Latest Updates
-
பழங்கள் ப்ரெஷாக இருந்தாலும் அதற்குள் புழுக்கள் இருக்க காரணம் என்ன? அவை எப்படி பழத்திற்குள் செல்கிறது தெரியுமா? -
சிம்ம ராசியில் வக்ரமாகும் குருபகவான்: இந்த 4 ராசிக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் இடம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
மதியம் 10 நிமிடத்தில் சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் மசாலா செய்யுங்க.. -
வேர்க்கடலை வைச்சு வெங்காயம், தக்காளி இல்லாம இப்படி கார குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
ஒல்லியாக இருந்தாலும் கொழுப்புக் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
60 லட்சம் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள உடலின் மிகப்பெரிய சுடுகாடு எந்த நாட்டில் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
டிசம்பர் மாதத்தில் இந்த 5 ராசிக்கு மகத்தான வெற்றியும், பணமும் குவியப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பன் தோசையும், பொட்டுக்கடலை சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு லாபம் கொட்டும் நாளாக இருக்குப்போகுதாம்
காலையில் உங்க பார்ட்னரோட 'இந்த' மாதிரி ரொமென்ஸ் பண்ணுனா பலமடங்கு இன்பம் கிடைக்குமாம்!
அதிகாலையில் எழுந்து காலை உணவை ஒன்றாகச் செய்யப் பழகுங்கள். காபி, காலை உணவு, முட்டை போன்றவற்றைச் செய்து, அவற்றை ஒன்றாகச் சாப்பிடுங்கள். ஏனெனில் இது உங்கள் இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமையை நிச்சயம் அதிகரிக்கும்.
ஆண், பெண் உறவுக்குள் வலுவான பிணைப்பு இருப்பது மிக அவசியம். பொதுவாக வளர்ந்து வரும் நவீன காலகட்டத்தில் தம்பதிகள் இருவரும் தங்களுக்கான நேரத்தை செலவிடுவது மிகவும் குறைவு. அவர்களுடைய பிணைப்பை அதிகரிக்க தனியாக தினமும் ஒரு மணி நேரம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. தினமும் காலை நேரம் உங்களுக்கானதாக மாற்றுங்கள். நீங்கள் நினைப்பதை விட காலை நேரம் மிகவும் ரொமாண்டிக்கானதாக உள்ளது. நீங்கள் காலையில் எழுந்தவுடன், உங்கள் துணையின் அருகில் இருப்பது உணர்ச்சி அலைகளாக இருக்கலாம் அல்லது வெறுமனே எழுந்து பல் துலக்குவதற்கான அவசரம் இருக்கலாம். ஆனால், பெரும்பாலான ஜோடிகளுக்கு, காலை நேரம் சில காதல் மற்றும் ரொமெண்ஸ் செய்வதற்கான மிகவும் கவர்ச்சியான நேரம் என்று நம்பப்படுகிறது.

தங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக தினமும் நாளை தொடங்குவது, அவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். மனதைக் கவரும் காலை உடலுறவு அல்லது நீடித்த முத்தங்கள் எதுவாக இருந்தாலும், காலை நேரத்தில் உங்கள் துணையை ஸ்பெஷலாக உணர வைப்பது நிச்சயம் அவசியம். ஏனெனில், இது உங்கள் பிணைப்பை வலுப்படுத்தும். வலுவான பிணைப்புக்காக தம்பதிகள் தினமும் காலையில் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

வாழ்த்துக்கள் கூறுவது
காலையில் உங்கள் துணைக்கு ‘காலை வணக்கம்' சொல்ல மறக்காதீர்கள். ஒரு புன்னகையுடன் இன்றைய நாள் மகிழ்ச்சியாக அமையும் என்று கூறுவது, அவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். அன்றைய தினம் அவர்களுக்கு மகிழ்ச்சியாக செல்லும். இந்த வாழ்த்து உங்கள் துணை காலையில் உங்கள் அருகில் இருப்பதை நீங்கள் உண்மையிலேயே கருதுகிறீர்கள் என்று உணர வைக்கும்.

பாராட்டுக்கள்
பாராட்டுவதை யார்தான் விரும்ப மாட்டார்கள். பாராட்டுக்கள் மகிழ்ச்சி மற்றும் செரோடோனின் அதிகரிக்க நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் துணையை அவர்களின் நாளின் தொடக்கத்தில் நீங்கள் பாராட்டினால், அது தானாகவே அவர்களை உற்சாகப்படுத்தி நல்ல தொடக்கத்தை கொடுக்கும். அத்துடன் உங்கள் துணையை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதையும் சொல்லலாம்.

காபி மற்றும் காதல்
அதிகாலையில் எழுந்து காலை உணவை ஒன்றாகச் செய்யப் பழகுங்கள். காபி, காலை உணவு, முட்டை போன்றவற்றைச் செய்து, அவற்றை ஒன்றாகச் சாப்பிடுங்கள். ஏனெனில் இது உங்கள் இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமையை நிச்சயம் அதிகரிக்கும். இது உங்கள் உறவை சமநிலைப்படுத்தும். இருவரும் ஒன்றாக மறந்து காலையில் பல விஷயங்களை பேசிக்கொண்டே காபி அருந்தலாம்.

கண் தொடர்பு
கண் தொடர்பு என்பது தம்பதிகளிடையே மிகவும் நுட்பமானது. இது ஒருவரை ஒருவர் கவர உதவுகிறது. உங்கள் துணையை ஆழமாகப் பாருங்கள். அவர் அல்லது அவள் கண்களை பார்த்து, அவர்களை பாராட்டுவதன் மூலம் நீங்கள் அவர்களை சிறப்புற உணர முடியும். கண் தொடர்பு என்பது உங்கள் பிணைப்பை வலுப்படுத்த ஒரு சிறந்த வழியாகும். மேலும் அதை காலையில் தொடங்குவது உங்கள் உறவில் எதிர்காலத்திற்கான காதலை அமைக்கும்.

ஜோக்ஸ்
சத்தமாக சிரிப்பதை விட ஒரு நாளைத் தொடங்க சிறந்த வழி எது உள்ளது? நகைச்சுவைகள் ஒரு நாளுக்கு முன்னுதாரணமாக அமையலாம் மற்றும் வேடிக்கையான நகைச்சுவைகளைப் பார்த்து சிரிப்பது உங்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கும். ஒரு காதல் மற்றும் நகைச்சுவை இரண்டும் கலந்த துணை நீங்கள் விரும்பியிருக்கக்கூடிய சிறந்த நபராக இருக்கலாம். ஒவ்வொரு காலையும் உங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
