Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
தீபிகா, அசின், ப்ரீத்தி... பலரும் அறியாத தோனியின் காதல் கதைகள்...
கேப்டன் கூலுக்கு பின்னாடி இவ்வளவு காதல் கதைகள் இருந்துச்சா...!
இன்று கேப்டன் கூலின் பிறந்தநாள். நூலிழையில் நேற்று இங்கிலாந்து உடனான இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது இந்தியா. நேற்று மட்டும் வென்றிருந்தால் தோனியின் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
கேப்டன் கூல் எப்படியான கடின சூழலையும் கடந்துவர கூடிய திறன் கொண்டவர், தன் மீது வைக்கப்பட்டும் விமர்சனங்களை தனது திறமையால் உடைத்தெறிய கூடியவர் என்று தோனியை புகழ்ந்துக் கொண்டே போகலாம். எந்த ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறுவோம்.
அப்படி தோனியின் வெற்றிக்கு பின் அம்மா, சகோதரியை தவிர, வேறு இரண்டு பெண்கள் இருந்ததை நாம் தெளிவாகவே எம்.எஸ். தோனி அண்டோல்ட் ஸ்டோரி படத்தில் பார்த்துவிட்டோம். ஆனால், அதில் காண்பிக்க படாது தோனியின் சில a அரசல்புரசல் காதல் கதைகளும் இருக்கின்றன....

தீபிகா படுகோனே!
2007ம் ஆண்டு காலக்கட்டத்தில் தோனிக்கு தீபிகா படுகோனே மீது க்ரஷ் இருந்ததாம். ஆகையால், ஓம் சாந்தி ஓம் தனி காட்சி ஏற்பாடு செய்ய முடியுமா என்று ஷாருக்கானிடம் கேட்டிருந்தாராம் தோனி. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் போது, தீபிகாவை பார்வையாளராக பர்சனலாக இன்வைட் செய்திருந்தாராம் தோனி. தீபிகாவும் அவரது அழைப்பை ஏற்று மைதானத்திற்கு சென்று ஆட்டத்தை கண்டு ரசித்துள்ளார்.
தீபிகாவிற்கு நீண்ட கூந்தல் வைத்திருக்கும் ஆண்களை பிடிக்காது என்ற காரணத்தால் தான் தனது ஸ்பெஷல் ஹேர்ஸ்டைலான நீண்ட கூந்தலை ஷார்ட்கட் செய்துக் கொண்டார் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. இப்படி வலிமையாக பல கிசுகிசுக்கள் தோனி தீபிகாவை விரும்பினார் என்று உலா வந்த போதிலும், தோனி இதை முற்றிலும் மறுத்து வந்தார் என்பதே உண்மை.

ப்ரீத்தி சிமொஸ்!
கபில் ஷர்மாவால் கொளுத்தி போடப்பட்ட தோனியின் மற்றுமொறி மாய காதலி ப்ரீத்தி. இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனியும், காமெடி நைட்ஸ் வித் கபில் என்ற டிவி நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் இயக்குனர் ப்ரீத்திக்கும் நடுவே ஒரு இது இருந்தது என்று அரசல்புரலசாக தகவல்கள் பரவின. இவர்கள் இருவரும் மிக ரகசியாமாக டேட் செய்து வந்தனர் என்றும் கூறப்பட்டது.

ராய் லக்ஷ்மி!
இது பலரும் அறிந்த செய்தி தான். ராய் லக்ஷ்மி பலமுறை எல்லா நடிகைகள் போல நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் அவ்வளவு தான் என்று பேட்டிகளில் கூறி கொண்டே இருந்தார். அவ்வளவு அழுத்தமாக இவர் கூறுவது ஏன் என்பதே ஊடங்களில் பெரும் செய்தியாக உருவெடுத்தது. 2009ம் ஆண்டு காலக்கட்டத்தில் தான் இவர்கள் இருவரும் டேட் செய்தனர் என கூறப்பட்டது. இவர்களது டேட்டிங் வெறும் இரண்டே மாதங்கள் தான் நீடித்தன என்றும் சிலர் கூறுகிறார்கள்.

அசின்!
கோலிவுட்டில் இருந்து பாலிவுட் ஆசை வந்து பறந்த கிளி, அங்கே நடிகைகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து ஓரம்க்கட்ட துவங்கியதால் கல்யாணாம் செய்துக் கொண்டு செட்டிலாகிவிட்டார். ஒரு ஃபேஷன் நிறுவனத்திற்கு அப்போது தோனி மற்றும் அசின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தனர். 2010ம் ஆண்டு நடந்த ஐபிஎல் அரையிறுதி போட்டியை காண அசின் அப்போது வருகை புரிந்திருந்தார். அப்போதே பலரும் இவர்கள் இருவருக்கும் ஏதோ நடக்கிறது என்று கூறினார்கள்.
ஆனால், இந்த கிசுகிசு இத்துடன் முடிந்துவிடவில்லை. 2011ம் ஆண்டு ஸ்ரீலங்காவில் நடந்த ஒரு விழாவிலும் இவர்கள் இருவரும் ஒன்றாக தென்பட்டனர். ஆனால், அப்போது தோனி சாக்ஷியை திருமணம் செய்திருந்த காலம். அப்போது வெளிப்படியாக தோனிக்கு வாழ்த்து கூற மட்டுமே தான் வந்ததாக அசின் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

சாக்ஷி!
தோனி அண்டோல்ட் ஸ்டோரியிலேயே நாம் தோனிக்கு இருந்த ஒரு பழைய காதலை பார்த்துவிட்டோம். அதன் பிறகு அதிகாரப்பூர்வமாக தோனி ஒப்புக் கொண்ட காதலும், அவர் திருமணம் செய்துக் கொண்டதும் சாக்ஷியை தான். தன் காதலுக்கு சாட்சி சாக்ஷி மட்டுமே என்று எல்லா கிசுகிசுக்களுக்கும் இவரை 2010ம் ஆண்டு திருமணம் செய்து ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் தோனி.



Click it and Unblock the Notifications