பார்ன் எப்படி என் முதல் அனுபவத்தை அழித்தது? - 7 பேர் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்!

Posted By: John
Subscribe to Boldsky
How Porn Affected My First Time Intercourse - 7 Real Life Stories!

நீங்கள் பார்ன் வீடியோக்கள் பார்க்கும் நபரா? ஆம்! என்றால்... அதில் தவறில்லை. ஆனால், பார்ன் வீடியோக்களில் காண்பிப்பது போல தான் உண்மையான தாம்பத்தியம் இருக்கும் என நீங்கள் கருதினால்... அது மிகப்பெரிய தவறு.

குறும்படம், நாடகங்கள், திரைப்படம் போல பார்ன் வீடியோக்கள் என்பதும் ஒரு தயாரிப்பு தான். அதிலும், நடிகர்கள் எடிட்டர்கள், கேமரா மேன், இயக்குனர் என அனைவரும் பணிப்புரிகிறார்கள்.

சினிமாவில் காண்பிப்பது போன்ற காதல் காட்சிகள் நிஜ வாழ்க்கையில் நடக்க வாய்ப்புகள் உண்டா? கண்பார்வை அற்றவர்களை சாலை கடக்க உதவினாலோ, பத்து ரூபாய் பேனா வாங்கி அவர்களுக்கு உதவினாலோ, கோவிலில் காணும் பெண்கள் மீது காதல் வருவதும், அவர்களை கரம்பிடிப்பதும் எப்படி நிஜ வாழ்வில் சாத்தியமாகும்? இதுப் போல தான் பார்ன் வீடியோக்களும். அதில் வருவது போலவே உடலுறவு அமையாது.

பார்ன் வீடியோக்கள் கண்டு, அவற்றை போலவே எதிர்பார்த்து முதல் முறையில் மோசமான அனுபவத்தை கண்ட சிலர் பகிர்ந்துள்ள உண்மை சம்பவங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண்கள் உணர்ச்சி!

பெண்கள் உணர்ச்சி!

"பெரும்பாலும் பார்ன் வீடியோக்களில் காண்பிக்கப்படும் காட்சிகளில், பெண்கள் மிக எளிதாக இன்பம் காண்பதாக தான் இருக்கும். சுய இன்பம் காண்பதாக இருந்தாலும் கூட பெண்கள் மிக எளிதில் எட்டிவிடுவது போலவே அந்த வீடியோக்களில் காண்பிக்கப்படும். ஆனால், உண்மை வாழ்க்கையில் அப்படி அல்ல. பெண்கள் உடலுறவு , ஃபோர்ப்ளே, சுய இன்பம் என எத்தகைய உடல் சார்ந்த இன்பத்தை எட்டவும் சற்று நேரமாகும். சில சமயங்களில் உடலுறவில் ஈடுபட்ட பிறகும் கூட பெண்கள் இன்ப நிலை எட்டாமல் போக வாய்ப்புகள் உண்டு.

என் துணைவி முதல் முறை உடலுறவில் ஈடுபட்ட போது, இன்ப நிலை எட்டவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் பார்த்த பார்ன் வீடியோக்களை அதுவரை உண்மை என்றே நம்பி வந்தேன்."

- முதல் நபரின் அனுபவம்

விந்து!

விந்து!

"பெரும்பாலான பார்ன் வீடியோக்களில் உடலுறவின் இறுதிக் கட்டத்தில் பெண்கள் தங்கள் துணை விந்தை உடல் மீது பாய்ச்சுவதை ஏற்பதாக காண்பிக்கப்படும். ஆனால், உண்மை அதுவல்ல. எனது முதல் அனுபவத்தின் போது, நான் இந்த செயலை செய்த போது, என் துணை முற்றிலும் அருவருப்புக்குள்ளானார். இது என் மீதான அவரது பார்வையை மிக மோசமாக மாற்றியது. எனவே, பார்ன் வீடியோக்கள் கண்டு, பெண்களுக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது என ஒரு முடிவுக்கு வர வேண்டாம்."

- இரண்டாம் நபரின் அனுபவம்

உடல் அமைப்பு

உடல் அமைப்பு

"பார்ன் வீடியோக்களில் தோன்றும் ஆண், பெண் என இருபாலினரும் கச்சிதமான உடல் அமைப்புடன் தான் இருப்பார்கள். சிக்ஸ் பேக் உடற்கட்டு, விரிந்த தோள்கள், மார்பகங்கள், பின்னழகு என அனைத்தும் காண கவர்ச்சியாக இருக்கும். ஆனால், உண்மை நிலை அப்படி இருக்காது. இந்த எதிர்பார்ப்பு உங்கள் முதல் முறை அனுபவத்தை எப்படி வேண்டுமானாலும் பாதிக்கலாம். என் துணையின் ஆண்குறி பார்ன் வீடியோக்களில் காண்பது போல இல்லை என்பது முதல் முறை எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிறகு, தான் பார்ன் வெறும் கவர்ச்சிக்குரியது. அதற்கும் உண்மை வாழ்க்கைக்கும் சம்மந்தம் இல்லை என்பதை புரிந்துக் கொண்டேன்."

- மூன்றாம் நபரின் அனுபவம்.

ஃபோர்ப்ளே

ஃபோர்ப்ளே

"பார்ன் வீடியோக்கள் என்பது ஒருவகையான அடல்ட் கேளிக்கை தயாரிப்பு. அதில் எடிட்டிங் இருக்கிறது., நடிகர்கள் நிறைய நடிப்பார்கள். பார்ன் வீடியோ பார்க்கும் பெரும்பாலானோர் செய்யும் தவறு யாதெனில், அந்த வீடியோவில் நடக்கும் யாவும் உண்மை, அப்படியாக தான் உண்மை உடலுறவும் இருக்கும் என கருதுவதே. பார்ன் வீடியோக்களில் ஃபோர்ப்ளே குறைவாக இருக்கும். அவர்கள் லியூப்ரிகன்ட் அதிகம் பயன்படுத்த மாட்டார்கள். ஆனால், உண்மையில் இந்த இரண்டுமே அவசியம். இதை நிஜத்தில் மட்டுமே உணர முடியும்."

- நான்காம் நபரின் அனுபவம்

சப்தம்!

சப்தம்!

"ஒரு பெண் இன்ப நிலை எட்டினால், உச்சக்கட்ட நிலையை அடையும் போது ஒருவகையான சப்தம் இடுவாள் என்பது பார்ன் வீடியோக்கள் கூறும் கூற்று. ஆனால், உண்மை அதுவல்ல. மிக சில சமயங்களில் மட்டுமே (சில) பெண்கள் அப்படி சப்தம் இடுவார்கள். பெரும்பாலும், பெண்கள் அப்படி சப்தம் இட விரும்புவதில்லை."

- ஐந்தாம் நபரின் அனுபவம்

அந்தரங்கம்!

அந்தரங்கம்!

"பார்ன் வீடியோக்களில் வரும் பெண்களின் அந்தரங்க பகுதி முற்றிலும் ஷேவ் செய்யப்பட்டிருக்கும். அதை தான் ஆண்கள் பலர் அழகு என்றும் எண்ணுகிறார்கள். அந்தரங்க பகுதிகள் முடி இருப்பது ஆண், பெண் இருவருக்கும் பொது. அதை ஷேவ் செய்வது என்பது அவரவர் விருப்பம். முதல் முறையில் என் துணையின் அந்தரங்க பாகத்தில் முடியை கண்டு நான் அருவருப்பாக எண்ணினேன். ஆனால், அறிவியல் ஆய்வுகளே அந்தரங்க பகுதியில் முடியை முற்றிலும் ஷேவ் செய்யக் கூடாது என கூறுகிறது.

எனது அந்த ரியாக்ஷன் என் துணையை மன அழுத்தத்திற்கு உண்டாக்கியது. இது என் வாழ்வில் நடந்த மோசமான தாக்கமாகும்."

- ஆறாம் நபரின் அனுபவம்

தாம்பத்திய நிலை

தாம்பத்திய நிலை

"பார்ன் வீடியோக்களில் உடலுறவில் ஈடுபடும் ஆண், பெண்களுக்கு எல்லா நிலைகளும் மிக எளிதாக ஈடுபடுவது போல காண்பிப்பார்கள். நாமும், இவை எல்லாம் மிக எளிதானது தான் போல என கருதுவோம். ஆனால், உண்மை அதுவல்ல. நாம் எளிது என் கருதும் ஒருசில அடிப்படை நிலைகளும் கூட கடினமானது தான். பார்ன் வீடியோக்களை கண்டு கடினமான நிலையை முதல் முறை முயற்சி செய்தி, தோல்வி அடைந்தது என் வாழ்வில் நடந்த தாக்கம்."

- ஏழாம் நபரின் அனுபவம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Porn Affected My First Time Intercourse - 7 Real Life Stories!

How Porn Affected My First Time Intercourse - 7 Real Life Stories!