அட! இந்த சமாச்சாரம் இத்தன நாளா தெரியாமே போச்சே!!!

Posted By: Staff
Subscribe to Boldsky

பிரிந்த பிறகும் கூட, அந்த எக்ஸ் வேறு ஓரு காதல் அல்லது திருமண பந்தத்தில் இணைந்த பிறகும் கூட சிலரால் அவரை எண்ணாமல் இருக்க இயலாது, குறைந்தபட்சம் நட்பாகவாவது பழகலாம் என்று முயற்சிப்பார்கள்.

இப்படியான முயற்சி தவறில்லை எனிலும், யாருடன் நீங்கள் அப்படி முயற்சிக்க முயல்கிறீர்கள்? உங்கள் காதல் எப்படி பிரிந்தது? உங்கள் காதலி / காதலன் என்ன காரணம் காட்டி உங்களை பிரிந்து சென்றார் என சிலவற்றை வைத்து தான் நீங்கள் நட்புறவை துவக்க முயற்சிக்க வேண்டும்.

எக்ஸ் காதல் துணைகளில் இந்த எட்டு வகையினருடன் நீங்கள் நட்புறவை ஏற்படுத்திக் கொள்வது யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதை போன்றது. இந்த எட்டு வகை எக்ஸ் உடன் நட்பில் கூடுவது ஒன்று அவர்களுக்கு வலி மிகுந்ததாக முடியும், அல்ல உங்களுக்கு வலி மிகுந்ததாக முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

உங்கள் மனதை சுக்குநூறாக்கிய நச்சு குணம் கொண்டவர்

எளிமையாக கூற வேண்டும் எனில், உங்கள் அன்பிற்கும், அக்கறைக்கும் இவர்கள் தகுயற்றவர்கள். நட்பாக கூட தகுதியற்றவர்கள். சிலர் சிறந்த காதலராக இல்லாவிட்டாலும், சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். ஒருவேளை, உங்கள் இருவருக்குள் ஒருபோதும் ரொமான்ஸ் எழவில்லை எனில், நட்பாக இருப்பதில் தவறில்லை.

ஏன் கூடாது?

ஏன் கூடாது?

ஆனால், உங்கள் மனதை உடைத்து சென்ற நபருடன் நட்பு பாராட்டுவது, உடைந்த மனம் மறுபடியும் உடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்பதை அறிந்தே நீங்கள் முன்னெடுக்கும் அடியாகும்.

எனவே, காதல் தான் இல்லை, குறைந்தபட்சம் அவர் முகத்தையாவது பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். உங்கள் பிரிவை, நீங்கள் இல்லாத அந்த வெற்றிடத்தின் வலியை அவர்கள் உணர செய்யுங்கள்.

#2

#2

முதல் காதல்...

முதல் காதல் என்பது யாராலும் அளிக்க முடியாத விலைமதிப்பற்ற நினைவு. அதை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். சிலருக்கு முதல் காதல் தவறானதாகவும், மறக்க வேண்டியதாகவும் கூட அமைந்துவிடலாம். ஏதுவாக இருந்தாலும் பிரிந்த / சேராத முதல் காதலை நட்பாக்க முயல்வது பெரிய முட்டாள்தனம். அது மீண்டும் , மீண்டும் உங்கள் மனதில் ஒருவித ரணத்தை தான் அதிகரிக்க செய்யும்.

ஏன் கூடாது?

ஏன் கூடாது?

பெருமைக் கொள்ளுங்கள், முதல் காதல் தோல்வி அடைந்த எண்ணற்றவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலை அடைந்துள்ளனர். முதல் காதல் சுகமான வலி. அதை நீங்கள் மீண்டும் நட்பாக்க முயற்சிக்கும் போது அதில் உள்ள சுகம் மறைந்து வலி மட்டுமே உங்கள் மனதில் நீடிக்கும்.

முதல் காதலில் வெற்றி பெறுபவனுக்கு அந்த காதல் மட்டும் தான் கிடைக்கும். வரம் முதல் காதலில் தோல்வி அடைபவனுக்கு வாழ்க்கையை எப்படி வாழ என்ற அனுபவமும் சேர்ந்து கிடைக்கும்.

#3

#3

இன்னும் உங்களை நேசிக்கும் அந்த நபர்...

ஒருவகையில் உங்களை இன்னும் நேசித்துக் கொண்டிருக்கும் அந்த நபருடன் நீங்கள் நட்பு பாராட்டலாம் என்று எண்ணுகிறீர்கள் எனில், இந்த உலகில் அதைவிட கொடூரமான செயல் வேறேதும் இல்லை.

சில சமயம் அவர்களாகவே முன்வந்து, காதல் தான் இல்லை, நட்பாகவாவது பேசு என்பார்கள். ஆனால், அவர்களுக்குள் இருக்கும் நேசம் என்றும், எள்ளளவும் கூட குறையாது.

ஏன் கூடாது?

ஏன் கூடாது?

நீங்கள் பேச, பேச அவர்களுக்குள் காதல் அதிகரித்துக் கொண்டே தான் போகும். இதனால், என்றாவது நீங்கள் மீண்டும் அவருடன் பேசுவதை நிறுத்தும் போது அவர்கள் அதீத வலியில் துடித்துக் கொண்டிருப்பார்கள்.

அக்கறை எடுத்துக் கொள்கிறேன், அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தர விரும்புகிறேன் என்று ஈர வெங்காயம் போல எந்த ஒரு காரியத்தையும் நீங்கள் செய்து விடாதீர்கள். குறைந்தபட்சம் அவர்களை அந்த முதல் காதல் தோல்வி என்ற சுகமான வலியுடன் வாழ நிம்மதியாக விட்டுவிடுங்கள்.

#4

#4

ஒருமனதாக பிரிந்த காதல்...

சிலர் ஒருவரை ஒருவர் காதலித்து வருவார்கள், ஆனால் அதை திருமணம் வரை முன்னெடுத்த செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருக்கலாம்.

ஏன் கூடாது?

ஏன் கூடாது?

இது போன்ற சூழலில் ஒருமனதாக பிரிந்திருக்கும் ஜோடிகள்... மீண்டும் நட்பு பாராட்ட நினைப்பது தவறு. இது கிட்டத்தட்ட பஞ்சும், நெருப்பும் அருகருகே இருப்பது போன்ற சூழல். இவர்கள் மத்தியில் செக்சுவல் எண்ணங்கள், தாக்கம் எழ வாய்ப்புகள் உள்ளன. இதனால், இவர்களது தற்கால உறவும் பாதிக்கலாம்.

#5

#5

தவிர்க்க முடியாத காரணங்களால் பிரிந்த காதல்.

அம்மா - அப்பா செண்டிமெண்ட், உறவினர்கள் தொல்லை, செட்டிலாகவில்லை என காதல் இருந்தாலும், ஏதேனும் ஒரு அரைகுறை காரணத்தால் பிரிந்த காதல்களும் இருக்கின்றன. பிரிந்த பிறகும், இவர்களுக்குள் காதல் இருக்கும்.

ஏன் கூடாது?

ஏன் கூடாது?

சந்தர்ப்ப சூழல்களால் பிரிந்த இவர்களில் காரணத்தை ஏற்றுக் கொண்டு பிரிந்த அந்த ஒருவர் நிச்சயம் மன வேதனையுடன் தான் வாழ்ந்துக் கொண்டு இருப்பார். எனவே, அவருடன் மீண்டும் பேசி நட்பு மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்று கருத வேண்டாம்.

#6

#6

நீங்கள் ப்ரேக்-அப் செய்த காதல்...

நீங்கலாக ப்ரேக்-அப் செய்து வந்த காதல் உறவில், மீண்டும் நட்பு பாராட்டி புதுபித்துக் கொள்ள விரும்ப வேண்டாம். முதல் காரணம் அவர்கள் உங்களுடன் மீண்டும் பேச நட்பு வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

ஏன் கூடாது?

ஏன் கூடாது?

மற்றொரு காரணம் எல்லா சூழலிலும், அவன் அன்று நம்மை தேவையில்லை என்று உதறி சென்றவன் தானே, இன்று அவன் தேவைக்கு மீண்டும் வருகிறான் என்ற எண்ணம் எழலாம். இது நட்புறவையும் பாதிக்கும்.

#7

#7

யூஸ் அன்ட் த்ரோவாக பயன்படுத்திய காதல்...

ஏதேனும் பிரச்சனை உதவி என்றால் மட்டும் உங்களை அழைத்து பயன்படுத்திக் கொண்டு பிறகு உங்களை நட்டாற்றில் விட்டு சென்ற அந்த காதலை நீங்கள் ஒருபோதும் நட்பாக மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டாம். மீண்டும் அவர்கள் உங்களை உதவிக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்வார்களே தவிர, உண்மையான நட்புடன் பழக மாட்டார்கள்.

ஏன் கூடாது?

ஏன் கூடாது?

இவர்களை பொறுத்தவரை நீங்கள் ஒரு முதலுதவி பெட்டிப் போல தான்... நீங்கள் அவர்களுக்கு பயன்பட்டாலும், பயன்பட்ட பிறகு உங்களை மீண்டும் அடுத்த முறை அடிப்படும் வரை கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

#8

#8

நீங்கள் டேட்டிங் செய்த உறவு...

சிலர் காதலிக்கும் முன்னர் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ள டேட்டிங் செய்திருப்பார்கள். அப்படியாக நீங்கள் ஒரு நபரை டேட் செய்து, அவரை காதலிக்காமல் வேறு ஒரு நபரை காதலித்துக் கொண்டு வருவீர்கள். ஆனால், அந்த முதல் டேட் அனுபவம் உங்களை சற்றிக் கொண்டே இருக்கும்.

ஏன் கூடாது?

ஏன் கூடாது?

என்றாவது நீங்கள் நடப்பு காதலை பிரிந்தால் மீண்டும் ஒட்டிக் கொள்ளலாம் என்று விரும்பும். ஏன், சிலர் நடப்பு காதலை வெட்டிவிட அவர்களே கூட முயற்சிப்பார்கள்.

இவர்களிடம் தான் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவர்களுடன் நீங்கள் நட்பு பாராட்டுவது, உங்களுக்கு நீங்களே சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eight Types of Exs You Should Know!

Eight Types of Exs You Should Not Be Friend With.
Story first published: Tuesday, March 27, 2018, 15:20 [IST]