Latest Updates
-
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
எத்தனை முயற்சித்தும் 18+ ஆசைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன செய்ய? - இரகசிய டைரி #011
எத்தனை முயற்சித்தும் 18+ ஆசைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன செய்ய? - இரகசிய டைரி #011
எனக்கு (31) திருமணம் நிச்சயமாகி இரண்டு மாதங்கள் ஆகியது, ஜாதகம், கட்டம், நாள், மாதம் என பல காரணம் கூறி திருமணத்தை ஆறு மாத காலத்திற்கு தள்ளிப் போட்டு விட்டனர். சிறு வயதில் நான் கண்ட சில உண்மை சம்பவங்களால், என்னுள் 18+ ஆசைகள் அதிகம் இருக்கிறது. நான் எத்தனை முயற்சித்தும் இதை கட்டுப்படுத்த முடியவில்லை. யாரும் என்னுடன் இல்லை, தனிமையில் இருக்கிறேன் என்றால், தன்னைப்போல ஆபாசப்படம் பார்க்க துவங்கிவிடுகிறேன்.
முதல்முறையாக வட இந்தியாவிற்கு கல்லூரி சுற்றுலா சென்ற போது போகக் கூடாத இடத்திற்கும் ஒருமுறை சென்று வந்துள்ளேன். அதன் பிறகு ஒருசில முறை எனது ஆசைகளை தீர்த்துக் கொள்ள சென்றேன். பிறகு அச்சத்தின் காரணமாக மருத்துவ பரிசோதனையும் செய்துக் கொண்டேன்.
என் கவலை என்னவெனில், இந்த இச்சை அல்லது ஆபாச எண்ணங்கள் எனது திருமணத்தை பாதித்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். என்னுள் இப்படியான ஆசைகள் இருப்பது நண்பர்களுக்கு கூட தெரியாது. பல சமயம் நான் இதற்காக வருந்தியதும் உண்டு. நான் என்ன செய்ய? இதற்கான தீர்வு தான் என்ன?

கட்டுப்பாடு!
புகை பழக்கம் விடவே முடியவில்லை, கோபம் வந்தால் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரிவதில்லை என்று கூறிய பலரும், முயற்சித்து தோற்ற பலரும் கடைசியில் என்றோ ஒரு நாள் திருந்தியது உண்டு.
மனக் கட்டுபாட்டை தாண்டி, நமது மனதை மீண்டும் அந்த வட்டத்திற்குள் அழைத்து செல்லும் சூழல் மற்றும் மக்களை விட்டு கொஞ்சம் தள்ளியும் இருக்க வேண்டும்.

திருடன்!
பார்பதை எல்லாம், கண்ணில் படுவதை எல்லாம் திருடும் குணம் கொண்ட ஒருவன் ஒரு கட்டத்தில் ஆன்மீக பயணத்தில் தன்னை உட்படுத்திக் கொண்டு, முடிந்த வரை உதவி செய்து பாவத்தை போக்கி கொள்ள முயற்சிப்பதை நாம் கண்டிருக்கிறோம்.
இதற்கு காரணம் அச்சம். மீண்டும் நாம் அதே தவறை செய்தால், நிச்சயம் நமக்கான தண்டனை உண்டு என்ற அச்சம். அந்த அச்சம் வந்துவிட்டாலே போதும், தவறுகளை திருத்திக் கொள்ளலாம்.

திருமணம்!
திருமணம் என்ற செயல் உங்களை நெருங்கும் வரை நீங்கள் ஆசைப்பட்ட மாதிரி இருந்திருக்கலாம். ஆனால், திருமண வாழ்க்கை உங்களுக்கு அந்த அச்சத்தை கொண்டு வந்துள்ளது. இந்த அச்சம் தான் உங்களை தீர்வுக் காண வேண்டி தள்ளியுள்ளது.
இதுவே ஒரு நல்ல மாற்றம் தான். அச்சம் கலந்த சுயக் கட்டுப்பாட்டில் தான் அனைத்தும் அடங்கி இருக்கிறது.

வருத்தம் வேண்டாம்...
நீங்கள் சிறு வயதில் காணக் கூடாத சில காட்சிகளை கண்டு இப்படியான எண்ணங்கள் கொண்டதாக கூறுகிறீர்கள். அப்படியான காட்சிகளை நிஜத்தில் காணமலேயே அதிக இச்சை எண்ணம் கொண்டிருக்கும் மக்களும் இருக்கிறார்கள்.
இயற்கையாக ஹார்மோன் சுரக்கும் போது எண்ணங்கள் விளையும் என்றாலும், சுயக் கட்டுப்பாடு என்ற விஷயம் தான் அதன் தாக்கம் மற்றும் வீரியத்தை அதிகரிக்க, குறைக்க செய்கிறது.

பலவகை..
உடலுறவில் அதிகம் ஈடுபட நிறைய காரணங்கள் மற்றும் வகைகள் உண்டு. சிலர் வெறியுடன் ஈடுபடுவார்கள், அவர்கள் மிருகம் போல உடலுறவில் ஈடுபடுவார்கள்.
சிலர் ஆசைக்காக, விரும்பி ரசித்து ஈடுபடுபவர்கள். இவர்களுக்கு இப்படியான ஆசை அதிகரிக்க பெரிய காரணம் அவர்கள் உடலில் அந்த ஹார்மோன் அதிகம் சுரப்பதால் கூட இருக்கலாம்.
சிலர் தங்கள் வாழ்வில் நடந்த ஏதேனும் ஒரு சம்பவத்தின் தாக்கத்தால் இப்படி ஈடுபடுவார்கள். அவர்கள் சைக்கலாஜிக்கலாக உண்டான பாதிப்பால் இப்படி ஈடுபடுகிறார்கள்.
தேவை, ஆசை, வெறி, கோபம், என உடலுறவில் அதிகம் ஈடுபட பல காரணங்கள் இருக்கின்றன.

வேறு கவனம்...
அனைவருக்கும் கூறும் அதே உபதேசம் தான்... பலர் கூறியும் நீங்கள் இதை அறிந்திருக்கலாம். மனதை ஒருமுகப்படுத்த முயற்சிப்பதால் இத்தகைய எண்ணங்களில் இருந்து நீங்கள் எளிதாக வெளிவரலாம்.
பார்ன் / ஆபாசப் படம் பார்ப்பது தவறில்லை. ஆனால், அதை உண்மை என்று நம்பி, அதுதான் உண்மையான தாம்பத்தியம், அப்படி தான் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவது தான் தவறு.

அது உருவாக்கம்..
ஆபாசப்படங்கள் என்பது, நீங்கள் விரும்பி பார்க்கும் உங்களுக்கு பிடித்த நடிகர் நடிக்கும் கமர்ஷியம் மூவி போன்றது தான். அதிலும், ஆக்டிங், ஒளிப்பதிவு, கேமரா, இயக்குனர், ஸ்கிர்ப்ட் எடிட்டிங் என பல விஷயங்கள் இருக்கின்றன. ஆபாசப் படங்களில் நடிப்பவர்களும் நன்கு நடிப்பார்கள். நீங்கள் நினைப்பது போல இப்படி செய்தால் அதிக இன்பம் வருமோ என்பது எல்லாம் வெறும் மாயை, நடிப்பு.

எதிர்பார்ப்பு!
இயற்கையை மிஞ்ச செயற்கையாக சிலவற்றை முயற்சிக்கலாம். ஆனால், அதுவும் இயற்கையாக அழிவு தேடி தான் போகும். அப்படி தான் இந்த ஆபாசப் படங்களும், உண்மை தாம்பத்தியத்தை தாண்டிய ஒன்றாக இதைப் பார்க்கிறார்கள், ஆனால் இதை கொண்டு போய் தாம்பத்திய உறவில் மனைவியுடன் ஒப்பீடு செய்தால்... உறவில் விரிசல் மட்டுமே மிஞ்சும்.

மூட்டைக்கட்டி வையுங்கள்!
முடிந்த வரை ஆபாசப் படத்தை நம்புவதை கைவிடுங்கள். அது வெறும் மாயை என்பதை நம்புங்கள். தாம்பத்தியம் என்பது அவரவர் புரிதல், உடல் மற்றும் மன ஈடுபாட்டை சார்ந்த அனைவரிடமும் வேறுபட்டு காணப்படும் உறவு. அதில், ஆசைப்படலாமே தவிர, தன் விருப்பத்தை திணிக்க முடியாது.

நல்லதே நடக்கும்!
இன்னும் உங்கள் திருமணத்திற்கு ஆறு மாத காலம் இருக்கிறது. உங்களுக்கு பிடித்த விளையாட்டில் ஆர்வம் செலுத்துங்கள். முடிந்தால், இந்த ஆறு மாதம் யோகா அல்லது தியான வகுப்புகளுக்கு செல்லுங்கள். தனிமையை சில மாதங்களுக்கு தவிர்த்து விடுங்கள். இவை எல்லாம் உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வரும். உங்கள் இல்வாழ்க்கை சிறப்பாக அமையும்.



Click it and Unblock the Notifications