யார வேணாலும் லவ் பண்ணு ஆனா என்னைய கல்யாணம் பண்ணிக்க! My story # 176

Posted By:
Subscribe to Boldsky

காலைல எந்திருச்சுதல இருந்து ஒரு போன் இல்ல மெசேஜ் இல்ல.... என்ன தான் நினச்சுட்டு இருக்க.... என்ன பண்ணிட்டு இருக்க எரிச்சலாய் வந்து விழுந்த வார்த்தைகளை எப்படி எதிர்க்கொள்ள என்று தெரியவில்லை. பதில் சொல்லி சமாதானப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

இல்லம்மா.... லேட்டாகிடுச்சு, அவசரமா கிளம்பி என்று தட்டுத்தடுமாறி வார்த்தைகளை தேடி நிரப்பிக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட நாங்கள் காதலிக்க ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டிருக்கிறது. மொதோ மொதோ இந்த காலேஜ்ல சேர வந்த அன்னக்கி க்ளாஸ் எங்கன்னு தெரியாம கிரவுண்டலயே நின்னுட்டு இருந்தவள நான் தான் போய் பேசி க்ளாஸுக்கு கூட்டிட்டு வந்தேன். என்னவோ தெரியல பாத்ததும் ஒரு உள்ளுணர்வு, நம்ம போய் பேசணும்னு சொல்லிச்சு சத்தியமா இந்தப் பொண்ண இவ்ளோ டீப்பா லவ் பண்ணுவேன்னு நான் நினைக்கவேயில்ல.

பாத்தா ஒரே க்ளாஸ். சேர்ந்தே போனோம் அப்போ அவளுக்கு இந்த ஊரும் புதுசு ஹாஸ்ட்டல்ல தங்கியிருந்தா அப்பறம் தான் சொல்லவே வேணாமே சம்பளம் கொடுக்காத மினி வேலைக்காரனாகிப் போனேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நண்பர்கள் :

நண்பர்கள் :

நல்ல நண்பர்களாக பழகி வந்தோம். காலப்போக்கில் எங்களுக்கு இடையிலான நெருக்கம் அதிகரித்திருந்தது. அதனை இருவரும் நன்றாகவே உணரச் செய்திருந்தோம். மிகவும் அமைதியான ஒரு கேரக்டர் என்கிட்ட மட்டும் கொஞ்சம் வீம்பு செய்வா.... சண்ட பிடிப்பா அதுலயே அவளுக்கும் இதே ஃபீல் தான் இருக்குன்றத உணர்ந்துகிட்டேன். ஒரு நாள் எதார்த்தமா மெசேஜ் பண்ணும் போது வாழ்க்கைத் துணை பற்றிய பேச்சு வந்துச்சு.

லைஃப் பார்ட்னர் :

லைஃப் பார்ட்னர் :

உனக்கு எப்படிப்பட்ட ஹஸ்பண்ட் வேணும்....என்று முதலில் கொளுத்திவிட்டேன் அங்கே இங்கே என சுற்றி வந்தாள். எல்லாம் முடித்த பிறகு உனக்கு? என்று தொடர் கேள்விக்குறியோடு ஒரு மெசேஜ் அட இதுக்குதானம்மா இவ்ளோ நேரமா காத்துட்டு இருக்கு என்று சொல்லி யோசிப்பது போல ஸ்மைலி அனுப்பினேன்.

பின், எவ்ளோ யோசிச்சாலும் ஒண்ணே ஒண்ணு தான் தோணுது.

என்ன?

என்ன?

எனக்கு உன்னப்போல ஒரு லைஃப் பாட்னர் வேணும்... நிச்சயம் இந்த பதில் அவள் எதிர்ப்பர்த்திருக்க மாட்டாள். நீண்ட நேர அமைதிக்குப் பின் சிரிக்கும் ஸ்மைலியை அனுப்பி வைத்தாள். இதை நான் எப்படி எடுத்துக் கொள்ள.... அவளிடமே போட்டு வாங்க தொடர்ந்தேன்.

உரையாடல் :

உரையாடல் :

எல்லாம் சரி... ஆனா இதுல சின்ன பிரச்சனையிருக்கே....

என்னது?

நினைத்தது மாதிரியே உரையாடல் சென்று கொண்டிருக்கிறது. மேற்கொண்டு எப்படி கொண்டு செல்ல என் திருமணம் காதல் திருமணமாக இருக்க வேண்டும் என்று ஆசை உன்னை காதலிக்கலாமா என்று கேட்கலாமா? ரொம்ப பெருசா இருக்கே.... இல்லன்னா வீட்ல லவ் மேரேஜுக்கு எல்லாம் ஒத்துப்பாங்களான்னு கேக்கலமா.... ஐயோ அவகிட்ட ஏன் கேக்கணும் சரி, நம்மளே குழில விழுவோம் எங்க வீட்ல எல்லாம் ஒத்துக்கமாட்டாங்கன்னு மொதோ சொல்வோம். அட, லவ் பத்தி வாயவே தொறக்கல அதுக்குள்ள ஏன் வீட்டுக்கத இப்படி என்னுள் உரையாடல் நடந்து கொண்டிருந்தது.

யார வேணாலும் லவ் பண்ணு :

யார வேணாலும் லவ் பண்ணு :

என்ன நினைத்தேனோ ஐ ம் இன் லவ் வித் சம் ஒன் என்று அனுப்பி வைத்தேன். நீண்ட நேரம் ரிப்ளை வரவில்லை. நான் எந்த அர்த்தத்தில் அனுப்பினேன்.... இதை அவள் எப்படி எடுத்துக் கொண்டிருப்பாள். யாரு அதுன்னு கேட்டா என்ன சொல்றது யார கைகாட்றது.... பதில் வர தாமதமான ஒவ்வொரு நொடிக்கும் ஒவ்வொரு சிந்தனை... ஒரு வேல நம்ம தப்பா அனுப்பிட்டோமோ

நீண்ட நேரம் கழித்து அனுப்பியிருந்தாள்..... இதல்லவா காதல் என்று உணர்ந்த தருணம் அது!

நீ யார வேணாலும் லவ் பண்ணு ஆனா என்னைய கல்யாணம் பண்ணிக்கோ.

யாரோ தான் :

யாரோ தான் :

மறு நாள் கல்லூரியில் என்னைப் பார்த்து அடிக்கடிச் சிரித்தாள், திடிரென்று நண்பர்களிடன் உட்கார்ந்திருந்த என்னிடம் வந்து யாரு? என்று கேட்டாள்.

என்னது யாரு.... ஒன்றுமே புரியாமல் நான் விழிக்க நண்பர்களும் எங்களிருவரைப்பார்த்து முழித்தார்கள். நேத்து.... என்று ஆரம்பித்ததும் நடந்த உடையாடல் நினைவுக்கு வந்தது. ஹோ... அதுவா இரு சொல்றேன் என்று சொல்லி எழுந்து கொண்டேன்.

டேய்.... எங்கடா எஸ்கேப் ஆகுற என்று வம்பிழுக்க சிரித்துக் கொண்டே அவளை அழைத்துக் கொண்டு சற்று தள்ளி வந்தேன்.

நேருக்கு நேர் :

நேருக்கு நேர் :

முதன் முதலாக எங்கள் இருவருக்குமிடையில் அவ்வளவு நெருக்கம்.மேலுதட்டில் பூத்திருக்கும் வியர்வைத்துளிகளையும் கிருதாவில் நீண்டிருந்த முடிக்கற்றையும் என்னை ஏதோ செய்தது. அப்படியே அணைத்துக் கொண்டால் என் மார்பில் தலை கவிழும் உயரம். ஆனால் நிற்பது கல்லூரி ஆயிற்றே சற்று நிதானத்துடன் தான் இருந்தேன்.

தலையை குனிந்து கொண்டிருந்தவள் நிமிர்ந்து கண்களைப் பார்த்தாள்..... யப்பா.... ஒரு படபடப்பு அவளுக்குள் இருப்பது உணர்த்தியது.

யூ சீட் :

யூ சீட் :

ஏன் இவ்ளோ நாள் சொல்லல.... எதோ நான் தான் பெஸ்ட் ஃபிரண்டுனு சொல்வ ஆனா ரிலேசன்ஷிப்ல இருக்கேன்ற விஷயத்த மட்டும் என்கிட்ட இருந்து மறச்சுட்ட.... யூ சீட் ஐயோ.... என்னடா இது எனக்கு அவளது சிணுங்கள் மொழி சிரிப்பைக் கொடுத்தது. அதைவிட நிறைவைக் கொடுத்தது. இப்படி ஒரு குரல், இப்படி ஒரு ஏக்கம், இப்படி ஒரு விவாதம் முதன் முதலாக எதிர்கொள்கிறேன்.

எப்படிச் சொல்ல....

எப்படிச் சொல்ல....

சுற்றிலும் பல கண்கள் எங்களை நோக்குவதை உணர முடிந்தது. ஆனால் அவள் எதையும் கண்டு கொள்ளவில்லை உலகத்தையே மறந்திருந்தாள் அவளது உலகத்தில் நானும் அவளும் மட்டும் தான் இருந்தோம். நானும் அவளும் நிற்கிற இடம் மட்டுமே அவளுக்கு உயிர்ப்புடன் இருப்பது போல தீர்க்கமாய் மீண்டும் தலையைத் தூக்கி என் கண்களைப் பார்த்தாள்.

ஏன் சிரிக்கிற? :

ஏன் சிரிக்கிற? :

இம்முறை லேசாக கண்கள் கலங்கியிருந்தது.

ஏய்..... அழறியா?

அதெல்லாம் ஒண்ணுமில்ல. கண்களை துடைத்துக் கொண்டாள். ஹே! சாரி.... என்னாச்சு ஐயையோ ஏன் இதுக்கெல்லாம் அழற எல்லாரும் பாக்குறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் கொட்டியது.

டேய் மச்சி என்னடா பண்ண? என்னாச்சு என்று ஆங்காங்கே குரல்கள் எழுந்தது. சில குசும்பர்கள் என்ஜாய் என்று சொல்லி சமிக்கை காட்டிச் சென்றார்கள். இன்னும் சிலரோ அதிர்ச்சியுடன் எங்களைப் பார்த்து நகர்ந்தார்கள்.

அவள் யாரோ :

அவள் யாரோ :

ஏய்.... அழாத.... எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க சொல்லாதது என் தப்பு தான் சாரி. நிஜமாலுமே சாரி. பட் இந்த ரிலேசன்ஷிப் பத்தி பெருசா எனக்கு அபிப்ராயம் இல்ல. ஏன்னா அவ இன்னும் என் லவ் அக்ஸ்ப்ட் பண்ணல அதான் உன்கிட்ட சொல்லல. மத்தப்படி உன்கிட்ட மறைக்கணும்னு எல்லாம் இல்ல.

வேணும்னா இன்னக்கி ஈவ்னிங் வா.... அந்தப் பொண்ண காட்றேன். இதே காலேஜ் தான்.

ஐயோ சொதப்பிட்டியே டா :

ஐயோ சொதப்பிட்டியே டா :

எதையோ நினைத்து... என்னவோ சொல்ல ஆரம்பித்து.... இப்படி உளறி வைத்துவிட்டேனே.... அப்போதே உணர்ந்திருந்தாலும் அதன் வீரியம் நேரம் செல்லச் செல்லதான் புரிய ஆரம்பித்தது.

சரி... ஈவ்னிங் காட்டு என்று சொல்லிவிட்டு சென்றவளை கையைப் பிடித்து இழுத்து என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கேட்டுவிட்டிருக்கலாம். ஈஸியா கிடச்ச சந்தர்ப்பத்தை எல்லாம் விட்டுட்டு இப்போ இப்டி வந்து தவிச்சிட்டு இருக்கியே என்று என்னை நானே திட்டிக் கொண்டேன்.

மாலையில்.... :

மாலையில்.... :

நண்பர்கள் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர். ஹாஸ்டல் போய்ட்டு ஃபிரஸ் ஆகிட்டு வரேன் வெயிட் பண்ணு போய்டாத என்று சொல்லிவிட்டு ஓடினாள்.

அடியேய்..... என்னடீ இது கொடும ஏன் இப்டி படுத்துற ச்சை இப்பக்கூட வாயத்தொறந்து நீ தாண்டி அந்தப் பொண்ணுனு சொல்ல முடியல என்று நொந்து கொண்டேன். கடைசி வாய்ப்பு அதிகமாக உதறல் எடுத்தது. இது பெரிய கொலைக்குற்றமோ அல்லது யாரென்றே தெரியாத பெண்ணிடமோ நான் காதலைச் சொல்லவில்லை ஒரு வருடத்திற்கும் மேலாக என்னுடன் நட்பாக பழகிக் கொண்டிருப்பவள் தான். நட்பாக பேசும் போது, காதலைப் பற்றியும் காமத்தைப் பற்றியும் அவ்வளவு எளிதாக விவாதித்து கடந்து வந்திருந்தாலும் இன்று உளப்பூர்வமாக அவளை நேசிக்கத் துவங்கியிருக்கேன் என்பதை சொல்ல மட்டும் ஏன் இத்தனை தடுமாற்றம் என்று புரியவில்லை.

பண்டாரம் :

பண்டாரம் :

அரை மணி நேரம் பெரும்பாலானவர்கள் கிளம்பியிருந்தார்கள். காலேஜ் கிரவுண்ட் முழுக்க மாணவர்கள் சாரை சாரையாக நடந்து கொண்டிருந்தார்கள். கால் செய்து எங்கேயிருக்கிறேன் என்று கேட்டு வந்தாள்.

அவள் என்னை நோக்கி வரும் போதே தூரத்தில் அவளைப் பார்த்துவிட்டேன். இங்கே வந்து நின்ன மறு நிமிஷம் ஐ லவ் யூன்னு சொல்லணும்... இல்ல வேணாம் அது கொஞ்ச பழசா இருக்கு வில் யூ மேரி மீ.... ச்சை மொக்க ஐயோ வேற என்ன சொல்ல.... ச்சை இப்போ இதுவா முக்கியம் என்று என்னை நானே திட்டிக் கொண்டு வில் யூ மேரி மீ என்றே முடிவாகி திரும்ப திரும்ப சொல்லி பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்னடா வர சொல்லிட்டியா? புத்துணர்ச்சியை குரலே உணர்த்தியது. வாயைத் திறக்க முடியவில்லை... செருமிக்கொண்டு ம்ம்ம் என்றேன். எங்க? என்று சுற்றுமுற்றும் பார்த்தாள்

கேண்டீன்... என்றதும் நக்கல் சிரிப்புடன் திண்ணிப்பண்டாரம் என்று சொல்லிக் கொண்டே என் கையைப் பிடித்து இழுத்து கேண்டீனுக்கு நடக்க ஆரம்பித்தாள்.

இப்டியே நம்ம போய்டலாமா? :

இப்டியே நம்ம போய்டலாமா? :

இப்போவாவது சொல்லுடா என்று உள்ளிருந்து ஒரு குரல் வண்டி வண்டியாய் படு கேவலமான வார்த்தைகளைக் கொண்டு திட்டிக் கொண்டிருந்தது. இப்போது அவள் பின்னால் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்காலத்தை உணரவா அல்லது என் மனக்குரலுக்கு பதில் சொல்லவா?

இப்டியே வாழ்கப்பூரா உன் கூட வரவான்னு கேக்கலாமா? நினைக்கும் போதே எனக்கே சிரிப்பாய் இருந்தது.

கேண்டீனில்....

கேண்டீனில்....

எங்கடா யாரையும் காணோம்... என்ன வெயிட் பண்ணிட்டு போய்டாளா?

தலையை தொங்கப்போட்டுக் கொண்டு என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.... எப்படியாவது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பு மட்டும் இடைவிடாமல் அடித்துக் கொண்டிருந்தது.

ஆமா, காலைல ஏன் அழுத? திடீரென்று கேட்டுவிட்டேன்.... அடேய் இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே என்று அதிர்ந்தாலும் சரி கொஞ்சம் கான்வர்சேசன் போகட்டும் நம்ம ரிலாக்ஸ் பண்ணிக்கலாம் என்று தொடர்ந்தேன்...சொல்லு, ஏன் அழுத?

வர்லாமா ?

வர்லாமா ?

இப்போது அங்கே மௌனம்,

நீண்ட நேரத்திற்கு பிறகு நான் சகஜமாகியிருந்தேன். அவளை ரசிக்க ஆரம்பித்திருந்தேன்.... சிரிக்க ஆரம்பித்திருந்தேன். என் மீது அவளுக்கு ஓர் அபிப்ராயம் இருப்பதை கண்கூடாக உணர ஆரம்பிக்க தைரியம் பிறந்தது. அவள காட்றேன் வா என்று கேண்டீன் வாசலுக்கு அழைத்து வந்தேன்.

வர்லாமா? என்று அவளுக்கு கண்ணீர் முட்டி அனுமதி கேட்டு காத்திருந்தது. கண்களைச் சிமிட்டி சிமிட்டி அதை வரவிடாது தடுத்துக் கொண்டிருந்தவள் இப்போது எதுவும் பேசவில்லை...

நீ தான் அது :

நீ தான் அது :

கை கழுவுமிடம்.

இங்கயும் காணோம். நான் வேணா கிளம்புறேன் குரல் உடைந்து தடுமாறி வார்த்தைகள் வந்து விழுந்தது. என்னவோ இந்த அழுகை எனக்கு இதுவரை அனுபவித்திராத மகிழ்ச்சியை கொடுத்தது. சிரித்தேன், ஐயோ.... இப்டியே இந்த ஃபீல் இருந்துட்டேயிருக்கணும் போலயிருக்கே மனதில் நினைத்துக் கொண்டேன்.

வாஷ் பேஷினுக்கு மேலே கண்ணாடியிருக்க, அவளை இழுத்து நான் லவ் பண்ற பொண்ணு இவ தான்... பாரு என்றேன். நிமிர்ந்து பார்த்தாள் எதிரில் தெரிந்த கண்ணாடியில் அவளுடைய பிம்பம் அவளுக்குப் பின்னால் நான்.

இப்படியாகத்தான் இந்தாண்டு காதலர் தினம் எங்களுக்கு கழிந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Romantic Love Proposal Of a Guy

Romantic Love Proposal Of a Guy
Story first published: Friday, February 16, 2018, 13:28 [IST]