'இந்த பசங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடீ'.... இது ப்ரேக் அப் கதையல்ல

Posted By:
Subscribe to Boldsky

அப்படி கோபப்பட்டிருக்க கூடாது. சமீப காலங்களாக எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் இல்லை திட்டிக் கொள்ளும் ஓர் வசனம் இது. கோபம் தான் எத்தனை பெரிய கலகக்காரனாக இருக்கிறான். நம்மையும் மீறி வெளிப்படும் ஓர் நொடிக் கோபம் தான் வாழ்க்கை முழுவதும் பெரும் கோபக்காரனாகவே நம்மை அடையாளப்படுத்திவிடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாத்தானின் பஜ்ஜி :

சாத்தானின் பஜ்ஜி :

இந்த சாண்ட்விச் தவிர வேறு எதுவுமே இங்க கிடையாதா? எவ்ளோ நாளைக்கு தான் வெறும் ஜூஸ் குடிச்சுட்டு இருக்க முடியும். கையிலிருந்த சாண்ட்விச்சை வேண்டாவெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

கையிலிருப்பதை பிடுங்கி டேபிளில் வைத்தவன், கேண்டீனிலிருந்து வெளியே சென்றுவிட்டான். என்னுடன் உட்கார்ந்திருவர்கள் முகத்தில் ஈயாடவில்லை கோபித்துக் கொண்டு சென்றுவிட்டான் என்று தான் எல்லாரும் சொன்னார்கள்.

நான் சிரித்தேன்.

வெளியிலிருந்து எங்கிருந்தோ பஜ்ஜியை கொண்டுவந்திருந்தான் சாத்தான். ஆம், அவன் சாத்தான் தான் எனக்கு மட்டும். அரசல் புரசலாய் எங்கள் கதை காற்றில் கலந்திருந்தது.

சந்தர்ப்பங்கள் :

சந்தர்ப்பங்கள் :

எங்கள் குழுவிலிருந்து மூன்று பேரை வெளிநாட்டிற்கு அனுப்ப ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அதற்கான மீட்டிங் தான் இது,

என் பேரும் சாத்தான் பேரும் இருக்ககூடாது. இருக்கவே கூடாது. என்று மட்டும் என்னால் முணுமுணுக்க முடிந்தது. செவ்வனே அவ்வேலையை செய்து கொண்டிருந்தேன்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நபர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டது.

பிழைத்தேன்...

ஹப்பாடா ... என்று கொஞ்சம் கொஞ்சமாய் ஆசுவாசம் பெற்று நிமிறும் போது மூன்றாவதாய் பேரிடியாய் அக்குழுவின் தலைவன் என்று சாத்தான் பெயர் வாசிக்கப்பட்டது.

யாருக்கேனும் மறுப்பு இருந்தால் தெரிவிக்கலாம் என்று கொடுக்கப்பட்ட அவகாசத்தையும் என் சாத்தான் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

கனவா? காதலா? :

கனவா? காதலா? :

எல்லாரும் கைதட்டி ஆர்ப்பரிக்க மூன்று பேருமே ரவுண்ட் டேபிளுக்கு முன்னால் வந்து நின்றார்கள். சில சம்பிரதாய பாராட்டுகளுக்குப் பிறகு உணவு இடைவேளையின் போது...

போகப்போறியா....

ஆமா.

ஆல் த பெஸ்ட்.

இவ்வளவு தான் நாங்க பேசிக் கொண்டது. சத்தியமாய் ஆயிரம் கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தது. கனவுக்காக காதலை தொலைக்கலாமா என்ற என் கோபத்திற்கு முன்னால் என் கனவு தான் முக்கியம் என்று சொல்லும் சாத்தான் பெரிதாகவே தெரிந்தான். ஆறு மாதங்கள் தானே உருண்டோடிடும் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

தொலை தூரம் சென்றாலும் :

தொலை தூரம் சென்றாலும் :

கடல் கடந்து பறந்து சென்றிருந்தாலும் ஒரு நாளில் இரண்டு மணி நேரமாவது பேசாமல் நாங்கள் இருக்கவில்லை. ஒரு மாதம் கழித்து, மீட்டிங் அன்றே இதில் உடன்பாடில்லை என்று ஏன்சொல்லவில்லை என்ற சண்டைகள் எல்லாம் அரங்கேறியது. என் செல்லக்கோபத்தை அறிந்து சமாதானஞ்ச்செய்தான் சாத்தான்.

அங்கு நடத்தப்பட்ட கான்ஃபிரன்ஸ், அதில் பங்கேற்ற பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள் அவர்களுடன் எடுத்தப் புகைப்படங்கள், தனியே சுற்றித்திரிந்த புகைப்படங்கள், அஷ்டகோணலாய், அலங்கோலமாய் எடுத்த செல்ஃபி என சாத்தானின் படங்கள் என் கேலரியை நிறைத்திருந்தது.

தான் செய்து கொண்டிருக்கும் ப்ராஜெக்ட் ஒவ்வொரு படிநிலைகளையும் விளக்கி ஒரு முன்னோட்டமாய் எனக்கு மெயில் அனுப்பிய பிறகே மற்றவர்களுக்கு அனுப்பும் வழக்கத்தை கொண்டிருந்தான் சாத்தான்.

பிரிவு காதலை உணர்த்துமா? :

பிரிவு காதலை உணர்த்துமா? :

வழக்கமான காதலர்களைப் போல காலைல எந்திருச்சதும் ஒரு ஐ லவ் யூ போன் பேசும் போதெல்லாம் மிஸ் யூ பேபி... அப்றம்... என்னைய நினச்சியா? போன்ற மொக்கைகளை தவிர்க்கவே விரும்பினோம். காதலில் இடைவேளி கொஞ்சம் அவசியம் என்பதை உணர்வதால் இந்த இடைவேளி எங்களை ஒன்றும் செய்திடாது என்று நாங்கள் நம்பினோம். நம்மை விட விதி வலியது ஆயிற்றே... விளையாட ஆரம்பித்தது.

இடைவேளி :

இடைவேளி :

தினமும் பேசுவது நாட்களாக வாரங்களாக மாதங்கள் ஆகிவிட்டது. அவரவர்க்கு அவரவர் விருப்பமும் கனவும் முக்கியம் என்று தான் எங்கள் காதல் உடன்படிக்கையின் போது நாங்கள் சொல்லிக் கொண்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு திடீரென்று ஓர் அழைப்பு அதே சாத்தானிடமிருந்து...

வழக்கமான காதலர்கள் கேட்கும் கேள்வியுடன் வந்திருந்தான்.

நான் செத்துட்டா என்ன பண்ணுவா?

என்ன எவ்ளோ லவ் பண்ற?

என்னைய உனக்கு எவ்ளோ புடிக்கும்?

குழந்தை எதோ ஒரு விஷயத்தில் தடுமாறியிருக்கிறான் என்பதை யூகிக்க முடிந்தது. என்ன பதில் சொன்னாலும் கிளைக்கேள்விகளால் இரவை பகலாக்கிவிடுவான் என்று சுதாரிப்பாகவே இருந்தேன்.

திருமணம் :

திருமணம் :

அந்த உரையாடலுக்குப் பிறகு பேச்சு வார்த்தைகள் குறையத்துவங்கியது புகைப்படங்களின் வரத்தும் குறைந்தது. கிட்டத்தட்ட முற்றிலுமாக தொடர்புகள் அறுந்த நிலைதான்.

இச்சம்பவத்தைப் பற்றி நண்பர்களிடம் பகிரும் போது... எல்லாரும் சொன்னது நீ பேசியிருக்க வேண்டியது தானே என்பது தான். அவர்களுக்காக

ஐயா, நாங்கள் காதலிக்கிறோம். அதற்காக பொழுதன்னைக்கும் அவனது இருப்பை உறுதி செய்து கொண்டேயிருப்பது முட்டாள் தனம். அவனுக்கான ஓர் வெளியை கொடுப்பேன். என் காதலில் அவன் சுதந்திரமாக இருக்க வேண்டும். தன்னைப் போலவே என்னையும் என் காதலையும் நேசிக்க வேண்டும் என்பது தான் காதலைப் பற்றிய என்னுடைய புரிதல்.

மீண்டும் காதல் :

மீண்டும் காதல் :

ஆறு மாதங்கள் முடிந்து சாத்தான் அரசர் வந்தடைந்தார். பழைய சாத்தானுக்கும் புதிய சாத்தானுக்கும் ஏகப்பட்ட வித்யாசங்களை உணர முடிந்தது. சின்ன சின்ன சங்கடங்களை தவிர்த்து, பெரிதாக எந்தப் பிரச்சனையுமில்லை. பேஸ்புக்கில் படிக்கும் கணவன் மனைவி பகடிகளையும், காதலிகள் டார்ச்சர்களையும் மறக்காமல் பகிர்வான்.

பல்லைக் கடித்துக் கொண்டு சிரிக்கும் ஸ்மைலிக்களை அனுப்பித் தொலைப்பேன்.

கோபம் அவசியமா? :

கோபம் அவசியமா? :

ஏதோ ஓரு நன்னாளில் எங்கள் வாட்டசப் க்ரூப்பில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் என்ற அடைமொழியுடன் அனுப்பியிருந்தான். எல்லாரும் விதவிதமாக வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டிருந்தார்கள். அடுத்தடுத்து வந்த இடைஞ்சலினால் எடுத்துப் பார்த்தேன்.

அடக்க முடியாத கோபம் ஒரு பொது வெளி என்றும் பாராது

‘செத்துரு நாயே' என்று அனுப்பிவிட்டேன்.

சாத்தானை விட மற்றவர்கள் அதிர்ச்சி :

சாத்தானை விட மற்றவர்கள் அதிர்ச்சி :

அதை அனுப்பி விட்டு டேட்டாவை ஆஃப் செய்துவிட்டு என் வேலைகளில் மூழ்கி விட்டேன். இரண்டு முறை சாத்தானும் போன் செய்திருந்தான் ம்ம்ஹூம் எடுக்கவில்லை. மாலை கிளம்பும் போது ஒவ்வொருவராக வந்து துக்கம் விசாரிப்பது போல.. டேக் கேர் என்று சொல்லிவிட்டு சென்றார்கள்.

ஒன்றும் புரியாது தலையாட்டி வைத்தேன்.

டேட்டாவை ஆன் செய்த பிறகு தான்... அதை க்ரூப்பில் பகிர்ந்திருக்கிறான் நானும் வெக்கங்கெட்டத்தனமாய் க்ரூப்பிலேயே திட்டியிருக்கிறேன் என்பது புரிந்தது.

மன்னிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படாது :

மன்னிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படாது :

ப்ரைவேட் சாட்டிலும், க்ரூப் சாட்டிலும் எக்கசக்க சாரியும் தொடர்ந்து அதற்கான காரணங்களை தன் பக்க விளக்கத்தையும் சாத்தான் விளக்கியிருந்தான். பொறுமையாய் எல்லாவற்றையும் படித்தேன். ஆனால் துளியும் என் கோபம் குறையவில்லை.

என்றைக்காவது என் காதலை மதித்திருக்கிறாயா? ஐ லவ் யூ என்று சொல்லியிருப்போமா? ஒரு போதும் அப்படியான உரையாடல்கள் இங்கே நடக்கவேயில்லை பிறகு எப்படி நான் காதலித்தேன் என்று நினைக்கலாம் என்பது அவன் வாதமாயிருந்தது.

 நிரூபிக்கத் தேவையில்லை :

நிரூபிக்கத் தேவையில்லை :

முடிந்தளவு தவிர்த்துவிட்டேன். இறுதியாக அலுவலகம் முடிந்து கிளம்பும் போது பார்க்கிங்கில் எதிர்பாராது சந்தித்துக் கொண்டோம். விளைவு, காபி ஷாப்பில் காத்திருக்க வேண்டியதாய் போயிற்று.

எதைஎதையோ சொல்லி... யூ ஆர் மை பெஸ்ட் ப்ரண்ட் என்றான் சாத்தான். வாழ்க்கையின் கடினமான நேரங்களில் உடன் இருந்ததற்காக நன்றி சொல்லி ஒரு வாட்சையும் அன்பளிப்பாக கொடுத்தான். இதை ஏற்றுக் கொண்டு நம் நட்பையும் தொடர வேண்டும் என்றான். டேபிள் மீதிருந்த ஹெல்மட்டை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேறிவிட்டேன். எந்த வார்த்தைகளையும் விடாமல் இருந்ததற்கு நிச்சயமாய் ஓர் பாராட்டு விழா எடுத்திருக்க வேண்டும்.

சமாதானப்புறா :

சமாதானப்புறா :

பேச்சுவார்த்தைகளின்றி இப்படியே தொடர்ந்த எங்களது உறவில் சில சமாதானப்புறக்களும் பொழுதை கழிக்க ஆரம்பித்திருந்தது. இருவருக்குமிடையிலான சில அன்னியோன்னியங்களையெல்லாம் மூன்றாம் நபரிடம் பகிர்வதில் எனக்கு துளியும் விருப்பமில்லாததால் புறாக்களை விரட்டியடிப்பதே என் அன்றாட வேலைகளில் ஒன்றானது.

நாங்கள் காதலித்தோம், பிரிகிறோம் அதில் எனக்கு உடன்பாடில்லை கோபமாக இருக்கிறேன். அதில் மற்றவர்களுக்கு எங்கிருந்து பிரச்சனை வருகிறது என்று புரியவில்லை.

நானே காரணம் :

நானே காரணம் :

இப்படியான புனைப்பெயர்கள் பலவற்றை சம்பாதித்துக் கொண்டேன். ஈவு இரக்கமின்றி நடந்து கொள்வதாய் பேசினார்கள். நான் ஏமாற்றிவிட்டதாக புலம்பினான் என் சாத்தான். இஷ்டத்திற்கு எங்கள் பிரிவின் காரணங்களை கற்பனையாக உருவாக்கி பரவவிட்டார்கள். ஆனால் தவறாது எல்லாருடைய காரணங்களிலும் எங்கள் காதல் பிரிவின் காரண கர்த்தாவாக நானேயிருந்தேன்.

கொடூரமான சதிகாரி :

கொடூரமான சதிகாரி :

இவர்கள் யாருக்குமே தெரியாது நான் ஏமாற்றப்பட்டதன் வலி. இவர்கள் யாருக்குமே புரியாது இயலாமையை மறைக்க நான் போட்டுக் கொள்ளும் முகமுடி இதுவென்று.

என்ன செய்ய.... தாடியை வளர்த்துக் கொண்டு கையில் பாட்டிலுடனும் அடிடீ அவன... உதடீ அவன... விட்றீ அவன என்று தோழிகளுடன் சேர்ந்து பாட முடியாது . இந்த பசங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடீன்னு மறந்தும் பாடிடக்கூடாது.

இவர்களுக்கு கொடூரமான சதிகாரியாக இருப்பது தான் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What does the girl do after her breakup

What does the girl do after her breakup
Story first published: Monday, August 28, 2017, 15:52 [IST]
Subscribe Newsletter