரண உறவுகளாக மாற்றியுள்ளனர். மேலும், இந்த உறவுகளில் நம் விருப்பப்படி இருக்கலாம், மகிழ்ச்சியாக வாழலாம் என நம்புகிறார்கள். அந்த உறவின் எல்லைகளை அறிந்து, உறவு கொண்டால் எந்த உறவும் கெட்டது அல்ல.

எனவே, நீங்களும் பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ் உறவில் இருந்தால், அதன் வரம்புகள் அல்லது விதிகள் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இல்லையெனில், அது உங்கள் உடல், மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். உங்களை மட்டுமல்லாமல் உங்களை சாந்தவர்களையும் பாதிக்கும். நீங்கள் பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ் உறவில் இருந்தால் மனதில் கொள்ள வேண்டிய விதிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ்
பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ் வகையான உறவில் எந்த நிபந்தனையும் அல்லது பிணைப்பும் இல்லாததால் அதில் ஈடுபடுவது எளிதானது மற்றும் இயற்கையானது. நிச்சயமாக, இது ஒன் நைட் ஸ்டாண்டிலிருந்து வேறுபட்டது. ஆனால் இது ஒரு காதலன்/காதலி உறவுபோல இருக்காது, மாறாக நண்பர்களாக இருப்பார்கள். இந்த உறவு இணைப்பில் பல நன்மைகள் இருந்தாலும், சில குறைபாடுகளும் உள்ளன. இந்த உறவிலிருந்து நீங்கள் வெளியேறினாலும், புறக்கணிக்கப்பட்டாலும், அது உங்களை பாதிக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நண்பருடன் செய்த இந்த தவறுகளை தவிர்ப்பது மற்றும் விதிகளை நினைவில் கொள்வது முக்கியம்.

உங்கள் நோக்கங்களுக்கு நேர்மையாக இருங்கள்
இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தங்கள் நோக்கங்களைப் பற்றி தெளிவாக இருந்தால் மட்டுமே பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ் உறவில் மகிழ்ச்சியாக இருக்க முடியும். உங்களை விரும்பும் நண்பருடன் நீங்கள் உறவில் இருந்தால், அவருடன் நீண்ட காலமாக நீங்கள் உறவில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அது நீண்ட காலத்திற்கு உங்கள் இருவரையும் காயப்படுத்தும். அதனால்தான் நீங்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்தே உங்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் நோக்கங்களைப் பற்றி நேர்மையாக இருக்க வேண்டும்.

முதலில் நட்பு
பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸின் அர்த்தம், நீங்கள் இருவரும் நண்பர்களாக இருக்கப் போகிறீர்கள். ஆனால் உங்களில் ஒருவர் கூட அந்த உறவை முடிக்க விரும்பினால், அவர் அல்லது அவள் உறவை முடித்துக்கொண்டு நண்பர்களாக மட்டும் இருக்கலாம். அதனால்தான் உங்கள் பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட் உறவு நிலையின் போது ஒரு நல்ல நண்பராக இருப்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். அதனால் இருவரும் நண்பர்களாக இருப்பது உங்கள் வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை தரும்.

நம்பத்தகாத எதிர்பார்ப்புகள் வேண்டாம்
உங்கள் நண்பருடன் நீங்கள் உடலுறவைப் பகிர்ந்து கொள்வதால், உங்களுக்கு அல்லது அவருக்குத் தேவைப்படும்போது ஒவ்வொரு முறையும் நீங்கள் அவர்களுக்காக இருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல. எந்த உறவாக இருந்தாலும் அது ஒருதலைப்பட்சமானது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருவரின் பரஸ்பர விருப்பம் மிக முக்கியம். மேலும், உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நம்பினால், உடனே அதை விட்டுவிடுவது நல்லது. அல்லது அதுகுறித்து உங்கள் நண்பரிடம் வெளிப்படையாக பேசுவது நல்லது.

அதிகம் ஈடுபட வேண்டாம்
ஆதாயங்களோடுதான் பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட் உறவில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். ஆம், நீங்கள் இருவரும் நண்பர்கள் மற்றும் நீங்கள் அவர்களுக்காக உணர்வுகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறீர்கள். ஆனால் இவை உங்கள் மற்ற நண்பர்களிடம் நீங்கள் வழக்கமாகக் கொண்டிருக்கும் உணர்வுகள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் நீங்கள் மிகவும் தீவிரமான உணர்வுகளை உணரத் தொடங்குகிறீர்கள் என்று நீங்கள் கண்டால், ஒரு படி பின்வாங்குவது நல்லது. உங்கள் நிலைமையைக் கண்டுபிடித்து, முன்னேறுவதை நிறுத்துவது புத்திசாலித்தனம்.

உறவில் இருப்பது போல் நடந்து கொள்ளாதீர்கள்
நீங்கள் ஒரு பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட் உறவில்தான் இருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். உறவில் இருப்பதைப்போல நீங்கள் நடந்துகொள்ளவோ அல்லது எதிர்பார்க்கவோ கூடாது. எனவே உங்கள் பங்குதாரர் உங்களுடன் மருத்துவரிடம் அல்லது உங்கள் உறவினரின் திருமணத்திற்கு வருவார் என்று எதிர்பார்ப்பது தவறான யோசனையாகும். இந்த உறவுக்கு வரம்புகளை அமைப்பது மிகவும் முக்கியமானது. அதனால் அது முற்றிலும் பாலியல் உறவுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் தீவிர உறவுகளாக மாறாது.



Click it and Unblock the Notifications
