For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஏமாற்றிய காதலனுக்கு ஏடாகூடமான தண்டனைகள் கொடுத்த காதலிகள்!

  By Staff
  |

  காதல் ஏற்படுத்தும் வலி மிகவும் கொடியது. காதலில் உண்மை, பொய் என்று இரண்டு வகை இல்லை. காதல் என்றாலே உண்மை தான். அதில் கொஞ்சம் போலித்தனம் கலந்தாலும், அதன் பெயர் வேறு. பணத்தை, வேலையை இழந்தவனை காட்டிலும் காதலை இழந்தவனின் வலி கொடியதாக இருக்கும். பணம், வேலை இழந்தால் உடனே வேறொன்றை தேடிக் கொள்ளவோ, சம்பாத்தித்துவிடவோ முடியும்.

  ஆனால், காதலை இழந்த பிறகு மனதுக்குள் ஒரு பெரிய வெற்றிடம் உண்டாகும். அதை நிரப்ப உண்மையானவர்கள் வந்தாலுமே கூட அவர்கள் மீது வீண் சந்தேகம் விளையும். காதலில் ஏமாற்றப்பட்டால் அதற்கான சிறந்த பழிக்குப்பழி அவர்கள் கண்முன் வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுவதுதான்.

  இங்கே சிலர், தங்கள் காதலர்கள் ஏமாற்றியது அறிய வந்த போது, வேற லெவலில் அவர்களை தண்டித்துள்ளனர்... கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தாலும்.. இத்தகைய தண்டனைகள் அறிந்தால் இனிமேல் ஏமாற்ற கொஞ்சம் யோசிப்பார்கள் தான்....

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  துர்நாற்றம்!

  துர்நாற்றம்!

  அவன் என்னை ஏமாற்றியதை அறிந்தவுடன் கோபம் தலைக்கேறியது. ஆனால், அவனுக்கு மோசமான, வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கருதினேன். அவன் உறங்க செல்வதற்கு முன், அழுகிய, துர்நாற்றம் வீசும் மீன்களை படுக்கையறையில் கண்ணில் படாத இடத்தில் ஆங்காங்கே வைத்துவிட்டேன். சாப்பிட்ட பிறகு உறங்குவதற்கு வந்த அவனால் உறங்கவே முடியவில்லை. துர்நாற்றம் தாங்காமல் ஹாலுக்கு சென்று படுக்கலாம் என்று நினைத்தான். அங்கேயும் நான் அதே விஷமத்தனத்தை கையாண்டிருந்தேன்.

  சொட்டை!

  சொட்டை!

  அது மிகவும் கொடுமையான வலி. அவன் ஏமாற்றியதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. எனவே, அவன் குளிக்க செல்லும் முன்னர், அவனது ஷாம்பூ பாட்டிலில் ஹெவியான ஹேர் ரிமூவல் க்ரீமை கலந்து வைத்துவிட்டேன். அவன் குளித்து முடித்து வரும் போது அந்த மொட்டை தலையுடன் அவன் வெட்கி தலை குனிந்து வருவதை கண்டு ரசிக்கவே இப்படியான் விஷயத்தை கையாண்டேன்.

  சிறுசு!

  சிறுசு!

  அவனது எக்ஸ் காதலியுடன் இன்பமாக இருந்து வந்ததை மிக தாமதாமாகவே அறிந்தேன். அவனுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கருதி, அவனது சிறிய ஆண்குறியை புகைப்படம் எடுத்து பகிர்ந்துவிட்டேன். அதை, அவனுக்கு சிலர் எப்படி பெரிதாக்க வேண்டும் என்ற செய்தியை மெயிலில் அனுப்ப, இதுவரை அதை பகிர்ந்தது யார் என்று தெரியாமல் மண்டையை பிய்த்து கொண்டு உலாவி வருகிறான்.

  லைவ் வீடியோ!

  லைவ் வீடியோ!

  அவன் என்னை ஏமாற்றியதை நான் அறிந்த போது மிகவும் வருந்தினேன். அதை அவனும் வருந்த வேண்டும் என்பதால், திட்டமிட்டு அவனை சமூக தளங்களில் லைவ் வீடியோ பதிவில் வரவழைத்து அவமானப்படுத்தி அனுப்பினேன். அனைவரும் அறியட்டும் அவன் என்னை ஏமாற்றியதை.

  எச்.ஐ.வி

  எச்.ஐ.வி

  அவள் என்னை ஒருமுறை ஏமாற்றிவிட்டாள் என்பதை அவளே தன் வாயால் கூறினாள். ஏமாற்றியதை அவர்களே ஒப்புக்கொண்டால் மன்னித்து விட வேண்டுமா என்ன? எனவே, அவளுக்கு பால்வினை நோய் தாக்கம் இருப்பது போன்ற போலி மருத்துவ பரிசோதனை அறிக்கை ஒன்றை அவளிடமே அளித்தேன். அந்த நொடி, அதை கண்டு அவள் முகம் வெளிர்ந்து போனதை என்னால் இன்றும் மறக்க முடியாது.

  விரட்டினேன்!

  விரட்டினேன்!

  அது ஒரு கடும் குளிர் காலம். யாருமே வெளியே செல்ல மாட்டார்கள். பனிமூட்டம் நிறைந்திருக்கும். அப்போது என் உடல் தீ போல எரிந்துக் கொண்டிருந்தது. காரணம் அவன் தான். தீ மட்டும் தான் சுடுமா... குளிரும் சுடும் என்பதை நிரூபிக்க... அவனை அந்த கடும் குளிரில் வீட்டை விட்டு விரட்டினேன்.

  இரகசியம்!

  இரகசியம்!

  அவன் என்னை ஏமாற்றினான், மன்னித்தேன் ஏற்று கொண்டேன். ஆனால், மீண்டும், மீண்டும் மூன்று முறை ஏமாற்றி.. மீண்டும் மன்னிப்பு கேட்டான். அவனை விரட்டிவிடுவதை காட்டிலும், என் பின்னே சுற்றவிட வேண்டும் என்று கருதினேன். அவன் வாழ்க்கையை நாசம் செய்யும் இரகசியத்தை என்வசம் வைத்துக் கொண்டு அவனை பிளாக்மெயில் செய்துக் கொண்டிருக்கிறேன்.

  வெற்றி!

  வெற்றி!

  அவன் என்னை ஏமாற்றிவிட்டான் தான், என் மனம் வருத்தத்தில் துவண்டு போனதுதான். அதற்காக அவனை பழித்தீர்த்து என்ன பயன்? அதனால் எனக்கு என்ன கிடைக்கப் போகிறது. அவனைவிட்டு விலகினேன். அவனைவிட் சிறந்த துணையை தேர்வு செய்தேன். இன்று நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். ஆனால், அவன் தனிமையில் வாடி வருகிறேன். இதுதான் ஒரு சிறந்த பழிவாங்கும் முறை என்று நான் கருதுகிறேன்.

  பெயிண்ட் பால்!

  பெயிண்ட் பால்!

  அவன் என்னை ஏமாற்றிவிட்டான் என்று தெரிந்தவுடன், எனக்கு மிகவும் பிடித்த பெயிண்ட் பால் விளையாட்டை ஆயுதமாக எடுத்தேன். வாசலில் நின்று கொண்டிருந்த வந்து காரை.. இரவு முழுக்க பெயிண்ட் பால் கொண்டு சுட்டுக் கொண்டே இருந்தேன். ஆத்திரம் தீர்ந்தது. பொழுது விடிந்தது. அவனை தலைமுழுகி சென்றுவிட்டேன்.

  மலமிளக்கி!

  மலமிளக்கி!

  அவன் என்னை ஏமாற்றிவிட்டான் என்றவுடன் மிகவும் ஆத்திரமாக இருந்தேன். அவன் தினமும் எடுத்துக் கொள்ளும் ப்ரோடீன் பவுடரில் மலமிளக்கி மருந்தை கலந்தேன். சில காலம் ஏன் அப்படியான தாக்கம் ஏற்படுகிறது என்றே தெரியாமல் உலாவி வந்தான். மேலும் அவனது உள்ளாடைகளில் மிளகாய் தூள் தூவி வைத்திருந்தேன்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  The Wild Ways They Got Revenge On Their Cheating Ex

  These people were cheated on and their partners sure messed with the wrong person. Find out what they did to seek revenge on their cheating partner in these wild confessions.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more